Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கற்பிழந்த சட்டம் 

கற்பிழந்த சட்டம்

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பட்டம் பெற்று வேலைக்காய்க்
காத்து நிற்பவர்களை
திட்டமிட்டு மட்டந்தட்டும்
பசையொட்டிய பதவிக் கதிரையில்
பணம்தின்னிக் கழுகுகள் கூட்டம்

 

பணத்தின் தரம் பார்க்கும்
பரிவற்ற பாவிகளால்
இலட்சியப் பட்டமும்
இலட்சங்கள் இன்றி
அலட்சியம் செய்யப்படும்

 

சட்ட அதிகாரிகளால் மேய்க்கப்படும்
பட்டிகளான சிலரால்
சலுகைகளும் சாக்கடையில்
நாள்ப்பட்டப் பாவங்களாய்
நாறிக் கிடக்கின்றன

 

சட்டப் பெண்ணின்
கள்ளக் காதலனாய்க்
காவல்துறையும் கறைபடிய
ஆக்கிரமிப்பின் அதிகார வேட்கையில்
அரக்கனை எதிர்க்கவும் பலமில்லை

 

பலிவேட்கை தீர்க்கும்
கலிகாலமிதில்
கற்றுக் கொண்ட நாகரிகத்தால்
கெட்டுப் போனோரும்
கூலிப்படையாகளாய்க் கூட்டமாய்
செத்து மடிகின்றனர்

நிலாக்கவி நதீரா முபீன்
புத்தளம் (புளிச்சாக்குளம்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

பட்டம் பெற்று வேலைக்காய்க் காத்து நிற்பவர்களை திட்டமிட்டு மட்டந்தட்டும் பசையொட்டிய பதவிக் கதிரையில் பணம்தின்னிக் கழுகுகள் கூட்டம்   பணத்தின் தரம் பார்க்கும் பரிவற்ற பாவிகளால் இலட்சியப் பட்டமும் இலட்சங்கள் இன்றி அலட்சியம் செய்யப்படும்…

பட்டம் பெற்று வேலைக்காய்க் காத்து நிற்பவர்களை திட்டமிட்டு மட்டந்தட்டும் பசையொட்டிய பதவிக் கதிரையில் பணம்தின்னிக் கழுகுகள் கூட்டம்   பணத்தின் தரம் பார்க்கும் பரிவற்ற பாவிகளால் இலட்சியப் பட்டமும் இலட்சங்கள் இன்றி அலட்சியம் செய்யப்படும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *