Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கல்லூரியும் நானும்... 

கல்லூரியும் நானும்…

  • 19

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கதையல்ல நிஜம் இவை என் கல்லூரியில் நான் காதல் கொண்ட நாட்களின் தொகுப்பு. 2016ல் உயர்தரத்தை கடந்த நானோ இறையை இறைஞ்சாத நாட்களில்லை இறைவனின கிருபையால் பல்கலைக்கழக நுழைவு எனக்கும் இலகுவாக கிடைத்தது. ஆனால் ஏன் கிடைத்தது என நான் ஏங்கித்தவித்த நாட்களோ அதிகம் கல்வியின் வாசனை என்னை விட்டும் விலகிச் சென்ற பின்னரே கலைக்கூடம் என்னை அழைத்தது.

சுமார் இரண்டு வருடங்களின் பின் புனிதமிகுந்த ரமலானின் பல பல கனவுகளை சுமந்து காலடி பதித்த என்னை அமோகமாக வரவேற்றது சீனியரின் கசப்பு சாக்லேட். அன்று முதல் ஆரம்பமானது வாழ்வின் கறுப்பு நாட்கள் ஆனால் இன்று நினைத்தால் கண்ணீர் வெளிவரும் அளவிற்கு சிரிப்பை உதிர்கின்றன எனது உதடுகள்.

மொட்டை பர்தாவும் பொக்கெட் வைத்த அபாயாவும் ரம்பா ஸ்லீப்பருமாய் வலம் வந்த நாட்களை என் வாழ்வில் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. முதல் வாரம் கலைச்சுற்றூலா மகிழ்வுடன் என் நண்பர்களுடன் மட்டு நகரத்தை சுற்றுகையில் என் மனதும் மட்டற்ற மகிழ்வடைந்தது உண்மையே. உணவே வாழ்வென வாழும் எமக்கு மெயின் கெண்டீனின் அனுமதி மறுக்கப்பட்ட அநீதியை எங்கு போய் சொல்வேனென என் மனது அங்கலாய்தது ஒரு தனிக்கதை.

பாடசாலைகளில் ஆண்துனைகளை நாடாது பழகிக் கொண்ட எனக்கு ஆரம்பத்தில் உங்களுடன் பழகுவதில் ஏற்பட்ட தவிப்பை என்னவென்று சொல்வேன் பயத்தை விழுங்கி பேச வந்த தருணங்கள். அப்பப்பா இன்று நினைத்தாலும் ஏதோ இமயத்தை வென்றது போல் ஒரு உணார்வு உள்மனம் எங்கும். மயங்கி விழுந்த தோழியை சங்கடம் பார்காது மருத்துவரிடம் அழைத்துச் சென்ற நீங்கள் அனைவரும் இன்று என் நண்பர்கள் இது இறை கிருபை அல்ஹம்துலில்லாஹ்.

விடுதிகளே வாழ்க்கை ஆகிப்போன காலங்களும் என் கல்லூரி பக்கத்தில் உள்ளன. பிறந்தநாள் கொண்டாட்டம், உணவுத்திருவிழா என நான் களியாட்டம் எடுத்த நாட்கள் அதிகம். பாடசாலை காலத்தில் ஒரு ப்ராஜ்ஜக்ட் செய்ய மூன்று வருடம் எடுத்துக்கொண்ட எனக்கு நாளொரு ப்ரஜக்ட்டும் பொழுதொரு அசைமன்டும் தந்த கொடுமையை என்னவென்று சொல்ல.

பிரஸன்டெசேன் எனும் பெயரில் அனைவர் முன்னிலையிலும் சோளக்காட்டு பொம்மை போல் நின்ற நாட்களும் ஏராளம். செமஸ்டர்,மிட் எக்ஸாம் என தலையை உடைத்து படித்து கிழித்து புரியாத சிங்களத்துடன் நான் புரிந்த யுத்தமும் ஒரு மூன்றாம் உலக யுத்தமே. கல்லூரி ஒரு மாயவலை அதை தினமும் என் கண்ணால் காண்கிறேன்.

கால ஓட்டங்கள் விரைவானது இதோ முதல் வருடத்தை கடந்து விட்டோம் இன்று ஒன்றாக உள்ளோம் இன்னும் நான்கு வருடங்களின் பின் சில பல மூலைகளில் இருக்கும் நாட்களே சொந்தமும் சொர்கமும். முடிந்தளவு அன்பினை கொடுத்து அன்பினை பெறுவோம்…..

இவள் உங்கள் தோழி
பானு பாத்திமா
வௌியீடு :வியூகம் வெளியீட்டு மையம்

கதையல்ல நிஜம் இவை என் கல்லூரியில் நான் காதல் கொண்ட நாட்களின் தொகுப்பு. 2016ல் உயர்தரத்தை கடந்த நானோ இறையை இறைஞ்சாத நாட்களில்லை இறைவனின கிருபையால் பல்கலைக்கழக நுழைவு எனக்கும் இலகுவாக கிடைத்தது. ஆனால்…

கதையல்ல நிஜம் இவை என் கல்லூரியில் நான் காதல் கொண்ட நாட்களின் தொகுப்பு. 2016ல் உயர்தரத்தை கடந்த நானோ இறையை இறைஞ்சாத நாட்களில்லை இறைவனின கிருபையால் பல்கலைக்கழக நுழைவு எனக்கும் இலகுவாக கிடைத்தது. ஆனால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *