Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கல்விசார் தொழிற்சங்கப்போராட்டங்களும் ஆசிரியர் வேலைபகிஷ்கரிப்பும் 

கல்விசார் தொழிற்சங்கப்போராட்டங்களும் ஆசிரியர் வேலைபகிஷ்கரிப்பும்

  • 16

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பின்னோக்கியதான ஒரு பார்வை

கடந்த மாதம் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நாடு தழுவிய ரீதியாக ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு தமது பக்கம் உள்ள நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர். நியாயமாக நோக்காத ஒருசிலர் முண்டியடித்துக்கொண்டு ஒட்டு மொத்த பழியையும் ஆசிரியர்கள் மீது திணித்து முதலைக்கண்ணீர் வடித்தனர்.

ஆசிரியர் தரப்பு நியாயங்களை ஒவ்வொன்றாக உற்றுநோக்கினால் அவர்கள் தமது பணியில் மன நிறைவை வெளிக்கொணர்ந்து விளைதிறன் வினைதிறன் சகிதம் பணியாற்ற முடியாதளவு நடைமுறை சிக்கல்களை அன்றாடம் சந்திப்பது அரசுக்கும் சமூகத்துக்கும் உணர்த்தப்படவேண்டிய தேவை உள்ளது.

போதிய வசதிகள் இல்லாமை

ஆசிரியர்கள் மனமுவந்து விரும்பி பணியாற்றும்படியான பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளற்ற சிறிய வறிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை சமூகம் கண்டுகொள்வதில்லை.

போக்குவரத்தும் இடமாற்றங்களும்

முறையற்ற நியமனங்கள் மூலம் மிகவும் தொலைதூரம் இருந்து பாடசாலைக்கு வந்து செல்லவேண்டிய அவலம் தொடர்ந்தும் உள்ளது.

தேசிய மட்டத்தில் அரசுக்கு பெருத்த தலையிடியாக இது உள்ளது

அதிகமானவர்கள் திருமணம் முடிக்காத இளம் பெண்கள் என்பதால் வசிப்பிடத்தை விட்டு உறவுகளை விட்டு அன்றாடம் வரவேண்டிய நிலமை

வயது முதிர்ந்தவர்கள் நோய்மை இயலாமை சகிதம் முறையான இடமாற்றம் கிடைக்காமல் பரிதவிக்கும் வலிநிறைந்த சூழ்நிலை

பயணத்தில் அதிக நேரவளம் விரயமாவது, மேலதிக பணவிரயம், உணவுட்கொள்வதில் ஒழுங்கீனம், தத்தமது பிள்ளைகளை பராமரிப்பதில் கற்பித்தலில் வழிகாட்டுவதில் ஒழுங்கீனம், குடும்ப பொறுப்புக்களை செய்யும் நிலை இல்லாமல் போனமை, ஊக்குவிப்புகள் பதவியுயர்வுகள் உயர்கல்வி வாய்ப்புக்கள் கிடைக்காமல் போவது, பெற்றோர் தரப்பிலிருந்து வரும் அழுத்தம், உள்ளக வெளி நிர்வாக தரப்பிலிருந்து வரும் தொடரான அழுத்தம், மனவிரக்தி, பதகளிப்பு இன்னோரன்ன பிரச்சினைகள் தான் ஆசிரியர்கள் விருப்பத்தோடு வகுப்பறைக்குள் நுழைவதற்கான தடைகளாக உள்ளன.

இவற்றை முடிந்த அளவு தணித்து மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி விடும்போது, கணிசமான ஆரோக்கியமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இவை புறக்கணிக்கப்பட்டு கிடப்பில் வீசப்பட்டால்..ஆசிரியர்கள் காட்டவேண்டிய Perfect performance ஐ மாணவர்கள் பெற்றுக்கொள்வதும் அவர்களது Perfect personality development சாத்தியமாவதும் பூரண நிரந்தர நடத்தை மாற்றத்தை கல்விக்கூடாக ஏற்படுத்துவதும் சிரமசாத்தியமானதாகவே அமையும்

Bisthamy Ahamed
வியூகம் வெளியீட்டு மையம்

பின்னோக்கியதான ஒரு பார்வை கடந்த மாதம் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நாடு தழுவிய ரீதியாக ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு தமது பக்கம் உள்ள நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர். நியாயமாக நோக்காத ஒருசிலர் முண்டியடித்துக்கொண்டு ஒட்டு…

பின்னோக்கியதான ஒரு பார்வை கடந்த மாதம் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நாடு தழுவிய ரீதியாக ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு தமது பக்கம் உள்ள நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர். நியாயமாக நோக்காத ஒருசிலர் முண்டியடித்துக்கொண்டு ஒட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *