Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காதலிப்போரிடம் ஒரு சில நிமிடங்கள் 

காதலிப்போரிடம் ஒரு சில நிமிடங்கள்

  • 28

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

காதல்,காதலி,காதலன்,காதலிப்பு என்ற சொற்கள் ஒரே இனத்தைச் சேர்ந்த சொற்களாக காணப்பட்டாலும் அதன் பிரயோகம் இடங்களைப் பொறுத்து வேறுபடுகின்றது. என்பதை நாம் அறிவோம்.

இஸ்லாம் இந்த காதல் என்ற சொல்லை எவ்வாறான ஓர் நிலையில் வைத்துப் பார்க்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் இந்த படத்திற்கான இடம் என்ன என்பதை நாம் அறிவோம். என்றாலும் எமது துரதிஷ்டவசம் நாம் இன்றும் அதை தவறான கருத்தில் தான் பார்த்து வருகின்றோம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தின் பார்வையில் காதலுக்கான இடம் என்ன? என்ன என்பதை நாம் முதலில் பார்க்கலாம்.

அல்லாஹுத்தஆலா அவனது அடியானின் மீதும் அவனது படைப்பினங்கள் மீதும் எந்த அளவுக்கு அன்புடன் இருக்கின்றான் என்பதை நாம் அல் குர்ஆன், ஹதீஸ்களின் நிழலில் தாராளமாக விளங்கிக் கொள்ள முடியும்.

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப் பெரும் கருணை காட்டுபவன். நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன் : 2:143)

நபி ஸல் அவர்கள் காதலைப் பற்றி கூறும் போது இவ்வாறு கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4655))

நான் அல்லாஹ்வின் தூதரிடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் கடந்து சென்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரே (கடந்து செல்லும்) இவரை நான் நேசிக்கிறேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் இதை அவரிடம் தெரியப்படுத்தினாயா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் எழுந்து சென்று அவருக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள். அவர் அந்த நண்பரிடம் எழுந்து சென்று இன்னாரே அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்விற்காக நான் உங்களை விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு அவர் எவனுக்காக என்னை நீங்கள் நேசிக்கிறீர்களோ அவன் உங்களை நேசிப்பானாக என்று கூறினார். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: அஹ்மத் (11980))

நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளின் மூலமாகவும் இஸ்லாம் அங்கீகரித்த காதல் எது இஸ்லாம் அங்கீகரிக்காத காதல் எது என்பதை எமக்கு தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

யூஸுஃபின் மீது (ஏற்பட்டு)ள்ள என்னுடைய துக்கமே! என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார். கவலையினால் (அழுதழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்துவிட்டன. (எனினும்) அவர்(துக்கத்தை) மென்று விழுங்கிக் கொள்பவராக இருந்தார். (அல்குர்ஆன்: 12:83,84)

மூஸா அலைஹிவஸல்லாம் அவர்களின் தாயாருக்கும் தான் பெற்றெடுத்த அன்பு மகனை பிரியும் சூல்நிலைகளை அல்லாஹு ரப்புல் ஆலமீன் திருகுர்ஆன் அத்தியாயம் 28. அல்கஸஸ் (பார்வையிடவும்) தெளிவு படுத்தும்போது:

இன்னும் மூஸாவுடைய தாய்க்கு நாம் வஹி அறிவித்தோம்; “அதற்கு (உன்னுடைய அக்குழந்தைக்கு) நீ பாலூட்டுவாயாக; பிறகு அ(க்குழந்)தையைப் பற்றி நீ பயந்தால் அதனை ஆற்றில் நீ போட்டுவிடு; (தண்ணீரில் மூழ்கிவிடுமோ என்று) நீ பயப்பட வேண்டாம்; (அதைப்பிரிந்திருப்பது பற்றி) கவலைப்படவும் வேண்டாம்: நிச்சயமாக நாம் அவரை உன்பக்கமே திருப்புவோம்: இன்னும் அவரை, (நம்முடைய) தூதர்களில் ஒருவராக ஆக்குவோம். (அல்குர்ஆன் 28:7)

மனிதன் அல்லாதவைகளின் மீதான காதல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும் இஸ்லாமிய வரலாற்றில் பல சம்பவங்கள் காணப்படுகின்றன.

இஸ்லாம் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டச் சொல்கிறது. “பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்”. (திர்மிதி)

தாகத்தோடு இருந்த நாயொன்றுக்கு நீர் புகட்டியதற்காக முன் சென்ற சமூகத்தில் ஒருவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது “கால்நடைகளுக்கு உதவியதற்கும் நற் கூலி உண்டா? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு உயிருள்ள இதயமுள்ள எதற்கு உதவி செய்தாலும் நன்மை உண்டு எனக் கூறினார்கள்” (புஹாரி: 2303)

“ஒரு பெண் பூனையொன்றைக் கட்டிப் போட்டு தான் அதற்கு உணவு கொடுக்காமலும் பூனை தானாகத் தன் உணவைத் தேடிக் கொள்ள அவிழ்த்து விடாமலும் இருந்தாள். அந்தப் பூனை செத்துவிட்டது. இதைச் செய்த பெண் நரகம் நுழைவாள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 2365)

இவ்வாறான ஏராளமான நபிமொழிகள் உயிரினங்களிடம் அன்பும், பரிவும் காட்டுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இது இவ்வாறு இருக்க இன்று மனிதர்களின் காதல் எவ்வாறு இருக்கின்றது. என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . நாம் இன்று செய்கின்ற காதல் இஸ்லாமிய காதலா அல்லது அதற்கு மாற்றமானதா என்பதனை ஓர் கனம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.இது காலத்தின் கட்டாயத்தில் உள்ள ஓர் விடயமாகும்.

ஓர் ஆண் அல்லது ஓர் பெண்ணுக்கு ஒருவர் மீது காதல் வந்து விட்டது இதனை இஸ்லாம் எங்கும் தடை செய்ய வில்லை மாறாக இதனை எவ்வாறு இஸ்லாமிய வரையறைக்குள் நாம் செய்து கொள்ள வேண்டும் என்பதை எமக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

அவ்வாறு ஒருவருக்கு ஒருவர் மீது காதல் ஏற்பட்டால் அழகிய முறையில் அதனை அவர்களுடைய பெற்றோர்களை அனுகி அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய வழிகாட்டலாகும். இன்று எம்மில் எத்தனை பேர் இந்த அழகிய முறையை சரியாக செய்கின்றோம் என்பதனை நாம் எமக்குள் கேட்டுப் பார்க்கலாம். இந்த அழகிய முறைக்கு அப்பால் செல்கின்ற பொழுது இன்றைய இளம் சமூகம் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர. இதனை நாம் அனைவரும் அறிவோம்.

இன்றைய இளம் இளைஞர்கள், யுவதிகள் பல வருடங்களாக காதலிக்கிறார் கடைசியில் கல்யாண பேச்சு வரும் போது அவர்களுடைய சுயரூபத்தை வெளிக்காட்டுகின்றார்கள். இதனால் இன்று பல பிரச்சனைகளுக்கு முகம் கெடுக்க கூடிய ஓர் நிலைக்கு எமது சமூகம் தள்ளப்பட்டு வருகின்றது என்பதை நாம் அறிவோம்.

கடைசி நேரத்தில் பெண் வீட்டிருக்கு காதல் பிடிக்காது, காதலித்தால் எமது வீட்டில் திருமணம் முடித்து தரமாட்டார்கள் என்று கூறும் பெண்களும் வசதி வாய்ப்புகளை தேடி ஓடும் ஆண்களும் இந்த விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால் மோசடி செய்வான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (33))

சிவகார்த்திகேயன் கீர்த்திக்கு சினிமாவில் செல்வதைப்போலும். கடைசி பென்ஞ் கார்த்தியில் பரத் செல்வதைத் போலும் கடைசி நேரத்தில் வந்தால் அது தான் நடக்கும் அது சினிமாவாக இருந்தாலும் வசனங்களில் உண்மைத் தன்மை உள்ளது. அதை விட காதலித்து கடைசி தருணத்தில் ஒன்றும் நடக்காதது போன்று இருப்பவர்களுக்கு பல படிப்பினைகளும் உள்ளது.

கடைசி நேரத்தில் இவ்வாறான நிலைகள் ஏற்படும் போது அதிகமான தற்கொலைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், போதை வஸ்து பாவனை, மன அழுத்தம் கூடிய நோயாளிகள், விவாகரத்துக்கள் போன்ற கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறான விளைவுகளால் எம் சமூகம் பின் தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே, இந்த பாதக செயல்களில் இருந்து எமது சமூகத்தை மீட்பது இன்றைய இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பெற்றோர்களின் கையில் உள்ளது.

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய இன்றைய இளைஞர், யுவதிகளே உங்களுக்கான எனது வேண்டுகோள்.

நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் சரி உங்களுக்கு காதல் என்ற ஒன்று ஏற்பட்டால் உங்கள் தாய் அல்லது தந்தைக்கு அதனை எத்தி வைத்து அழகிய முறையில் அதனை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய பெற்றோர்களே உங்களுக்கான எனது வேண்டுகோள்.

உமது பிள்ளைகள் காதல் விடயத்தில் அதிக அக்கறை உடையவராக நீங்கள் மாறுங்கள். உங்களுடை ஆண் அல்லது பெண் பிள்ளைகள் உங்களிடம் இதைப்பற்றி அறியத் தந்தால் அது அவர்களுக்கு பொருத்தமானதாக இருந்தால் இஸ்லாம் கூறும் அழகிய முறையில் அதனை நிறைவேற்றுங்கள். இல்லை என்றால் அழகிய முறையில் அவர்களுக்கு அதனை எடுத்து காட்டுங்கள் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இதனால் நன்மை அடைவீர்கள்.

இஸ்லாம் எதனை ஆகுமாக்கியுள்ளதோ அதில் மனித குலத்திற்கு பல நன்மைகள் உள்ளன. அதைப் போல் இஸ்லாம் எதனை தடை செய்துள்ளதோ அவையும் எமது நலனுக்காகவே என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இஸ்லாம் கூறும் அழகிய முன்மாதிரிகளை நடைமுறைப் படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவோமாக.

NAFEES NALEER
IRFANI
SEUSL

காதல்,காதலி,காதலன்,காதலிப்பு என்ற சொற்கள் ஒரே இனத்தைச் சேர்ந்த சொற்களாக காணப்பட்டாலும் அதன் பிரயோகம் இடங்களைப் பொறுத்து வேறுபடுகின்றது. என்பதை நாம் அறிவோம். இஸ்லாம் இந்த காதல் என்ற சொல்லை எவ்வாறான ஓர் நிலையில் வைத்துப்…

காதல்,காதலி,காதலன்,காதலிப்பு என்ற சொற்கள் ஒரே இனத்தைச் சேர்ந்த சொற்களாக காணப்பட்டாலும் அதன் பிரயோகம் இடங்களைப் பொறுத்து வேறுபடுகின்றது. என்பதை நாம் அறிவோம். இஸ்லாம் இந்த காதல் என்ற சொல்லை எவ்வாறான ஓர் நிலையில் வைத்துப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *