Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காலியாய் கிடக்கும் அந்த கல்லாப்பெட்டி.... (ஒரு நவரசப் புரிதல்) 

காலியாய் கிடக்கும் அந்த கல்லாப்பெட்டி…. (ஒரு நவரசப் புரிதல்)

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நகரத்து கடையோரம் நீள் பயணத்தின் தொடர்முயற்சி ஒரு தொலைபேசி இல்லை இல்லை. அது திறன்பேசி தொடர்கடையோரமாய் போய் சேர்ந்தது. தன் புதல்வனின் புரட்சிகர சாதனைதான் அங்கு கொண்டு சேர்த்ததோ தெரியவில்லை.

ரிச்சர்ட் கா.பொ. உயர் தரப் பரீட்சையில் அதிகூடிய சித்திபெற்று நகரத்தில் முதல் மாணவனாய் திகழ்ந்திருக்கிறான். இந்த நிலை அந்த உடன்படிக்கையின் உச்சத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அது என்னவாக இருக்கும்!

“ரிச்சர்ட் நீ பரீட்சையில் சிறப்பாக சித்தி எய்துவிட்டால் நீ கேட்பதை வாங்கித்தருகிறேன். உனக்கு பிடித்ததைச் சொல்… என்ன பாடுபட்டாவது அதனை பூர்த்திசெய்வேன்.”

இந்த வார்த்தைகளும் அவன் முயற்சியும் கைகூடிய சந்தர்ப்பமே அவன் முதன்மை வெற்றிக்கு புடம் போடுவதாய் அமைந்தது.

தாயைப்போல் ஒரு தெய்வமுமில்லை…. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை…. எனும் பொன் வாக்கை நிறைவேற்ற வேண்டிய நேரம் அது.

ரிச்சர்ட் தன் நண்பர்களுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்தான். தன் நண்பர்களிடம் திறன்பேசிகள் (smart phones) வந்துவிட்டன. என்னிடமும் இல்லாவிட்டால் அவர்கள விட்டும் என்னைத் தூரமாக்கிவிடலாம். எனும் தொனியில், நானும் ஒரு திறன்பேசி வாங்கினால் எனும் எண்ணம் மீண்டும் மீண்டும் அவன் உள்ளத்தை கீறி கல்வெட்டில் செதுக்கப்பட்ட எழுத்துக்களாக பதிந்தன. வெடுக்கென தன் தந்தை ரொபட் டை அனுகி அடித்தளம் போட்டான் ரிச்சர்ட்.

சாமர்த்தியமாக பேசும் திறன் கொண்ட அவன். தான் அடைவுகளை வைத்து பெறுமானம் காணும் திறன் மிக்கவன். ரொபட் தனது புதல்வனை விட யாரோடு பிரியமாக இருக்கபோகிறான். வீட்டிற்கு ஒரே பிள்ளை வேறு. உடனே கொள்வனவுப் பயணம் பட்டணம் வரை பேரூந்தாக சென்றடைந்தது. தான் மட்பாண்டம் செய்து விற்றுவந்த இரு மாதவருமான நோட்டக்களோடு சில்லறைகளும் தாளுமாய் மொத்தம் பத்தாயிரம் ரூபாய் இருக்கும். பிரியங்களை வளர்க்க வேண்டும். அன்பாக இருக்க வேண்டும். உறவு சிறக்க வேண்டும். என்பதற்காக அன்பளிப்புக்களைக் கொடுப்பார்கள். அந்த நோக்கத்தில் தான் ரொபட்டும் தான் புதல்வனை பாராட்டி பரிசாய் புதிய மாடல் திறன்பேசி ஒன்றை வாங்கிக் கொடுத்தான்.

வாங்கிக் கொடுத்த சில நாட்களிலேயே சுதாகரித்துக் கொள்ள முடியாத அளவு நண்பர்களுடன் ரிச்சர்ட் சேர்ந்து ஆன்லைனில் கேம்ஸ் (games) விளையாடுவதும் அரட்டை (chattings) முனகுவதுமாய் கட்டங்கள் தாண்டி கண்டங்கள் கடந்து சென்றன அவன் திறன்பேசி வழியே. சரியாக வீட்டிலே பேசுவது கிடையாது. படிப்பில் கவனமின்மை நிசப்தத்தின் உக்கிரம் முகத்தில் பரவிக்கிடக்க, பீய்ச்சிப்போட்ட கொட்டகைகளாய் திளைத்துப் போயிருந்த ரொபட்டும் அவன் மனைவி ஜூலிசும் துக்கத்தை அப்பிப் போட்டனர். அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் வேறொன்றாகிப் போய்விட்டது அகராதியில்.

Student use Mobile Phone Isolated on the White Background

காலையிலும் மாலையிலும் தவழ்ந்தது அவன் கையில் திறன்பேசி. தலையணையிலும் நடைபயணமுமாக நடைபோட்டது. அவன் கையில் திறன்பேசி. முன்பைப் போன்று ரிச்சர்ட் ரோபட்டோடும் ஜூலிசோடும் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை. மெல்லத்திறந்தது கதவாக நாளும் பொழுதும் தன் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்தான். கொஞ்சம் திறன்பேசியை தள்ளிவைத்து விட்டால் தலைசுற்றுவதாய் உணர்ந்தான். அவ்வளவுக்கு அவனை அதனடியில் முடக்கிப்போட்டிருந்தது திறன்பேசி.

இனமோ… மதமோ… பாலோ… வயதோ… தெரிந்து கொள்ளமுடியாத தூரத்து நபர்களோடு உரையாடுவதும், குறுந்தகவல்களை வினாடிக்கு வினாடி சுண்டுவதையும் அவன் விரல்கள் பழகிக்கொண்டன. இப்போது அவன் முகத்தால் பேசுவதைவிட விரலால் பேசும் புதுப்பழக்கத்தை கற்றுக்கொடுத்திருந்தது அந்த திறன்பேசி. இவையெல்லாம் ரொபட்டின் மனதில் உறைந்துபோன கறை கச்சல்களாக உதிர்ந்துபோகின.

ஒரு கனம் யோசித்துப்பார்த்தான். “நான் திறன்பேசி வாங்கிக் கொடுத்தது தவறோ என் செல்ல மகன் ரிச்சர்டை என்னை விட்டும் தூரமாக்கிவிட்டதே…” என்று கண்கள் பிதுங்கிப்போன பார்வையோடும்…. கசிந்து போயிருந்த கண்களோடும்…. இரட்டை கரத்தினால் அவன் செலவு செய்த பத்தாயிரம் ரூபாய் இருந்த கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தான். அப்போது அது வெறுமையாகிக் கிடந்து மௌனத்தால் விசனம் பாடிக்கொண்டிருந்தது.

சல்ஜி லபீர்

நகரத்து கடையோரம் நீள் பயணத்தின் தொடர்முயற்சி ஒரு தொலைபேசி இல்லை இல்லை. அது திறன்பேசி தொடர்கடையோரமாய் போய் சேர்ந்தது. தன் புதல்வனின் புரட்சிகர சாதனைதான் அங்கு கொண்டு சேர்த்ததோ தெரியவில்லை. ரிச்சர்ட் கா.பொ. உயர்…

நகரத்து கடையோரம் நீள் பயணத்தின் தொடர்முயற்சி ஒரு தொலைபேசி இல்லை இல்லை. அது திறன்பேசி தொடர்கடையோரமாய் போய் சேர்ந்தது. தன் புதல்வனின் புரட்சிகர சாதனைதான் அங்கு கொண்டு சேர்த்ததோ தெரியவில்லை. ரிச்சர்ட் கா.பொ. உயர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *