Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 24 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 24

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“நாம நினைப்பது போல் எல்லாமே நடந்துகிட்டு இருக்கு….. ஒரு வேளை நமக்கு கிடைச்ச அந்த தகவல் மட்டும் உண்மை என்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பாடியை நாம கண்டுபிடிக்கணும்…”என்றான் மித்ரத் தனது ஆட்களிடம்.

“தலைவரே!  அதுக்கான ஏற்பாடுகள் தான் நடந்து கொண்டே இருக்கே… பாவம் அந்த ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் என்ன பண்ணுறோம் என்றே தெரியாது நமக்கு உதவி பண்ணிக்கொண்டு இருக்காங்க…”என்றான் ஒருவன்.

“ஆமா தலைவரே… காட்டில் இறந்து கிடந்த சிங்கத்தை வெச்சி தானே நாம அதை உறுதிப்படுத்தி கொண்டோம்…”

ஆமா… நம்ம முன்னோரான என்கிடு சாவுக்கு காரணமான அந்த கில்கமேஷால மட்டும் தான் காலங்காலமா வளர்ந்து வந்த நம்ம பரம்பரை சிங்கத்தை தன்னோட வெறுங்கையால கொல்ல முடியும்.

“அப்படி என்னா அவன் இன்னும் சாகல என்னுதானே அர்த்தம்…”என்றான் மித்ரத்.

“அதனால தான் எப்படியோ அது அவனை மோப்பம் பிடிச்சுக்கிட்டு அவ்வளவு தூரம் காட்டுக்குள்ளே போய் இருக்கு..”

“இவ்வளவு நாளும் நம்ம முன்னோரான என்கிடுவுக்கு சொந்தமான அந்த மோதிரம் எங்கன்னு தேடி அலைஞ்சோம்… இத்தாலியில் அது நமக்கு கிடைச்சது… இப்போ அவரை மறுபடியும் உயிர் கொடுத்து கொண்டுவரப்போறோம்.”என்றான் இன்னொருவன்.

“அதுக்கப்பறம்.. இந்த முழு உலகத்தையும் நாம ஆளப்போறோம்..”என்று கூறி பயங்கரமாக சிரித்தான் மித்ரத்.

அதை கேட்டதும் இவ்வளவு நேரம் ஒட்டுக்கேட்டு கொண்டு இருந்த அந்த மர்ம நபர் தடுமாறி கூடாரத்தில் சாய… அதை அறிந்து கொண்ட மித்ரத்தின் ஆட்கள்,

“தலைவரே!..”

“யாரது…. அவன் யாரா இருந்தாலும் பிடிச்சு கொண்டுவாங்க.. நம்ம ரகசியத்தை தெரிஞ்சிக்க விரும்பிய யாரும் உயிரோட இருக்க கூடாது.”என்று சொல்ல

முழுவதும் மாறுவேடத்தில் இருந்த அந்த மர்ம நபர் ஆபத்தை உணர்ந்து அவர்களுக்கு தண்ணி காட்டிவிட்டு அங்கிருந்து மோட்டார் வண்டியில் தப்பித்தான்.

“தலைவரே!  அவன் தப்பிச்சிட்டான்..”

“முட்டாள்களே…. சிட்… யாரோ நம்மள கண்காணிக்கிறாங்க அது யாரென்னு முதலில் தெரிஞ்சிக்கணும்.”என்றான் யோசித்து கொண்டே…

**********

எல்லோரும் மீண்டும் ஒரே அறையில் ஒன்று கூடி இருந்தனர்.

“கிரேட் ஜாப். ராபர்ட், நாங்க நினைச்சி கூட பார்க்கல. இவ்வளவு சீக்கிரமா உன்னை அந்த மித்ரத் நம்புவான்னு..”என்றாள் மீரா.

“நான் மட்டும் என்ன நினைச்சா பார்த்தேன்.. நான் அவன் உயிரை காப்பாற்றினது எனக்கு சாதகமாக போய்ட்டு…”என்றான் தன்னுடைய கையில் இருந்த காயத்தை பார்த்தபடியே..

“ஐயையோ உனக்கு அடிபட்டு இருக்கு…இரு கட்டுபோட்டு விர்றேன்..”என்ற ஜெனி ஃபெஸ்ட் அய்ட் பாக்ஸை எடுக்க சென்றுவிட்டாள்.

அப்போது கில்கமேஷ் ,

“நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்  ராபர்ட்… இவ்வளவு செஞ்சி இருக்காங்க.. இன்னும் எண்ணெல்லாமோ பண்ணவும் தயாரா தான் இருப்பாங்க… அது சரி மோதிரம் பற்றி எதுவுமே சொல்லலியே”என்று கேட்டான்..

“அது வந்து கேகே.. நான் அவனோட கையை பார்த்தேன் …அதுல நீ சொல்றமாதிரி மோதிரம் எதுவும் இல்லையே..”என்னும் போது உள்ளே வந்த ஜெனி.

“என்ன மோதிரம் அவன் கிட்ட இல்லியா?…என்ன சொல்றே.. நான் அதை அவன் கைல பார்த்தேன்…”என்றாள்.

“பதற்றப்படாதே…அது எவ்வளவு முக்கியமான பொருள் என்று நம்மள விட அவனுக்கு தெரியும்.. அதனால பாதுகாப்பா எங்காவது வைத்து இருப்பான்..”என்றான் ராபர்ட்.

“அதை கண்டுபிடிக்க தான் சார் உயிரை பணயம் வைத்து உள்ளே இறங்க போறாரு…”என்றான் ஆர்தர் வேண்டுமென்றே…

“மரமண்ட மரமண்ட ….அவனே எவ்வளவு ரிஸ்க்கான மேட்டரை பண்ணப்போறான்…கூட இருந்து உனக்கு ஒன்னும் ஆகாது என்னு உற்சாக படுத்தாம பேசுற பேச்சை பாரு… மரமண்ட மரமண்ட.. ” என்று மீரா திட்டினாள்.

ஜெனியும்   ராபர்ட்டின் காயத்தை துடைத்து கட்டுப்போட்டாள். அதையே பார்த்து கொண்டிருந்த கில்கமேஷ் கிட்ட அவள்

“என்ன பாக்குறே என்ன பண்ணுறேன்னா… கிட்ட வா சொல்லுறேன்.. “எண்றவள்  ஒரு பிளாஸ்டரை எடுத்து அவன் வாயிலே ஒட்டி விட்டாள்.

கூட்டமே ஒன்றாகி சிரிக்க கில்கமேஷ் பேசமுடியாமல் அதை கழற்ற முயற்சிக்க திடீரென கரண்ட் கட் ஆகி விட்டது.. இருட்டில் யார் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை… ஜெனிக்கு இருட்டு என்றால் பயம் …பயத்தில் எதை பிடித்து கொள்ளுவது என புரியாமல் நன்கு வலுவாக இருந்த கட்டில் காலை பிடித்து கொண்டாள். அந்த இருட்டில் ஒரு கறுப்பு உருவம்  மெழுகுதிரி ஒன்றை கையில் ஏந்தி கொண்டு நடந்துவருவதை எல்லோராலும் பார்க்க முடிந்தது. ஜெனி பயத்தில் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

“ஐயையோ..ஏதோ வருதே.. ஏதோ வருதே.. என்னபிடிச்சிக்க மீரா… மீரா..”என்று கத்தினான் ஆர்தர்..

“டேய் எல்லோரும் கத்தி என்னை வேற பயமுறுத்தாதீங்க டா…”என்றான் ராபர்ட்.

அந்த கறுப்பு உருவம் இவர்கள் இருந்த அறைக்கு வந்து தான் போர்த்தி இருந்த போர்வையை அகற்றி கோர முகத்துடன்

“பப்பா….”என்று கத்த எல்லோரும் சேர்ந்து பயத்தில் கத்த.  சிரித்து கொண்டே முகமூடியை கழற்றி லைட்டை போட்டாள் டிடானியா…

கூடவே இவர்கள் பயந்ததை பார்த்து கலகலவென சிரித்தாள்..

“என்ன நீயா?”

“ஹா ..நானே தான் எப்படி இருந்தது என்னோட ட்ரிக்கு…”என கேட்க ஆர்தர் சிறுபிள்ளை போல அழுது கொண்டே

“ஹீ… இந்த பொண்ணு ரொம்ப மோசம்.. ஒரு நிமிஷம் நான் செத்தே போய் இருப்பேன்.”என்றான்..

“டேய் அழுது மானத்தை வங்காதே டா..” என கூறி மீரா அவனை அடக்கினாள்.

மறுபுறம் யாரோ திணறும் சத்தம் கேட்டதும் எல்லோரும் அந்த பக்கம் திரும்பி பார்த்தனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“நாம நினைப்பது போல் எல்லாமே நடந்துகிட்டு இருக்கு….. ஒரு வேளை நமக்கு கிடைச்ச அந்த தகவல் மட்டும் உண்மை என்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பாடியை நாம கண்டுபிடிக்கணும்…”என்றான் மித்ரத் தனது…

“நாம நினைப்பது போல் எல்லாமே நடந்துகிட்டு இருக்கு….. ஒரு வேளை நமக்கு கிடைச்ச அந்த தகவல் மட்டும் உண்மை என்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பாடியை நாம கண்டுபிடிக்கணும்…”என்றான் மித்ரத் தனது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *