Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 34 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 34

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சற்று நேரம் எதையோ யோசித்து கொண்டிருந்தவன் சட்டென தான் வந்த வேலை நியாபகத்துக்கு வரவே.. தன்பங்கிற்கு அலமாரியை துளைத்து எடுத்து விட்டான். இருந்தபோதும் என்கிடுவின் மோதிரத்தை மட்டும் அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கடைசியாக மித்ரத் சொன்ன அந்த  பென்ட்ரைவை மட்டும் எடுத்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அதற்குள் போன ராபர்ட் இன்னும் வரவில்லை என்றதும் அவனுக்கு போன் பண்ணலாம் என்றெண்ணி வந்திருந்தவர்களுக்கு

“எக்ஸ்கியூஸ் மீ…” என்று விட்டு நம்பர்களை அழுத்தினான். நல்லவேளையாக டயல் பண்ணுவதற்குள் வந்து சேர்ந்தான்.

“சேர்!…”

“ஒஹ்ஹ்.உனக்கு தான் போன் பண்ணலாம் என்று இருந்தேன்… ஏன் வர இவ்வளவு லேட்?” என்று கேட்டு கொண்டே பென்ட்ரைவை பெற்றுக்கொண்டான்… வேகமாக ஓடிவந்ததால் அவனுக்கு வியர்த்து கொட்டி மூச்சு வாங்கியது.

“அது… வந்து சேர்… சேர் ரூம்ல….” அவன் ஏதோ சொல்ல வந்ததை புரிந்து கொண்ட மித்ரத்

“சரி சரி இதோ இவங்களை அனுப்பிட்டு வர்றேன்…”

என்று கூறி அவர்களிடம் பென்ட்ரைவை கொடுத்து  அனுப்பி வைத்தான். அந்த இடைப்பட்ட நேரத்தில் தன்னுடைய செல்போனை கையில் எடுத்து கொண்டான் ராபர்ட். எல்லோரும் போனபிறகு மித்ரத் அவன் கிட்ட வந்தான்.

“இப்போ சொல்லு ஹோட்டல்ல என்னாச்சு… நீ வர ஏன் அவ்வளவு லேட் ஆச்சு?”

சேர் உங்க ரூமிற்கு ஒரு திருடன் வந்திருந்தான்…

என்றதும் மித்ரத் அதிர்ச்சி அடைந்தான்.

“என்ன சொல்றே…”

“ஆமா சேர் பென்ட்ரைவை எடுக்க நான் உள்ளே போனேனா.. அவசரமா  பாத்ரூம் வருதுன்னு வாஷ்ரூம் போய் இருந்தேன்… நான் வர்றதுக்குள்ள யாரோ ஒரு திருடன் ஜன்னல் வழியா உள்ள வர்ரத பார்த்தேன்.. அப்படியே லபக்குன்னு அவனை பிடிக்கலாமுன்னு பார்த்தா. அதுக்குள்ள என்னை அடிச்சிட்டு அவன் தப்பிச்சி போய்ட்டான் சேர்…” என்று சொன்னான் ராபர்ட்…

“நான் உடனே அங்கு நின்ற செக்கூரிட்டி கிட்ட விஷயத்தை சொல்லிட்டு இங்கே வந்துட்டேன்..” என்றான் மீண்டும்…

“வந்தவன் எப்படி இருந்தான்… ஆளை பார்த்தியா.. அவன் முகம் தெரியுமா..?” என்றெல்லாம் மித்ரத் கேள்வி கேட்க அதற்கு ராபர்ட்..

“இல்ல சேர்… அவன் முழுக்க கறுப்பு ட்ரெஸ் போட்டு முகத்தையும் மறைச்சி இருந்தான்..” என்றதும்.

“ஒஹ்ஹ்… அப்போ அன்னிக்கி இங்க வந்தவனா தான் இருக்கணும்” என்று சொல்லவே ராபர்டுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் யாரோ தொடர்ந்து மித்ரத்தை பாலோவ் பண்ணுகிறார்கள் என்று புரிந்து கொண்டான்..

“சேர்…அப்போ நான் கிளம்பலாமா?”

“ஆஹ்ஹ். சாரி.. இன்னிக்கி உன்னை ரொம்பவே வேலை வாங்கிட்டேன்.. பத்தாததற்கு என் ரூமிற்கு வந்த திருடன் கிட்ட வேற அடி வாங்கி இருக்கே… சரி சரி கிளம்பு..”

என்றதும் அவனும் அங்கிருந்து பலத்த யோசனையுடன் வெளியேறினான். அதன்பின்னர் மித்ரத் அவனுடைய காரை எடுத்து கொண்டுவந்து  வெளியே டாக்ஸிக்காக வெயிட் பண்ணி கொண்டிருந்த ராபர்ட்டை அழைத்தான்.

“வண்டியில ஏறு நானே டிராப் பண்ணிர்றேன்..” என்றான்.

“இருக்கட்டும் பரவாயில்லை சேர்..”

“அட.. வா என்னு சொல்லுர்றேன்.” என்று லேசாக அதட்டி காரில் ஏற்றி கொண்டான். உள்ளே ஏறியவனுக்கு அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது. எதற்காக இவ்வளவு பாடு பட்டானோ… தேடி அலைந்தானோ. அந்த என்கிடுவின் மோதிரம் ஸ்டியரிங்கை பிடித்து கொண்டு இருந்த மித்ரத்தின் விரலில் இருந்தது. அவனுக்கு அதன் படத்தை காட்டியது ஜெனி தான். சரியான மோதிரத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவே அது பற்றி தெரியாத ராபர்டுக்கு ஜெனி விளக்கி இருந்தாள். இனி ஒன்றும் செய்ய முடியாதே…. விஷயத்தை நண்பர்களுக்கு சொல்லி ஆலோசனை கேட்போம் என்றெண்ணி பேசாமல் இருந்தான்.. பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சற்று தள்ளி ஒரு பார்க் வழியில் வைத்து

“நான் இங்கேயே இறங்கிகிறேன் சேர்.. பக்கத்தில தான் வீடு..” என்று சொல்லி இறங்கிவிட்டான். அவனும் மேலே பேசாமல் புறப்பட்டு விட்டான்.

கூகிள் மேப்பில் ரூட்டினை எடுத்து கொண்டு  போட்டிருந்த மேற்கோர்ட்டை கழற்றி ஒரு தோளில் போட்டு அதை பிடித்து கொண்டே..  நடந்து வந்தான் ராபர்ட்.

“ஆர்தருக்கு போன் பண்ணி வர்றேன் என்னு சொல்லிடுவோம்..” என்று நினைத்து ஆர்தருக்கு போன் செய்தான்..

“டேய் மச்சான்! எங்கடா இருக்கே…” என்று ஆர்தர் கேட்டான்..

“பக்கத்துல தான் பார்க் வழியா அங்க தான் வந்து கிட்டு இருக்கேன்…”என்றான் ராபர்ட்..

“சீக்கிரம் வந்து சேரு.. இந்த பெரிசு ஏதோ அன்னவுன்ஸ் பண்ண போகுதாம்…நீ பேசுறது கூட சரியா கேக்கல்ல. வைக்கிறேன்..” என்று போனை கட் பண்ணினான். அவனும் போனை கட் பண்ணி விட்டு பார்த்தால் எதிரே யாரோ ஒரு பெண் நடந்து வருவது தெரிந்தது. அதுவும் தனியாக…

*********

“லேடீஸ் எண்ட் ஜென்டில்மேன்… நான் முன்னாடி சொன்னது போலவே முக்கியமான நபரை அறிமுகப்படுத்த போறேன்…” என்று சொன்னதும் எல்லோரும் ஆடுவதை நிறுத்தி விட்டு அவர் அறிமுகப்படுத்தபோகும் ஆள் யாரென பார்க்கும் ஆவலில்  ஒன்று கூடினர். ஆனால் அந்த நேரத்தில் ஜெனி கில்கமேஷ் கிட்ட இருந்து விலகி கொண்டு அதேநேரம் டிடானியாவையும் தேடினாள்…

“இங்கதான் இருந்தா.. எங்க போனா….”

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

சற்று நேரம் எதையோ யோசித்து கொண்டிருந்தவன் சட்டென தான் வந்த வேலை நியாபகத்துக்கு வரவே.. தன்பங்கிற்கு அலமாரியை துளைத்து எடுத்து விட்டான். இருந்தபோதும் என்கிடுவின் மோதிரத்தை மட்டும் அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கடைசியாக மித்ரத்…

சற்று நேரம் எதையோ யோசித்து கொண்டிருந்தவன் சட்டென தான் வந்த வேலை நியாபகத்துக்கு வரவே.. தன்பங்கிற்கு அலமாரியை துளைத்து எடுத்து விட்டான். இருந்தபோதும் என்கிடுவின் மோதிரத்தை மட்டும் அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கடைசியாக மித்ரத்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *