Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 41 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 41

  • 29

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஒரு வருடதிற்கு முன்பு…

“நான் சொன்ன கெமிக்கல் எல்லாம் நோட் பண்ணிட்டியா விக்டர்..?” என்று கேட்டாள் அந்த விஞ்ஞான கூடத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி அனாமிகா.

“ஆஹ்ஹ் எல்லாம் நோட் பண்ணிட்டேன் மிஸ்,”என்றான் விக்டர்,

“டேய் உன்னோட அத்தைடா.. உன்னோட அப்பாவோட ஒரே தங்கச்சி… மிஸ்.. அது இதுன்னு கூப்பிடாம ஒண்ணு அத்தை இல்லேன்னா ஆண்டி என்றாவது கூப்பிடு…” என்றாள் அனாமிகா..

“இருந்தாலும் நீங்க எங்களுக்கு மிஸ் ஆச்சே எங்களுக்கு பிஸிக்ஸ் படிச்சி தர்றது. நீங்கதானே!” என்று சிரித்து கொண்டே சொன்னான் விக்டர்.

அன்றைக்கு அங்கு பணிபுரியும் ஊழியர் வேலைக்கு வரவில்லை. முக்கியமான சில கெமிக்கல்களை கவர்மெண்ட் கெமிக்கல் லேபில் இருந்து எடுத்து வர தன்னுடைய அண்ணன் பையன் விக்டரை அங்கு அழைத்திருந்தாள் அனாமிகா.

****************

“உங்க அம்மாவை அன்னிக்கி தான் கடைசியா பார்த்தேன்” என்று சொன்னவன் கண்ணில் இருந்து நீர்த்துளிகள் சிதற அவன் கையை பிடித்து

“இது அழரத்துக்கான நேரம் கிடையாது விக்டர்.. அவனை அழவைக்குறத்துக்கான நேரம்.. சரி….அதை விடு… இன்னிக்கி நம்ம பிளான் போட்டபடியே போறோம்.. ஈவினிங் 5 மணிக்கி நான் க்ளோக் டவர் கிட்ட நிற்பேன். என்னை பிக் அப் பன்னிக்கே… பை” என்று விட்டு விரிவுரைக்கு சென்றுவிட்டாள் டிடானியா..

அவளுடைய தைரியமும் தன்னம்பிக்கையும் விக்டருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின..

******************

“ராபர்ட், நம்ம மேனேஜருக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லிடு. இன்னிக்கி அவர் இங்க வந்து இருக்குற வேலையெல்லாம் கவனிச்சுக்கட்டும்..” என்றான் மித்ரத் அவன் கையில் மோதிரம் மின்னியது.

“இவன் கைல இருக்குற மோதிரத்தை எப்படி அபகரிக்கிறது???” என அவன் சிந்தித்து கொண்டிருந்தான்.

“உன்னை தான் சொன்னேன்.. ஃபோனை போடு.. இன்னிக்கி நாம ஒரு ஹோட்டல் ஓப்பனிங் செரமனிக்கி போறோம் என்னு சொல்லு…” என்று கூற அப்படியே செய்தான் ராபர்ட் அப்போது அவனுக்கு மோதிரத்தை அவன் கையில் இருந்து எடுப்பதற்கு ஒரு ஐடியா பிறந்தது.

“இன்னிக்கி நான் பண்ணப்போற காரியத்தில் எல்லோரும் என்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாட போறாங்க…”என்று எண்ணிக்கொண்டான்.

அப்போது ராபார்ட்டுக்கு அவனுடைய அம்மாவிடம் இருந்து மெஸ்ஸெஞ்சரில் அழைப்பு வந்தது. முதலில் மித்ரத்தை பார்த்து தடுமாறிய அவன் சிறிது அவகாசம் கேட்டுவிட்டு வெளியே சென்றான்.

“ஆஹ். அம்மா… எப்படி இருக்கீங்க… அப்பா எப்படி இருக்கார்?”என்று கேட்டான் ராபர்ட்.

“அதெல்லாம் இருக்கட்டும்… நீ இப்போ எங்க இருக்கே.. உன்னோட லோக்கல் நம்பர் வெர்க் பண்ணுதில்லை… ஒருவாரமா ஒரு போன் கோல் இல்லை. என்ன பண்ணிக்கிட்டு இருக்கே நீ!”என்று  அதட்டி கேட்டார் அம்மா.

“அது வந்து மா… நான் எங்க காலேஜ் ப்ரொஜெக்ட் விஷயமா ரொம்ப பிஸியா இருந்தேனா. அதனால உங்களுக்கு போன் பண்ண மறந்திடுச்சி…”என்று சமாளிக்க முயற்சி பண்ணினான்..

“சரி .. உன்னோட நம்பருக்கு என்னாச்சு…?”

“அதுவந்து மா…அது. அந்த சிம் லாக் ஆயிடுச்சு புது சிம் போட்டிருக்கேன். நீங்க மெஸ்ஸெஞ்சரிலேயே போன் பண்ணுங்க மா… அப்பாவை கேட்டதா சொல்லுங்க.. இப்போ எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு. நான் உங்களுக்கு அப்பறமா போன் பண்ணுறேன்..” என்று கூறி அழைப்பை துண்டித்தான்..

அப்போது அங்கே வந்த மித்ரத்..

“யாரு ஃபோன்ல அம்மாவா…”என்று கேட்க

“ம்..”என்றான் இவன்.

“சரி என்கூட வா.. ” என்றழைத்து கொண்டு ராபர்ட்டை காரில் அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு சென்றான் மித்ரத்.

“இங்க எதுக்கு மறுபடியும் நம்மள கூட்டிட்டு வந்திருக்கான்?” என்று குழப்பத்தில் யோசித்து கொண்டே  அவனோடு உள்ளே சென்றான்.

“வாங்க சேர்..” என்று அழைத்து கொண்டே ஒரு போலீஸ் அதிகாரி சி சி டீவி ஃபுட்டேஜ் இருக்கும் ஒப்பேரட்டிங் அறைக்கு அழைத்து சென்றார்.

என்ன நடக்கிறது என புரியாமலேயே அவனை பின்தொடர்ந்தான் ராபர்ட்..

உள்ளே சென்றதும் ஆங்காங்கே பதிவான வீடியோக்கள் தயார் நிலையில் இருந்தன..

“சார் நீங்க சொன்னமாதிரியே இங்க இருக்குற எல்லா கேமராக்களையும் செக் பண்ணிட்டோம்.. அதுல ஹோட்டலுக்கு பின்புறமாக இருக்குற இந்த கேமராவிலேயும், வெளில இருக்குற ஒரு சர்வைலன்ஸ் கேமராவிலேயும் வந்தவங்க சிக்கி இருக்காங்க” என்று கூறி அவற்றை பிளே பண்ணி காட்டினார்.

அதிலே ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் அதே கறுப்பு உருவமாக வந்து இறங்க.. ஒருவனின் உதவியோடு மற்றவன் சுவரில் கம்பி போட்டு ஏறுவதும். சற்று நேரத்தில் உள்ளே சென்றவன் பாய்ந்து கொண்டு தப்பித்து ஓடும் காட்சியும் பதிவாகி இருந்தன.

அதை பார்த்து கொண்டிருந்த ராபர்ட் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தான். அவன் மனதில்

“அந்த கறுப்பு ட்ரெஸ்… அந்த கறுப்பு ட்ரெஸ்…”என்றே மூளை சொல்லிக்கொண்டு இருந்தது.

“இந்த பைக் நம்பர் கூட தெளிவா இல்ல.. ஆனா இந்த மாடல் பைக் சிறிய அளவில் தான் வச்சிருக்காங்க.. சோ டோன்ட்வொரி.. நாங்க அது யாரென்று கண்டுபிடிச்சிடுவோம்…”என்றார் போலீஸ் ஆபீஸர்..

“அப்போ வந்தது ரெண்டுபேரு இல்லியா… கூடிய சீக்கிரம் அது யாருன்னு கண்டு பிடிங்க..”என்றான் மித்ரத்..

போலீஸார் அங்கிருந்து சென்றதும்.. மித்ரத் ராபார்ட்டின் முகத்தை பார்த்தான்.. அவன் சரியான குழப்பத்தில் எதையோ தீவிரமாக யோசிப்பது போல இருந்தது..

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ஒரு வருடதிற்கு முன்பு… “நான் சொன்ன கெமிக்கல் எல்லாம் நோட் பண்ணிட்டியா விக்டர்..?” என்று கேட்டாள் அந்த விஞ்ஞான கூடத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி அனாமிகா. “ஆஹ்ஹ் எல்லாம் நோட் பண்ணிட்டேன் மிஸ்,”என்றான் விக்டர், “டேய்…

ஒரு வருடதிற்கு முன்பு… “நான் சொன்ன கெமிக்கல் எல்லாம் நோட் பண்ணிட்டியா விக்டர்..?” என்று கேட்டாள் அந்த விஞ்ஞான கூடத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி அனாமிகா. “ஆஹ்ஹ் எல்லாம் நோட் பண்ணிட்டேன் மிஸ்,”என்றான் விக்டர், “டேய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *