Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 42 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 42

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எல்லோரும் அவரவர் வேலைகளில் தம்மை ஈடுபடுத்தி கொண்டிருந்தனர். நேரமும் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து கொண்டே சென்றது. ஆபீஸுக்கு சற்று தொலைவில் இருந்த குரோசரி ஷாப்பில் ஏதோ வாங்கிவிட்டு யாருக்கும் தெரியாமல் அதை தன் சட்டைப்பையில் போட்டு கொண்டு ஆபீஸுக்கு வந்தான் ராபர்ட்.

அங்கு ஏற்கனவே மேனேஜர் மித்ரத் கிட்ட பேசிக்கொண்டு இருந்தான். ராபர்ட் வந்ததும் அவனை பார்த்து மித்ரத்,

“என்ன போவோமா ராபர்ட்?”என்று கேட்க

“சரி சேர்!”என்றுவிட்டு  அவனுடன் காரில் புறப்பட்டான் ராபர்ட்.

மூன்று மைல் தொலைவில் அமைந்திருந்த அந்த ஹோட்டல் திறப்புவிழாவுக்கு சரியாக 5 மணிக்கு போய் சேர்ந்தார்கள் இருவரும். மித்ரத்திற்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு பலமாக இருந்தது.

“போடா போ…. இன்னிக்கி உனக்கு என்கையால தான் சாவு.. இப்போ மாலை போட்டுட்டாங்க அடுத்தது சங்குதான்….” என்றுவிட்டு பின்னாடியே சுற்றி திரிந்தான் ராபர்ட். ராபர்ட்டின் எந்த திட்டங்களும் தெரியாமல் அவனை கூடவே வைத்து கொண்டு சுற்றித்திரிந்தான் மித்ரத்.

புதிய ஹோட்டலில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மிக அழகான ஆடைகளுடன் அரேபிய நாட்டிய நங்கைகள் போலவே முகத்தில் பாதி மறைத்து கொண்டு வந்திருந்த பிரமுகர்களுக்கு உணவு மற்றும் வைனை வழங்கி கொண்டே இருந்தனர். இதனை அவதானித்த மித்ரத், அந்த ஹோட்டல் உரிமையாளரிடம்

“என்ன மிஸ்டர் ரிச்சர்ட், உங்க சேர்வண்ட் எல்லோரும் பொண்ணுங்களா இருக்காங்களே!  அதோடு அவங்க ஏன் முகத்தை மறைச்சிக்கிட்டு இருக்காங்க?” என்று பேச அந்த சந்தர்ப்பத்தில் ராபர்ட் மெல்ல நழுவினான்.

“அதுவந்து இது அரேபியன் ஃபூட் ரெசிப்பி உடைய ஹோட்டல். அதான் அவங்களும் அதுக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் பண்ணிக்க போறோம் என்றாங்க… நானும் சரி என்னுட்டேன்.”என்றார்.

“பரவால்லியே உங்க எம்ப்ளோயீஸோட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குறீங்க.”என்று இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க

அந்த கேப்பில் அங்கிருந்து நகர்ந்த ராபர்ட் அங்கு வைன் கொண்டு வந்த ஒரு பெண்ணை பிடித்து அவள் கையில் இருந்த வைனை பெற்று தன் பையில் இருந்து எடுத்த அந்த மாத்திரையை அதில் போட்டான். மொத்தமாக கரைந்து அடையாளம் தெரியாமல் போனதும்  அந்த வைனை எடுத்து அங்கு நடந்து சென்ற இன்னொரு பெண்ணின் தட்டில் வைத்து அதை மித்ரத்க்கு  கொண்டு போய் கொடுக்கும் படி கூறினான்.

இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. அவள் இவனை பார்த்ததும் முதலில் ரெண்டு அடி பின்வாங்கிவிட்டாள். ஆனால் அதை சரியாக கவனிக்காமல் காரியத்தை முடிப்பதிலேயே குறியாக இருந்தான் ராபர்ட். அந்த பெண்ணின் கண்கள் ராபர்ட்டின் சிந்தனையை தூண்டிவிட்டன.

“அது… அவ…” என்று சொல்லி கொண்டே அவளை பார்த்தான். அவளுடைய தட்டிற்கு கீழே துப்பாக்கியை கண்டதும் ராபர்ட் அதிர்ச்சி அடைந்தான்.

“அவளே தான்” என்ற உறுதி அவனுக்கு வந்துவிட அவளும் மித்ரத்தை நோக்கி துப்பாக்கி ட்ரிக்கரை அழுத்த உடனே ஓடிவந்து ராபர்ட் அவளை தள்ளிவிட்டான். தோட்டாக்கள் சீலிங்கை துளைத்து கொண்டு சத்தமிட ,அந்த கலவரத்தில் எல்லாமே மாறிப்போனது. எல்லோரும் ஆங்காங்கே தப்பித்து ஓட முயற்சி செய்தனர் . மித்ரத் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் இருவரும் தடுமாறி விழுந்து கிடந்தனர்.

இந்த குழப்பத்தில் மறுபடியும் அவள் தன்னை சுதாரித்து கொண்டு மித்ரத்தை சுட முயற்சிக்க ராபர்ட் அவள் கையை முறுக்கி பிடித்து அங்கிருந்து இழுத்து கொண்டு மறைவாக சென்றான்.

அவள் எவ்வளவோ திமிறி கொண்டு ராபர்ட்டை விட்டும் தப்பிக்க நினைத்தாள். அவனும் அவளை விடுவதாக இல்லை. துப்பாக்கியை தட்டிவிட்டு விட்டு அவள் முகத்தை மூடி இருந்த துணியை பிடித்து இழுத்து வீசி எறிந்தான்.

அதிர்ச்சியுடன்…அவன் நினைத்தது சரியாகி விட்டது.அது அவளே தான்.

“டிடானியா… நீ.”

“ஆமா நானே தான்.” என்று கோபத்தில் அவள் கத்திய போது அந்த பக்கமாக யாரோ வரும் சத்தம் கேட்டதும் சட்டென அவளுக்கு முத்தமிட்டான் ராபர்ட். கோபத்தில் குதித்து குமுறியவள் கண நேரத்தில் கன்னங்கள் சிவக்க அடங்கிப்போனாள். ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் அப்படியே கழிந்தன.

கொஞ்சம் கொஞ்சமாக தான் ராபர்ட் கிட்ட தாறுமாறாக மாட்டிக்கொண்டோம் என்பதை உணர்ந்து இன்னும் இன்னும் கோபத்தில் கொஞ்சம் வேகமாக அவனை  தள்ளிவிட்டாள் டிடானியா.

“சாரி… உன்னை நான்…. வேண்டுமென்றே.. அப்படி… பண்ணல்ல…” என்று சொல்லி முடிப்பதற்குள் “பளார்”என்று அவளின் கைகள் ராபர்ட்டின் கன்னத்தை பதம் பார்த்தன.

உள்ளே ஹோட்டலில் எல்லோரும் அல்லோல கல்லோல பட்டு ஓட… அந்த நெருக்கடியில் மித்ரத் ராபர்ட்டை தேடினான்.

“எங்க போய்ட்டான்.. இவன்…”

********************

இங்கு விக்டர், டிடானியாவை எங்கும் தேடிக்கொண்டு கடைசியில் இவர்கள் இருக்கும் இடத்துக்கே வந்து விட்டான். அவனுக்கும் இருவரையும் கண்டத்தில் அதிர்ச்சி தான். வெளியே போலீஸ் வண்டியில் சைரம்ஸ் சத்தம் கேட்கவே, விக்டர் அந்த துப்பாக்கியை எடுத்து கொண்டான்…வேறு எதுவும் பேசாமல்

“போலீஸ் வந்திடுச்சு.. நாம இங்க இருக்க வேணாம்.. சீக்கிரம் இங்கிருந்து கிளம்பனும் என்றான்”

அவளையும் இழுத்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான் ராபர்ட். ஒன்றுமே பேசாமல் அவனுடன் அங்கிருந்து வெளியேறினாள் டிடானியா.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

எல்லோரும் அவரவர் வேலைகளில் தம்மை ஈடுபடுத்தி கொண்டிருந்தனர். நேரமும் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து கொண்டே சென்றது. ஆபீஸுக்கு சற்று தொலைவில் இருந்த குரோசரி ஷாப்பில் ஏதோ வாங்கிவிட்டு யாருக்கும் தெரியாமல் அதை தன் சட்டைப்பையில்…

எல்லோரும் அவரவர் வேலைகளில் தம்மை ஈடுபடுத்தி கொண்டிருந்தனர். நேரமும் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து கொண்டே சென்றது. ஆபீஸுக்கு சற்று தொலைவில் இருந்த குரோசரி ஷாப்பில் ஏதோ வாங்கிவிட்டு யாருக்கும் தெரியாமல் அதை தன் சட்டைப்பையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *