Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 44 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 44

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இரவு ஒன்பது மணியாகிவிட்டிருந்தது. இந்த தடவை ராபர்ட்டின் யோசனைப்படி எல்லோரும் மொட்டைமாடியில் ஒன்று கூடினார்கள். அங்கு மூவருக்கு முன்கூட்டியே நடக்கப்போகும் விடயங்கள் பற்றி தெரிந்திருந்தது. அது ராபர்ட், டிடானியா அதோட விக்டர்.

“இந்த இடத்தில் நம்மகூட எதற்காக டிடானியாவும் அவளுடைய சொந்தக்கார பையனும் இருக்காங்க?” என்ற கேள்வியை மீராவிடம் மெல்ல கேட்டான் ஆர்தர்.

“அது அவளோட பாய்பிரெண்ட் என்று நினைக்குறேன். அன்னிக்கி கூட பைக்ல ஒன்னா வந்தாங்க…” என்று மெல்லவாக அவன் காதில் போட்டாள் மீரா.

விக்டரை பார்த்த உடனேயே ஜெனிக்கு இவன் தான் அன்று டிடானியா கூட பார்த்த பையன் என்பது புரிந்தது. அதேநேரம் அவளுக்கும் கில்கமேஷுக்கும் கூட ராபர்ட்டின் திட்டம் என்னவென்று புரியவில்லை. எல்லோரும் சற்று நேரம் அமைதியாகவே இருந்தனர். அந்த மௌனத்தை ராபர்ட்டே நீக்கினான்.

காய்ஸ்… நான் இப்போ சொல்ல போற விடயங்கள் உங்க எல்லாருக்குமே அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனா. இ ஆம் சாரி டிடானியா.. இதுக்கு நாம எல்லோரும் சேர்ந்தே ஒரு முடிவை எடுப்போம்…

என்று அவளை பார்த்து சொல்ல அவள் வேறுபக்கமாக முகத்தை திருப்பி கொண்டாள்.

“நீ என்ன சொல்ல விரும்புறியோ அதை சொல்லிடு ராபர்ட்.” என்று கேகே அவனுக்கு தைரியமூட்டினான்.

“ஹ். ஜெனி மித்ரத்தை யாரோ ஃபாலோவ் பண்ணுறாங்க அவன் ரூமுக்கு ஒரு பொண்ணு வந்தா என்றெல்லாம் சொன்னேனே நியாபகம் இருக்கா” என்று கேட்டான் ராபர்ட். அதை கேட்டதும் எல்லோரும் முதலில் அதிர்ச்சியோடு குழம்பிப்போயினர். அப்போது விக்டர்,

“என்னடா இவன் இவர்கள் ரெண்டுபேரையும் வைத்து கொண்டு மித்ரத் பத்தி பேசுறானே. என்று யோசிக்குறீங்களா?” என்று கேட்டான்.

“அது வேறு யாரும் இல்ல நானும் டிடானியாவும் தான்.” என்று விக்டர் சொன்னதும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர் ஜெனி மற்றும் நண்பர்கள்.

“ஆமா கேகே இவன் சொல்றது உண்மைதான்.  ஹோட்டலுக்கு மாறுவேடத்தில் வந்தது இவதான்” என்றான் ராபர்ட்.

“என்ன சொல்லுறே நீ இவ எதுக்காக அவனை….” என்று ஜெனி இழுக்க ராபர்ட்

“இதெல்லாதுக்கும் பதில் தெரிஞ்சிக்க தான் நாம இங்க ஒண்ணு சேர்ந்திருக்கோம். அவளே எல்லாத்தையும் சொல்லுவா என்று நினைக்கிறேன்.

அதோட உங்க ரெண்டுபேருக்கும் நாங்க என்ன பண்ணுறோம் என்று தெரிஞ்சிக்க வேணும் போல் இருக்கும். நாங்க கண்டிப்பாக உங்களுக்கு அதை சொல்லத்தான் போறோம்.”என்றான். டிடானியா மௌனமாகவே இருந்தாள்.

“நான் சொல்றேன்… நடந்த எல்லாத்தையும் நான் சொல்லுறேன்.” என்றான் விக்டர்.

*******************

“அன்னிக்கி டிடானியாவோட அம்மா, என்னோட ஆண்ட்டி அவங்க வேர்க் பண்ணுற லேபிற்கு வரும் படி சொன்னாங்க நானும் போய் இருந்தேன். அங்க வேலை செய்றவர் வரல என்னும் சில கெமிக்கல்களை கவர்மெண்ட் கெமிக்கல் சென்டரில் இருந்து வாங்கிட்டு வரும் படி சொன்னாங்க. அது ஒரு பெரிய லெப். கெமிக்கலுக்கு, டூல்சுக்கு, தாதுப்பொருட்களுக்கு என்று அங்க வெவ்வேறு டிப்பார்ட்மெண்ட் இருந்தது.

எங்களுக்கு கொஞ்சம் காபன் தேவைப்பட்டதால அது இருக்குற பகுதிக்கு அவங்க என்ன கூட்டிட்டு போனாங்க திடீரென அவங்க கைல இருந்த பேப்பர்ஸ் எல்லாம் கீழே விழ நாங்க ரெண்டுபேரும் கீழே  குனிந்து அதை எடுத்துக்கொண்டு இருந்தோம் அப்போ அந்த  மித்ரத் அங்க பொறுப்பாக இருந்த இன்னொரு சைன்டிஸ்ட் கூட பேசிக்கிட்டு இருந்தது எங்களுக்கு கேட்டிச்சி.

“நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏதோ பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் எப்படியாவது அந்த மோதிரத்தை எடுத்துடுவேன். என்கிடுவோட  பாடியையும் தோண்டி எடுத்துடுவேன். அதுக்கப்பறம் நாம செய்ய போறெ ஜெனடிக் எக்ஸ்சேஞ் பரிசோதனை செய்ய நமக்கு அவ வேணும்” என்றான். அதற்கு மற்றவன்.

“சார், உங்களுக்கு அனாமிகா மேடத்தை பத்தி இன்னும் சரியா தெரியல்ல, அவங்க இப்படியான சட்டவிரோத ஹியூமன் டேஞ்சரஸ் எக்ஸ்பிரிமண்ட் எல்லாம் பண்ண சம்மதிக்க மாட்டங்க எப்படியும் நம்ம பரிசோதனையில் ஒரு அஞ்சாறு அப்பாவிகள் பலி ஆகபோறங்க அதனால கொஞ்சம் யோசிக்கணும்.” என்றான்.

“முடியாது என்றெல்லாம் என்கிட்ட சொல்லாதே…. அவள வச்சே இதை எப்படி பண்ணனும் என்று எனக்கு தெரியும் “என்றான் மித்ரத்.

இதையெல்லாம் கீழே மறைஞ்சி இருந்து கேட்டுக்கிட்டு இருந்த எனக்கு பாதி விஷயம் புரியல்ல. ஆனா அனாமிகா ஆண்ட்டி ரொம்பவே பயந்து போய் இருந்தாங்க அந்த பதற்றத்தில் அவங்க வெச்சிருந்த சாவி கீழ விழுந்து அதனால ஏற்பட்ட சத்தத்தில்  மித்ரத்திற்கு யாரோ அங்க இருந்தது புரிஞ்சிடுச்சு.

“எங்க நான் அவங்க கிட்ட மாட்டிப்பேனோ என்று பயத்தில். அவங்க சைகையால அப்படியே குனிஞ்சபடியே என்னை வேறு பக்கமா போய் உக்கார சொல்லிட்டாங்க…” என்றவனுக்கு அழுகை வந்துவிட்டது. டிடானியா அவன் தோளில் கைவைத்து சமாதானம் செய்தாள்.

“அப்பறம் என்ன ஆச்சு??”என்று ஜெனி கேட்டாள்.

“சத்தம் கேட்டு அவன் அங்க வந்துகொண்டிருந்தான்….”

“என்ன ஆனாலும் சரி நீ இந்த இடத்தை விட்டு வெளியே வரக்கூடாது.” என்றாள் அனாமிகா.

“ஆனா ஆன்டி. அவங்க உங்களை… ஏதும்..”

“ஷ்… எனக்கு ப்ரோமிஸ் பண்ணு. என்ன ஆனாலும் நீ அவங்க கிட்ட மாட்டிக்க கூடாது…” என்று சொல்ல நானும் அவங்க பேச்சுக்கு கட்டுப்பட்டு வாக்கு கொடுத்தேன். ஆனா அந்த பாவிகள்…… அவங்க மறைஞ்சி இருந்ததை கண்டுபிடிச்சிட்டாங்க…” என்று சொல்லி நிறுத்த எல்லோரும் ஒரு கணம் பதற்றமடைந்தனர்.

“ஐயோ. அவன் ரொம்ப டேஞ்சரான ஆளாச்சே என்ன பண்ணான்…” என மீரா கேட்டாள்.

“ஓஹ். மிஸ்சிஸ் அனாமிகா… நீங்கதானா… நாங்க பேசினது எல்லாத்தையும் ஒட்டு கேட்டது. பரவால்ல. அப்போ உங்களுக்கு இன்னொரு வாட்டி சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். என்ன சொல்லுறீங்க?”என்று கேட்டான்.

“இங்க பாருங்க. .இந்த லேபை கட்டினது நீங்களா இருக்கலாம். நீங்க இந்த சொசைட்டில பெரிய அந்தஸ்தில் இருக்குறவங்களா இருக்கலாம். ஆனா இப்படியான விசயங்களை செய்றதுக்கு நான் உதவி செய்வேன்னு மட்டும் எதிர்பார்க்காதீங்க.

அதோட மனிஷ உயிர் என்னா உங்களுக்கு அவ்வளவு ஈஸியா போய்டுச்சா எவ்வளவு சாதாரணமாக சொல்லிடீங்க முடியாது சேர் என்னோட வேலையே போனாலும் பரவாயில்லை. இங்க நடந்த எல்லாவற்றையும் நான் போலீசுக்கு இன்போர்ம் பண்ணாம விடமாட்டேன்.” என்றார்கள்.

அவற்றை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த மித்ரத் கூட இருந்தவனுக்கு கண்ணை காட்டிவிட்டு உடனே அனாமிகா ஆண்டியை மடக்கி பிடித்து அவனுடைய கைகளால் கழுத்தை நெரித்து கொன்றான்.

நான் எழும்ப முயற்சி செய்தபோது அவங்க கண்களால் வேண்டாம் என்று கெஞ்சினார்கள். என்னோட கண்ணு முன்னாடியே அவங்கள கொன்னு அதை ஒரு தற்கொலை போலவே செட் பண்ணிட்டாங்க.” என்று சொல்லி முடித்தான்.

மொத்த கதையும் கேட்டபின் ஜெனியும் நண்பர்களும் கூட அழுதுவிட்டனர். ஆனால் டிடானியா மட்டும் அழமாட்டேன் என்பது போல் நின்றுகொண்டிருந்தாள்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

இரவு ஒன்பது மணியாகிவிட்டிருந்தது. இந்த தடவை ராபர்ட்டின் யோசனைப்படி எல்லோரும் மொட்டைமாடியில் ஒன்று கூடினார்கள். அங்கு மூவருக்கு முன்கூட்டியே நடக்கப்போகும் விடயங்கள் பற்றி தெரிந்திருந்தது. அது ராபர்ட், டிடானியா அதோட விக்டர். “இந்த இடத்தில்…

இரவு ஒன்பது மணியாகிவிட்டிருந்தது. இந்த தடவை ராபர்ட்டின் யோசனைப்படி எல்லோரும் மொட்டைமாடியில் ஒன்று கூடினார்கள். அங்கு மூவருக்கு முன்கூட்டியே நடக்கப்போகும் விடயங்கள் பற்றி தெரிந்திருந்தது. அது ராபர்ட், டிடானியா அதோட விக்டர். “இந்த இடத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *