Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 47 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 47

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“மித்ரத் சேர், நீங்களா?” என்று அங்குள்ள ஆர்க்கியொலிஸ்ட் கேட்டதும் தான். கில்கமேஷ்ஷுக்கு வந்திருப்பது மித்ரத் என்று புரிந்தது.

மறைவிடத்தில் இருந்து கொஞ்சம் வெளியேறி பார்த்தான். இதற்கு முன்னர் அவனை கில்கமேஷோ, அவனுக்கு இவனையோ தெரியாது என்ற காரணத்தால் கொஞ்சம் தைரியமாகவே தன்னை வெளிப்படுத்தி கொண்டான் கில்கமேஷ்.

“ஏய், என்ன பண்ணுறே?” என்ற ஆர்த்தரின் கேள்விக்கு “உஷ்.” என்ற பதிலோடு நிறுத்தி கொண்டான்.

“சேர், இங்க கதவு இருக்கற விஷயம் எங்களுக்கே இப்பதான் தெரியும். நீங்க எப்படி அதுக்குள்ள….???”

அந்த சீனியர் ஆர்க்கியொலிஸ்ட் கேட்ட கேள்வி நியாயமானதே! அது தானே அதற்குள் எப்படி இவனுக்கு தெரிந்தது..?

“ஹாஹாஹா… நல்ல கேள்வி… இருந்தாலும் இங்க இருக்குற சி சி டீவி கேமராவை யாரும் இன்னமும் பார்க்கவில்லை என்பது புரிந்து விட்டது…” என்று அருகில் இருந்த மரத்தை காட்டினான்.

“ஒஹ்ஹ்.”

“அவங்க தோண்ட ஆரம்பிச்ச போதே அது எனக்கு தெரிஞ்சிடுச்சி… நான் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கு தானே?  அந்த பொருள் எனக்கு ரொம்ப முக்கியமானது.. அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா எனக்கு அது வேணும்.” என்றான்.

கில்கமேஷுக்கு கோபம் கோபமாக வந்தது.

“என்னோட நண்பனோட உடல் அவனுக்கு ஒரு பொருளாக போய்டுச்சா??” உனக்கு என் கையாலதான் சாவுடா?” என்று மனதுக்குள் எண்ணி கொண்டான்.

அந்த நிலையில் கூட நம்மவர்கள் யாரும் மித்ரத் கண்ணில் மாட்டிக்கொள்ள கூடாது என்று வளைத்து வளைத்து காவல் காத்தான்.

“சேர், நீங்க என்ன சொல்லுறீங்க… உடனே எப்படி இவ்வளவு மணலையும் இங்கிருந்து அகற்ற முடியும்? டூ யூ ஹேவ் எனி ஐடியா?” என்று கேட்டார்கள்.

“ஹ்ம்ம். துருக்கிய இயந்திரம் ஒன்றை இதற்காகவே இறக்குமதி செஞ்சிருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில் இங்க வர்றதுக்கான ஏற்பாடுகளையும் பண்ணி இருக்கேன். அதனால  யாரும் எதுவும் பண்ண வேணாம். இயந்திரம் வந்ததும்  அது என்ன பண்ணும். என்றெல்லாம் பிறகு சொல்லுறேன். அதுவரை எல்லோரும் ரெஸ்ட் எடுங்க. நான் இங்கே பக்கத்தில இருக்குற கூடாரத்தில் தான் ஓய்வெடுப்பேன்.”என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அதன்பின்னர் ஆர்க்கியொலிஸ்ட் எல்லோரும் ஒரு பக்கமாகவும், வேலை செய்பவர்கள் எல்லாம் இன்னொரு பக்கமாகவும் ஓய்வெடுத்து கொண்டனர்.

“இதுதான் கரெக்டான நேரம்” என்றான் ஆர்தர்.

“எதுக்குடா…?”

“கரெக்ட் பண்ணுறதுக்கு… அதோ பாரு நம்ம ஆளுங்க. ஓய்வெடுக்குறாங்க. வீட்டுலயும் மீரா கூட ஒழுங்கா பேச முடியுறதில்லை… வா… அந்த பக்கமா கொஞ்சம் போய்ட்டு வரலாம்..” என்று கில்கமேஷை அழைத்தான்.

ஏற்கனவே அவன் நம்ம ஆளுங்க என்று சொன்னதை கேட்டு கிறுகிறுத்து போய் இருந்த கில்கமேஷ்.

“நீ. நீ வேணா போய்ட்டு வா.. அங்க எனக்கென்ன வேலை இருக்கு… நீ போறதே ஆபத்து பார்தேல்லே அவன் எங்கெல்லாம் கேமரா வெச்சிருக்கான்னு யாருக்கும் தெரியாது” என்று ஆர்த்தரை பயமுறுத்தினான்  கில்கமேஷ்.

“இரு இரு… இன்னிக்கி எனக்கு நீ ஒரு உண்மையை சொல்லியே ஆகணும். இல்லேன்னா நானே அவகிட்ட இதை பற்றி கேட்டுடுவேன்”

“என்ன என்ன. கேட்பே..?”

“உனக்கு அவளை பிடிக்கும் என்றால் அதை சொல்ல வேண்டியது தானே” என்றான் ஆர்தர் சட்டென. சிறிது தயங்கிய கில்கமேஷ்

“எனக்கு ஜெனியை மட்டுமில்ல. உங்க எல்லாரையும் கூட அப்படித்தான் பிடிக்கும் ஆனா நீ நினைக்கிறது போல இல்ல சின்னதா எனக்குள்ள ஏற்பர்ர அந்த சலனம் சிலநேரங்களில் தப்போ என்று தோணுது”

“நீ ஏன் அப்படியெல்லாம் நினைக்குறே?”

“அது இல்லை. நான் பெண்கள் விஷயத்தில் ரொம்ப மோசமாக நடந்திருக்கேன். என்னோட ஆட்சியில் எந்த கன்னிப்பெண்ணையும் நான் சுதந்திரமா விட்டதே இல்ல. யாரையும் கல்யாணம் பண்ணிக்காம, வெறும் உடல் சுகத்தை தீர்க்குற பொம்மைகளாக தான் அவங்க எனக்கு தெரிஞ்சாங்க இருந்தும் என்கிடு வந்த பிறகு அதெல்லாம் இல்லாம போனாலும் இப்போ எனக்கு அந்த குற்ற உணர்வு யாரையும் மனசார காதலிக்க விடுதில்லை.”என்றான்.

“அப்போ உனக்கு ஜெனி மேல காதல் இருக்கு. அதை சொல்லமுடியாம இந்த குற்ற உணர்வு கொல்லுது அப்படித்தானே?”

“அப்படியில்… என்று சொல்ல வந்தவன் ஆர்தர் முறைக்கவே”. அப்படித்தான்..” என்றான்.

“அப்போ நோ பிரோப்ளேம்… நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன். என்னதான் நீ இந்த நாட்டுக்கே ஒரு காலத்தில் அரசனா இருந்தாலும். இப்போ எங்களோட ஒருத்தனா ஐக்கியம் ஆகிட்டே உனக்கு உதவுறது எனக்கு சந்தோசம் தான்..”

***************

“அன்னிக்கே சொன்னேன். சொல்லு டி சொல்லுடி. என்று ஏன் இப்படி இழுத்து அடிக்கே பாவம் டி அவன்”

“நான் என்ன பண்ணுவேன் சொல்லு… எவ்வளவு தைரியத்தை வரவழைத்து கொண்டு போனாலும் அவன் கண்ணை பார்த்ததும் எல்லாமே மறந்து போய் பொல்லாத பயமொன்று சும்மாவே தொற்றிக்கொள்ளுது டி.”

“போடி… டியூப் லைட்… நேரா போய் விஷயத்தை சொல்லுவியா… அதவிட்டுட்டு அவன் கண்ணை பார்த்தேன், காதை பார்த்தேன் எண்ணுகிட்டு… நல்லா வாயில வருது போ….”

“திட்டாதே டி… எப்படியும் சொல்லிடுவேன்…. ஆனா அவன் என்னை ஏத்துக்கல என்னா!!!!”

அதை கேட்டு மீரா ஜெனி தலையில் கொட்டி

“மட சாம்பிராணி… உருப்படியா எதுவுமே சொல்லமாட்டியா?”

இவ்வாறு இருதரப்பிலும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மறுபடியும் மித்ரத்தின் குரலோடு சேர்ந்து புதிய இயந்திரம் ஒன்றின் சத்தமும்  கேட்டு எல்லோரும் திரும்பினார்கள்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“மித்ரத் சேர், நீங்களா?” என்று அங்குள்ள ஆர்க்கியொலிஸ்ட் கேட்டதும் தான். கில்கமேஷ்ஷுக்கு வந்திருப்பது மித்ரத் என்று புரிந்தது. மறைவிடத்தில் இருந்து கொஞ்சம் வெளியேறி பார்த்தான். இதற்கு முன்னர் அவனை கில்கமேஷோ, அவனுக்கு இவனையோ தெரியாது…

“மித்ரத் சேர், நீங்களா?” என்று அங்குள்ள ஆர்க்கியொலிஸ்ட் கேட்டதும் தான். கில்கமேஷ்ஷுக்கு வந்திருப்பது மித்ரத் என்று புரிந்தது. மறைவிடத்தில் இருந்து கொஞ்சம் வெளியேறி பார்த்தான். இதற்கு முன்னர் அவனை கில்கமேஷோ, அவனுக்கு இவனையோ தெரியாது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *