Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 48 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 48

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“அவன் மறுபடியும் வந்துட்டான்… வா என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.” என்று ஆர்தர் அழைக்க கில்கமேஷ் எழுந்து இருவரும் அந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டனர்.

அதே ஆவலில் ஏனைய ஆர்க்கியொலிஸ்ட்களும், ஜெனி மற்றும் மீராவும் இணைந்து கொண்டனர்.

“மாளிகையோட பிரதான கதவை கண்டுபிடிக்க தான் இவ்வளவு ஏற்பாடுகளையும் பண்ணினேன். இந்த இயந்திரத்தை இயக்கும் போது உள்ளே இருந்து இயக்குவபரை தவிர மத்தவங்க எல்லோரும் 500 மீட்டர் தள்ளி நிக்கணும்” என்றான்.

“சரி யாரு இதை இயக்க போறது?”என்று ராபர்ட் கேள்வி கேட்டான்.

“வேற யாரு நீதான் ராபர்ட்”

“என்ன?”

“ஆமா… அது பெரிய வேலை இல்ல. வண்டி ஓட்டுவது போல தான். உள்ளே போய் அந்த பெரிய பட்டனை அமுக்கினா போதும். கதவை மூடியிருக்கும் மணல் எல்லாம் காணாம போய்டும்.” என்றான். ராபர்ட் கொஞ்சம் தடுமாறினான்.

அதன்பின்னர் எல்லோரும் மித்ரத்துடன் சேர்ந்து 500 மீட்டர் தள்ளிப்போய் நின்றார்கள். தூர இருந்து மித்ரத் ராபர்ட்டுக்கு சிக்னல் காட்டியதும் அவன் வண்டியை இயக்கினான். பெரிய சத்தத்தோடு அதில் இருந்து ஏற்பட்ட சூழல் போன்ற ஒன்று அங்கிருந்த மொத்த மணலையும் சுழற்ற ஆரம்பித்தது. கிட்டத்தட்ட மணல் புயல் போன்ற தோற்றத்தில் அது சுழல எல்லோருமே கைகளை கொண்டு கண்களை மூடினர். எல்லா இடத்திலும் மணல்மயமாகவே இருந்தது. கொஞ்ச நேரம் என்ன நடக்கிறது என்பதே யார்க்கண்ணுக்கும் தெரியவில்லை. இயந்திரத்தின் உள்ளே இருந்ததால் ராபர்டுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவனால் கூட மணலை தாண்டி வேறு எதுவும் தெரியவில்லை. சற்று நேரத்தில் எல்லா மணலும் அமைதியாகி வேறு பக்கங்களில் தூக்கிவாரி போடப்பட்டு இருந்தது. காற்றில் இருந்த கலக்கம் தெளிந்து கதவு தெரிந்தது. கதவை பார்த்ததும் நம்மவர்கள் கண்ணுக்கு என்கிடுவே கிடைத்து விட்டது போல ஒரு ஆனந்தம். மறுபடியும் எல்லோரும் அந்தபகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

“பிரம்மாதம் சேர், இந்த இயந்திரம் உண்மையிலேயே அமேசிங்.” என்றான் ஒருவன்.

“அதனால தானே அதை இங்க கொண்டுவந்தோம்.” என்று சொல்லிக்கொண்டே அந்த ஏனைய கழுகு அடையாளம் போட்ட நபர்களும் வந்து சேர்ந்தனர். அவர்கள் மொத்தம் ஐந்து பேர், மித்ரத்துடன் சேர்த்து ஆறுபேர்.

“அடக்கடவுளே! இன்னும் எத்துணை பேர் வரப்போரங்களோ?” என்று ஜெனி  சொன்னாள்.

“நல்லது… இனி உங்களோட உதவி எங்களுக்கு தேவைப்படாது. என்று நினைக்கிறேன்.” என்றான் மித்ரத் அங்கிருந்த ஆர்க்கியொலிஸ்ட்டை பார்த்து.

அவர்கள் அதிர்ச்சியுடன்… “என்ன?”

“ஆமா. இனி நீங்க வீட்டுக்கு போகலாம். இதுக்கு பிறகு எனக்கு இந்த ஊழியர் படை மட்டும் இருந்தா போதும் அமைதியா இங்கிருந்து போய்டுங்க.” என்றான்.

அது மீரா, ஜெனி, ராபர்டுக்கும் குழப்பமாகவே இருந்தது.

“என்ன சேர் விளையாடுறீங்களா? நம்ம அக்ரீமெண்ட் நியாபகம் இருக்குல்லே… இங்க கிடைக்கிற எல்லா தொல்பொருட்களும் எங்களுக்கு சொந்தமாகனும். நீங்க ஒரே ஒரு பொருளை மட்டும் தான் எடுத்துக்குவீங்க என்று சொன்னீங்களே” என்று அந்த சீனியர் ஆர்க்கியொலிஸ்ட் கோபமாக கேட்டாள்.

“அதுதான் இதுவரை கிடைச்ச எல்லா பொருட்களையும் நீங்களே வெச்சி கொள்ளுங்க ஆனா உள்ளே இருக்குற ஒரு சின்ன ஆணி கூட எங்களுக்கு மட்டும் தான் சொந்தம் அதனால வாயை மூடிக்கிட்டு இங்கிருந்து ஓடிடுங்க,” என்றான்.

அவர்களே ஆளுக்காள் பேசிக்கொண்டனர்.

“இது என்ன அநியாயமாக இருக்கே. இவரை நம்பி இந்த வேலையில இறங்கினத்துக்கு. இப்போ நம்மள பாதில கழற்றி விடுறாரே.”

“ஆமா. இதுக்கு கண்டிப்பாக இவர் பதில் சொல்லியே ஆகணும்.”

“ஸ்பான்சர் பண்ணுறோம் என்கிற பெயரில். நம்ம மூலமா இந்த இடத்துக்குள்ள நுழைஞ்சவரு இப்போ நம்மளையே போக சொல்றாரு”

“சேர், நாங்க உங்களை சும்மா விடமாட்டோம். கோர்ட்டில் கேஸ் போடுவோம்.” என்றான் ஒருவன்.

சுற்றி இருந்த உழைப்பாளி கூட்டம் என்ன நடக்கிறது என்றே தெரியாமலே நடப்பவற்றை வேடிக்கை பார்த்தனர். திடீரென ஒரு வெடிச்சத்தம்… அங்கு பார்த்தால். கேஸ் போடுவோம் என்று சொன்ன ஆர்க்கியொலிஸ்டை மித்ரத் கூட இருந்தவன் சுட்டுவிட்டான்.

“ஆஹ்….” என அங்கிருந்தோர் கத்த ராபர்ட் மற்றும் மற்றவர்கள் எல்லோரும் அதிர்ச்சியோடு காணப்பட்டனர்.

“இதுக்குத்தான் அப்போவே சொன்னேன். பேசாம போய்டுங்க என்று” என்றவன் ராபர்ட்டை பார்த்து “பயந்திட்டியா?”என்று கேட்டான்.

“ஏ. எது சேர் இல்ல இது அவங்க தப்புதானே. அப்போவே போயிருந்தால். இப்படி ஆகி இருக்காதே…” என்று நாவு தடுமாறி கொண்டே சொன்னான்.

“தட்ஸ் மை பாய்” என்றவன் திரும்ப எல்லோரையும் பார்த்து.

“யாருக்கும் இங்க என்ன நடந்தது. என்று தெரியாது.. ஓகே..” என்று அதட்ட எல்லோரும் சேர்ந்து பயத்தில் அவனுக்கு கட்டுப்பட்டு பேசினார்கள்.

“நீ. நீங்க என்ன சொல்லுறீங்களோ… அதையே பண்ணுறோம்… தயவுசெய்து எங்களை எதுவும் பண்ணிடாதீங்க…” என்கிறார்கள்.

“அந்த பயம் இருந்து கிட்டே இருக்கணும். உங்களை எல்லாம் அனுப்பிட்டு என்னோட வேலைய பார்க்கலாம் என்று நினைச்சேன். இனி உங்கள வெச்சிக்கிட்டு என்னோட வேலையை ஆரம்பிக்க போறேன்.” என்றான்.

அவன் பேசியவற்றை கேட்டு கைகளில் நரம்பேறி கோபக்கணலோடு நின்றான் கில்கமேஷ். அவனை பார்க்கையில் ஆர்தருக்கே பயம் ஏற்பட்டது.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“அவன் மறுபடியும் வந்துட்டான்… வா என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.” என்று ஆர்தர் அழைக்க கில்கமேஷ் எழுந்து இருவரும் அந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டனர். அதே ஆவலில் ஏனைய ஆர்க்கியொலிஸ்ட்களும், ஜெனி மற்றும் மீராவும் இணைந்து…

“அவன் மறுபடியும் வந்துட்டான்… வா என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.” என்று ஆர்தர் அழைக்க கில்கமேஷ் எழுந்து இருவரும் அந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டனர். அதே ஆவலில் ஏனைய ஆர்க்கியொலிஸ்ட்களும், ஜெனி மற்றும் மீராவும் இணைந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *