Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 50 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 50

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உள்ளே ஒரே புழுதி மயமாகவும் சிலந்திக்கூடுகளும் இருந்தன. என்கிடுவுக்காக விசேஷமாக அமைக்கப்பட்ட அந்த மாளிகையில் எது எது எங்கெங்கே இருக்கிறது என்ற விடயம் எல்லாம் கில்கமேஷுக்கு அத்துப்படி. இருந்தும் மாளிகையில் என்கிடு சடலம் பாதுகாக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு லோகேஷை அழைத்து செல்வது அவனது நோக்கம் இல்லை. அந்த இடத்தின் பக்கம் கூட அவனை நெருங்க விடக்கூடாது என்பதற்காக அப்போதிருந்தே திட்டம் தீட்டினான். அடிக்கடி ஜெனி மற்றும் ஆர்தருக்கு சைகைகளால் தகவல்களை பறிமாறிக்கொண்டான். வெளியே இருந்த மீரா, உள்ளே என்ன நடக்கிறது. ஏது நடக்கிறது என தெரியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தாள். வெளியே காவலுக்கு இருந்தவர்களை தாண்டி ஒரு ஃபோன் கூட பண்ண முடியவில்லை. இந்த விடயத்தை எப்படியும் டிடானியா இல்லேன்னா விக்டருக்கு சொல்லணும் என்றெண்ணினாள். அப்போது அவளுக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது. அதுவும் ஆர்த்தரிடம் இருந்து. யாருக்கும் தெரியாமல் அதை ரகசியமாக படித்தாள்.

“ஹெலோ மீரா. உனக்கு ஒன்னும் இல்லியே…. இங்க நாங்க உள்ளே போய்ட்டு இருக்கோம். மித்ரத்தோட ஆள டைவெட் பண்ணி வேறு பக்கமா கூட்டிட்டு போக கேகே பிளான் பண்ணி இருக்கான்.

நீ வெளியவே இருந்து யாராவது உள்ளே வந்தாலோ இல்ல வெளியில ஏதாவது நடந்தாலோ உடனே எனக்கு இன்போர்ம் பண்ணு… நீயும் ஜாக்கிரதையாக இரு.. ஐ லவ் யூ” என்று அந்த செய்தி இருந்தது.

அதை பார்த்ததும் தான் மீராவுக்கு சந்தோசமாக இருந்தது. இப்போது இதே போல ஒரு எஸ் எம் எஸ்ஸை டிடானியாவுக்கு போட்டுவிட்டால் சரி, என்றெண்ணி விடயத்தை எல்லாம் குறிப்பிட்டு அனுப்பிவிட்டாள்.

************

“சேர்… எதுக்காக நாம இப்போ எயார் போர்டுக்கு வந்திருக்கோம். யாராவது முக்கியமான கெஸ்ட் வர்றாங்களா?” என்று ராபர்ட் மித்ரத் கிட்ட கேட்டான்.

“ஆமா, ராபர்ட் ரொம்ப முக்கியமான கெஸ்ட்ஸ் தான்.” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவரும் தூரத்தில் வருவது தெரிந்து மித்ரத் கை காட்டினான்.

ராபார்ட்டும் அதே போல கைகாட்டி அவர்களை அழைத்தான். அருகே வர வர ராபார்ட்டின் கைகள் தானாகவே தொங்கி கொண்டன. இந்த அதிர்ச்சியை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை வந்தவர்கள் முகத்திலும் பயங்கர அதிர்ச்சி தெரிந்தது.

அவர்களை நெருங்கி மித்ரத் கை குலுக்கி கொண்டான். “வாங்க… என்னோட இடத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இது என்னோட பெர்சனல் அசிஸ்டண்ட் ராபர்ட்” என்று அவனையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

அவர்களில் ஒருவர் ஆண் மற்றது பெண். அவர்கள் இருவருமே ராபர்ட் மற்றும் மித்ரத்திற்கு கைலாகு கொடுத்தனர்.

“ஒஹ்ஹ்… ராபர்ட். இவங்க தான் என்கிடு ப்ரொஜெக்ட்க்கு உதவ போறெ நியூரோலாஜிஸ்ட் பேரு ஹேமா, இது இவங்க ஹஸ்பண்ட் ஜான். இவரும் ஒரு  மரபணு வைத்தியர் தான்” என்று அவர்கள் வந்த காரணத்தை சொன்னான்.

“ஒஹ்ஹ்..”என்று சொன்னவன் மனதில்…

“ஆஹ… டிடானியா அம்மா மூலமா செய்ய இருந்த ஆராய்ச்சியை இவங்க மூலமா செய்ய பிளான் போடுரியா… போடு போடு… இது எப்படி நடக்குது என்னு நானும் பார்த்திர்றேன்.” என உள்ளார சொல்லி கொண்டான்.

அதன் பின்னர் மித்ரத் அவனுடைய காரில் அவர்களை அழைத்து கொண்டு தன்னுடைய ஹோட்டலிலேயே அவர்களுக்கு அறையொன்றை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு கூடவே ராபரட்டையும் இருந்து வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு கூறிவிட்டு அவன் மட்டும்  அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்தான். ராபர்டுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அங்கிருந்து நழுவப்பார்த்தான். அப்போது அவர்கள் இருவரும் அவன் முன்னாடி வந்து நின்று.

“மிஸ்டர் ராபர்ட்… நாங்க உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணுமே…..” என்று சொல்ல வியர்த்து கொட்டி நடுங்கி போய் நின்றான் ராபர்ட்.

***************

“இப்போ என்ன பண்ணலாம் என்கிற?” என்று விக்டர் டிடானியா கிட்ட கேட்டான்.

“மீரா, அனுப்பின மெஸேஜை பார்த்தேலே….. அவங்க உள்ளே போய்ட்டாங்க எப்படியும் என்கிடு உடம்பை எடுத்துட்டு வரப்போரங்க ஆனா அது நம்ம டீமா இல்ல வில்லன் டீமா என்று இப்போதைக்கு நமக்கு தெரியாது” என்றாள்.

“நம்ம ஆளுங்க எடுத்துட்டா பிரச்சினை இல்லை…. ஆனா மித்ரத் கைல மாட்டிக்கிட்டா கண்டிப்பா நாம அதுக்கு விடக்கூடாது.”

“என்ன சொல்றே?”

“ஒரு பிளான் இருக்கு… அவங்க வெளியே வரட்டும் நாம ஏற்கனவே அங்க வெளில வேனோட தயாரா இருப்போம்…. என்கிடு பாடியை கடத்திடுவோம்….”

“ஆமா.. அப்போதான் கில்கமேஷ் மேலே மித்ரத் ஆளுங்களுக்கு  சந்தேகம் வராது….”

“கரெக்ட்… நான் இப்போவே அதுக்கான ஏற்பாடுகளை பண்ண போறேன்.. நீ கிளாஸுக்கு போ” என்று அவளை அனுப்பிவிட்டு விக்டர் நகர்ந்தான்.

***************

பல வருசங்களா நிலத்துக்கு கீழேயே  மூடி இருந்தால நிலவாழ் ஜீவராசிகள், அதோட காவல் தெய்வங்களோட  நடமாட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தது. முதலில் ஆயிரக்கணக்கில் எலிகள் பாய்ந்து வந்தன. ஆள் நடமாட்டம் இருந்ததனால் அவை வெளியே செல்ல பாய்ந்தன. ஆனால் லோகேஷ் அவற்றை சுட ஆரம்பித்தான்.

கில்கமேஷ்அவற்றை சுடவேண்டாம் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து நிலம் அதிர்வது போல சத்தம் கேட்டது. எல்லோரும் திரும்பி பார்த்தனர்.

“ஆஹ்….”

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

உள்ளே ஒரே புழுதி மயமாகவும் சிலந்திக்கூடுகளும் இருந்தன. என்கிடுவுக்காக விசேஷமாக அமைக்கப்பட்ட அந்த மாளிகையில் எது எது எங்கெங்கே இருக்கிறது என்ற விடயம் எல்லாம் கில்கமேஷுக்கு அத்துப்படி. இருந்தும் மாளிகையில் என்கிடு சடலம் பாதுகாக்கப்பட்டு…

உள்ளே ஒரே புழுதி மயமாகவும் சிலந்திக்கூடுகளும் இருந்தன. என்கிடுவுக்காக விசேஷமாக அமைக்கப்பட்ட அந்த மாளிகையில் எது எது எங்கெங்கே இருக்கிறது என்ற விடயம் எல்லாம் கில்கமேஷுக்கு அத்துப்படி. இருந்தும் மாளிகையில் என்கிடு சடலம் பாதுகாக்கப்பட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *