Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 51 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 51

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“ஆஹ்….. எவ்வளவு பெரிய எலி!!!!!” என்று ஆர்தர் நடுங்கிப்போனான். அப்போ ஜெனியை கேட்கவேண்டுமா? அவள் கில்கமேஷ் பின்னாடி ஒளிந்து கொண்டாள்.

“இவ்வளவு பெரிய எலியா… ஹ்ம்ம்.. என்னோட ஒரே ஒரு புல்லட் போதும் உன்னை கொன்னுட” என கர்வமாக சொல்லி கொண்டே அதற்கு குறிவைத்தான் லோகேஷ்.

“வேணாம் சார்… இது ஒன்னும் நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண எலி கிடையாது…. எலிகளோட ராணி…. நம்ம சாதாரண எலியை விட இதுக்கு 300 மடங்கு சக்தி இருக்கு உங்க புல்லட்டை வெச்சல்லாம் இதை ஒண்ணுமே பண்ண முடியாது.” என்றான் கில்கமேஷ்.

“ஆமா அவர் சொல்றது தான் சரி…. நாம ஏதாவது பண்ணா தான் அதால நமக்கு பிரச்சினை நாம ஒண்ணுமே பண்ணலன்னா அதுவும் சும்மாவே இருந்துடும்.” என்றாள் ஜெனி

“இங்க நீங்க எனக்கு ஆர்டர் போடகூடாது நான் தான் உங்களுக்கு பாஸ் அதை மனசுல வெச்சிக்கொள்ளுங்க” என்றான்.

“க்கும் எலி வாயில தான் உனக்கு சாவு என்னும் போது அதை நாங்க ஏன் தடுக்கணும் ஆகட்டும் ஆகட்டும்.” என்றான் மனதுக்குள்.

துப்பாக்கி ட்ரிக்கரை அழுத்தியதும் உடனே எலி காணாமல் போய் விட்டது.

“ஹா… எங்க போச்சு இங்கேதானே இருந்தது..?” என்று சொல்லும் போதே அவர்களுக்கு பின்னாடி இருந்து அதன் மூச்சு சத்தம் கேட்டது. ரொம்பவும் பயத்துடன் ஆர்தர் மற்றும் ஜெனி திரும்பி பார்க்க கொலை வெறியுடன் நாவிலிருந்து எச்சில் வழிய அது அவர்களை பார்த்து கொண்டிருந்தது.

“ஐயையோ இது நம்மள மொத்தமா கடிச்சி முழுங்க போகுது போல இருக்கே கேகே ஏதாவது பண்ணு.” என்று கத்தினான்.

“பயப்படாதீங்க. இதை நானே கொல்லுறேன்.” என்று மறுபடியும் துப்பாக்கியை தூக்கிட்டு வந்து முன்னாடி நின்றான். அவ்வளவு தான் அது அவனை ஒரே அடியாக தூக்கி சுவற்றில் வீசிவிட்டது. எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர். அவன் இறந்து விட்டான். ஆர்தர் அவனுக்கு மூச்சிருக்கிறதா என  அருகே சென்று பார்த்தான்.

“உங்க உதவியை நான் எண்ணிக்கும் மறக்கமாட்டேன்.” என கில்கமேஷ் அந்த எலி கிட்ட சொன்னதும். உடனே அவ்வளவு பெரிய எலி ஒரு அழகிய பெண்ணாக  உருவம் கொண்டது.

“என்ன? இவங்க தான் அந்த எலியா?” என்று ஜெனியும் ஆர்தரும் வாயைபிளந்து கொண்டிருந்தனர்.

“இவங்க எஸ்தர் இந்த மாளிகையோட காவல் தெய்வங்களில் ஒருத்தங்க என்னுடைய அழைப்பை ஏற்று நமக்கு உதவி பண்ணி இருக்காங்க.” என்று கே கே விளக்கினான்.

“உன் காரியம் இனிதே நிறைவேறும் வீரனே. என் கடமை முடிந்தது நான் சென்று வருகிறேன்.” என்று கூறி மறைந்தார் எஸ்தர்.

“உண்மையிலேயே அசத்திட்டே கில்கமேஷ் ஆமா இப்படி எத்துனை காவல் தெய்வங்கள் இங்கே இருக்கு…?”

சரியா நியாபகம் இல்லை ஒரு ஆறேழு இருக்கலாம்.”

“அதெல்லாம் இருக்கட்டும். இவனை இப்போ என்ன பண்ணுறது..?” என்றாள் ஜெனி.

“ஆஹ்… உன்னோட தலைல வெச்சி கூடவே தூக்கிட்டு வா…”

“ஏய்!”

“பின்னே அதான் மண்டைய போட்டானே இனி நமக்கு யாரும் தடையில்லை நாமளே என்கிடு உடலை எடுத்துக்கலாம்…” என்றான் ஆர்தர் அப்போது ஜெனிக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது.

“மீரா கிட்ட இருந்து மேஸ்சேஞ்…”

“என்னவாம்.. ஏதும் ஆபத்தா…?” என்று கேட்க செய்தியை வாசித்தவள் பிரம்மை பிடித்து போய் நின்றாள்.

“மித்ரத் அவன் கூட இன்னொரு ஆளையும் கூட்டிகிட்டு உள்ளே வந்துட்டு இருக்கானாம் அதோட நம்ம கூட வந்தவன் செத்துட்டான் என்கிற விடயம் அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சி இருக்கு…” என்றாள்.

“ஓஹ். மை காட்…… சீக்கிரமே நாம இங்கிருந்து போயிடலாம்… கில்கமேஷ் வா நாம என்கிடு உடலை எடுத்துக்கு போயிடலாம்…” என்றான் ஆர்தர்.

சற்று நேரம் யோசித்து கொண்டிருந்த கில்கமேஷ்…

“இது ரொம்ப ரிஸ்க்கான வேலை மோதிரம் மட்டும் என்கிட்ட இருந்திச்சி என்றால் நான் இவங்க யாரையும் பார்க்க மாட்டேன். அடிச்சி துவம்சம் பண்ணிட்டு போய்க்கிட்டே இருப்பேன். ஆனா மோதிரம் நம்ம கைல இல்லாததால எடுத்து வைக்குற ஒவ்வொரு ஸ்டெப்பையும் ரொம்ப ஜாக்கிரதையாக எடுத்து வைக்கணும்.” என்று சொல்ல ஜெனி.

“நீ சொல்றது ரொம்பவும் சரி…. இங்கிருந்து நாம வெளிய போக ஒரே ஒரு வழிதான் இருக்கு… அதனால முடிஞ்சவரை அவங்களை எப்படியாவது திசை திருப்ப வேண்டி இருக்கும்…” என்றாள்.

“ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவே இல்லை இவன் செத்தது அவனுங்களுக்கு எப்படி தெரியும்…????” என்று ஆர்தர் கேள்வி எழுப்ப,

அதே நேரம் லோகேஷ் விழுந்து கிடந்த இடத்தில் இருந்து “கினீக், கினீக் “என்று சத்தம் வந்து கொண்டிருந்தது.

மூவரும் திடீரென சத்தம் வந்ததால் முதலில் பதற்றமடைந்தனர். ஜெனி கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு லோகேஷ் விழுந்து கிடந்த இடத்துக்கு அவள் சென்றாள். சத்தம் அவனுடைய பாக்கெட்டில் இருந்து வந்தது.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“ஆஹ்….. எவ்வளவு பெரிய எலி!!!!!” என்று ஆர்தர் நடுங்கிப்போனான். அப்போ ஜெனியை கேட்கவேண்டுமா? அவள் கில்கமேஷ் பின்னாடி ஒளிந்து கொண்டாள். “இவ்வளவு பெரிய எலியா… ஹ்ம்ம்.. என்னோட ஒரே ஒரு புல்லட் போதும் உன்னை…

“ஆஹ்….. எவ்வளவு பெரிய எலி!!!!!” என்று ஆர்தர் நடுங்கிப்போனான். அப்போ ஜெனியை கேட்கவேண்டுமா? அவள் கில்கமேஷ் பின்னாடி ஒளிந்து கொண்டாள். “இவ்வளவு பெரிய எலியா… ஹ்ம்ம்.. என்னோட ஒரே ஒரு புல்லட் போதும் உன்னை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *