Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 54 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 54

  • 68

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“ஆஹ்ஹ்… ஆஹ்..” என்று ஜெனி கூச்சலிட்டு கத்த ஆர்தர் பயத்தில்

“என்னாச்சு ஏன்…கத்தினே ஜெனி.. சொல்லு ஜெனி..”

“ஆஹ்… அது அது வந்து… ஒன்னுமில்ல..” என்றாள் லேசான ஒரு வெட்கத்துடன்.

உண்மையிலேயே  ஆர்தருக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை.

“சரி அப்படியே நில்லு… நான் உன்னை நெருங்கி வர்றேன்…” என்றான்.

“ஆஹ்… அதெல்லாம் ஒன்னும் வேணாம் நானே! உங்க கிட்ட வர்றேன்.” என்று அவசர அவசரமாக சொல்லிக்கொண்டே பதற்றத்தில் எப்படியோ இருவர் கைகளையும்  பிடித்து கொண்டாள். கில்கமேஷும் ஒன்றுமே பேசாமல் வந்ததும். ஆர்தருக்கு சந்தேகம் பிடித்து கொண்டது.

“என்ன நீ ஒண்ணுமே பேசாம வர்ரே… கேகே… இங்க தான் இருக்கியா…?”

“ஹ்ம்ம்…” என்றான்.

“கொஞ்ச நேரத்தில் இன்னொரு ரூம் வந்துடும்… அது… அது..” என்று தடுமாறிய படியே கில்கமேஷ் சொன்னான்.

“என்ன உன்னோட பேச்சுல ஒரு தடுமாற்றம் தெரியுது… நீ இப்படி பேசி நான் பார்த்ததே… இல்லியே!” என்று கேட்டாள் ஜெனி.

“அது… வந்து… சொல்லிர்றேன். என்கிடு இறந்த போது… அவனுக்கான இந்த மாளிகையில் அவனை விட்டுட்டு என் தாயோட பொறுப்பில் எல்லாத்தையும் விட்டுட்டு நான் போய்ட்டேன். போறதுக்கு முதல் இந்த மாளிகைக்கு சில காவல் தெய்வங்களை அவங்க இஷ்டப்படி வேண்டி போட சொன்னேன். அதுல ஒண்ணு.  நாம இப்போ பாக்க போற எஸ்தர்”என்றான்.

எஸ்தர் என்றதும் ஜெனிக்கு ஏதோ ஒரு நியாபகம் வந்துவிட்டது. கில்கமேஷ் மேல இஷ்டப்பட்ட பெண் காவல் தேவதை அவள். அவள் ஆசைக்கு அடங்காததால் தான் அவள் தேவலோக காளையை அவன் மேல் ஏவி விட்டாள். அதையும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து கொன்றுவிட்டனர். கில்கமேஷ் தன்னை மறுத்ததுக்கும், அவள் ஆசை செல்ல பிராணியான தேவலோக காளையை கொன்றதுக்கும் என்கிடு தான் காரணம் என்று எஸ்தர் நம்புகிறாள்.

“அப்போ அவங்களும் நமக்கு உதவ மாட்டார்களா??? போச்ச்சு போ…” என்றான் ஆர்தர்.

கதவு எதிர்ப்பட்டது.

“வேற வழியில்லை என்பதால் தான் அன்னிக்கி என்னோட அம்மா எஸ்தரை இங்க அழைச்சாங்க. அப்போ இப்படி ஒரு நாள் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவும் இல்லை இப்போவும் அதே வேறு வழியில்லாமல் அவளை எதிர்கொள்ள வேண்டும்.”என்றான் கேகே.

அவன் அப்படி சொல்லும் போதே ஜெனிக்கு உள்ளூர ஏதோ பண்ணியது. இப்போது உள்ளே போயே ஆகணும். கதவை திறந்தான். உள்ளே சுவர்க்கத்தை போல இருந்தது. அவ்வளவு ரசனை உள்ளவள் அவள். ஆனால் அவளை காணும் இந்த ஒரு இடத்தை தாண்டிவிட்டால் போதும் என்கிடு உடலை அடைய முடியும். அடுத்த  எட்டு எடுத்து வைக்க முதல் “நில்லு” என்று சத்தம் கேட்டது. கூரையில் இருந்து மெல்ல மிதந்து இறங்கி வந்தாள் அவள் எஸ்தர் பேரழகி.

“வாஆஆவ்…. இந்த பெண்ணையா    வேணாம் எண்டே” என்று ஆர்தர் சொல்ல ஜெனி கோபத்தில் அவன் காலை மிதித்தாள்.

“உன்னை மறுபடி பார்த்ததில் ரொம்ப சந்தோசம் கில்கி”

“என்ன கில்கியா????”

“நான் அவனை அப்படித்தான் கூப்பிடுவேன். இவ்வளவு நாளும் எங்க போய்ட்டே கில்கி…”,

“அது… எங்களை இந்த இடத்தை கடக்க அனுமதி கொடு…” என்றான் கில்கமேஷ்.

“எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“என்னோட நண்பனை நான் பாக்கணும். அவனுக்கு உயிர் கொடுக்க வேண்டும்.”

“ஹாஹாஹா…. ஹாஹாஹா… அது நடக்காது… நடக்கவும் விடமாட்டேன்.”என்றாள்.

“வழிய விடு …” என்றவன் அவளை மீறி கடக்க முற்பட்ட போது குறுக்கே வந்தாள். அவனை சூழ சாய்ந்தாள்.

“என்னை தாண்டி இங்கிருந்து போய்டமுடியும் என்று நினைக்கிறாயோ?” என்று கேட்டு கொண்டே அவனை வருட ஆரம்பித்தாள்.

அதை பார்த்து ஜெனிக்கு பற்றி கொண்டு வந்தது. ஏற்கனவே அவனை அடைய நினைத்தவள். பேரழகி வேறு. நல்லவேளை அந்த நேரம் என்கிடு இருந்தான். ஆனா இப்போ…. ஐயோ என்ன பண்ணுவேன். நாம சாதாரண மனுஷி இந்த பெண் தேவதையை எல்லாம் எதிர்த்து பேச கூட முடியாது. ஒருவேளை  என்கிடு உடலை எடுப்பதற்காக அவளுக்கு கட்டு பட்டு விட்டால்…. கூடாது இப்படி நடக்க நாம விடவே கூடாது. என்கிடுவுக்காக கில்கமேஷும் எதுவேணும் என்றாலும் செய்வான். ஆனா என்னோட  கில்கமேஷை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.” இப்படிப்பட்ட எண்ணங்களோடு ஜெனி கொஞ்ச நேரத்தில் யோசித்து கொண்டே இருந்தாள்.

“மரியாதையா… என்ன விட்டு விலகி போய்டு…” என்று எஸ்தரை தள்ளி விட்டான். அவள் சற்று தூரமாகி போனதும் மறுபடியும் ஜெனி மற்றும் ஆர்தர் கையை பிடித்து கடைசி கதவை அடைய வேகமாக எட்டுக்களை வைத்தான்.

“ஏய்… எத்தனை வருஷம் ஆனாலும் உன்னோட ஆணவத்தை உன்னால குறைச்சிக்கவே முடியல்ல. நான் உன்னை இங்கிருந்து விடப்போராதில்லை…” என்றவள் கதவுக்கு முன்னாள் ஒரு தீப்பிழம்பை ஏற்படுத்தினாள்.

“ஐயோ நெருப்பு…” என்று ஆர்தர் கத்த.

“அட இவன் வேற…”

கில்காமேஷும் தன் மொத்த சக்தியை பயன்படுத்தி காற்றில் ஒரு வாள் வீச்சு போல் வீச.  அந்த நெருப்பு அணைந்து போனது.”

“என்ன? உன்னோட நண்பனுக்கு உயிர் கொடுக்க விடமாட்டேன்… என்னோட ஆசைக்கு கட்டுப்படாத நீ சந்தோசமா இருக்க நான் விடவே மாட்டேன்.” என கத்தி கொண்டே சொல்ல உடனே அந்த சுவர்க்கம் போன்ற இடம் நெருப்பு பிழம்பாக மாறியது. உன்னோட தாயான நின்சுனின் பணிவான வேண்டுகோள் இது. என்னை தாண்டி இங்க யாருமே போக முடியாது. ஒருவேளை. எலி ராணியோ, கழுகு அரசனோ, இருளின் கடவுளோ உனக்கு உதவி இருக்கலாம்.  நான் உனக்கு கண்டிப்பா உதவ முடியாது…”

என்றவள் உடனே ஏதோ ஒரு மந்திர வார்த்தையை உச்சரித்தாள்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“ஆஹ்ஹ்… ஆஹ்..” என்று ஜெனி கூச்சலிட்டு கத்த ஆர்தர் பயத்தில் “என்னாச்சு ஏன்…கத்தினே ஜெனி.. சொல்லு ஜெனி..” “ஆஹ்… அது அது வந்து… ஒன்னுமில்ல..” என்றாள் லேசான ஒரு வெட்கத்துடன். உண்மையிலேயே  ஆர்தருக்கு என்ன…

“ஆஹ்ஹ்… ஆஹ்..” என்று ஜெனி கூச்சலிட்டு கத்த ஆர்தர் பயத்தில் “என்னாச்சு ஏன்…கத்தினே ஜெனி.. சொல்லு ஜெனி..” “ஆஹ்… அது அது வந்து… ஒன்னுமில்ல..” என்றாள் லேசான ஒரு வெட்கத்துடன். உண்மையிலேயே  ஆர்தருக்கு என்ன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *