Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 55 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 55

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அவளது மந்திர வார்த்தைகளால் தேவலோகத்தில் இருந்து பல மிருகங்கள் அங்கு தோன்றின. ஒரு கணம் எல்லோரும் பதற்றமடைந்தனர். இந்த இடத்தில் இவற்றோடு மோதி நேரத்தை வீணடித்து விட்டால். மித்ரத் வந்து எல்லாவற்றையும் பார்த்துவிடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போதைக்கு அவன் எங்கே இருக்கிறான் என்று கூட இவர்களுக்கு தெரியாது.

“உன்னோட காளையை கொன்றதை மறந்து விட்டாயா?”

“மறக்க முடியுமா? என்னோட இந்த மிருகங்களை உன்னால சமாளிக்க முடியாது. ஹ்.. உனக்கு இப்போ உறுதுணைக்கு உன்னோட நண்பனும் கிடையாது. என்ன பண்ணப்போறே கில்கி கல்நெஞ்சக்காரா???” என்று எஸ்தர் ஏளனமாக கேட்டாள்.

அவள் சொல்வதில் பாதி உண்மை இருந்தது. இவை சாதாரண உலகத்து விலங்குகள் அல்லவே அத்தோடு இவற்றை அடக்க தனி ஒருவனாக நிச்சயம் கில்கமேஷால் முடியாது. அவை ஒவ்வொன்றாக கில்கமேஷோட சண்டைக்கு வந்தன. அவனும் அவற்றை மறித்தும், அடித்தும் மறுபடி சண்டையிட்டான். ஒரு ஒற்றைக்கொம்புள்ள குதிரை அவனை தோள்பட்டையில் நன்றாகவே தாக்கி விட்டது. அவன் இரண்டடி பின்வாங்கினான். ஆர்தரும் ஜெனியும் ஒரு ஓரமாக நின்று அவனுக்கு அடிப்பட்டபோது கத்தினார்கள்.

“கில்கமேஷ்… பார்த்து…”

“ஆஹ்..”

“ஹாஹாஹா…” என்று எஸ்தர் சிரித்து கொண்டிருந்தாள். ஜெனிக்கு கில்கமேஷ் அடிவாங்குவதை பார்க்க முடியவில்லை.

“நிறுத்துங்க…..”என்று கத்தினாள்.

“யார் நீ…. எங்க விஷயத்தில் நடக்குற இந்த சண்டையை நிறுத்த சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்… உன்னை….” என்று அவள் மேல் நெருப்பை ஏவினான் எஸ்தர்.

“ஜெனி…. ” என்று ஓடிப்போய் அதை அவன் வாங்கி கொண்டான் கில்கமேஷ் நெருப்பை சுதாரித்து கொண்டு எழுந்த கில்கமேஷ் பின்னாடி திரும்பி ஜெனி கிட்ட…

“பயப்படாதீங்க.. இந்த சண்டையில் எப்படியும் நான் ஜெயிச்சிடுவேன்.” என்றான்.

“இல்ல கில்கமேஷ்… நாங்க இதுக்கு உனை அனுமதிக்க மாட்டோம்.” என்றவள் எஸ்தரை நோக்கி…

“ஏய். பெண் தேவதையே….! நாங்க இந்த இடத்தை நிச்சயம் கடக்க தான் போறோம். நீதியான ஒரு காரணம் எங்க கூடவும் இருக்கு. உன்னோட பழைய பகையை மனசுல வெச்சி கொண்டு நீ இவரை தாக்க முடியாது. நியாயமான வழியில் மோது. இங்க நான் இருக்கேன். இவனை நெருங்க முதல் நீ என்னை சமாளிக்கணும்.” என்றாள்.

“ஹேய்… இவளுக்கு என்ன பைத்தியமா? எதுக்காக தன் தலையை அடகு வெக்கிறாள்…?” என்று ஆர்தர் கில்கமேஷ் கிட்டயே கேட்டான். உண்மையில் அவள் பேசியது கேட்டு அவனே அதிர்ந்து போய் நின்றான்.

“உனக்கென்ன மூளை கொளம்பிடுச்சா… இந்த பக்கம் வா…” என்று அவளை பிடித்து இழுத்தான்.

இதை பார்த்த எஸ்தர் ஜெனிக்கு எதுவும் நடக்க கூடாது என்று கில்கமேஷ் கண்ணில் தெரிந்த பயத்தினை உணர்ந்தாள். அவளுக்கு புரிந்து விட்டது. உடனே ஜெனியின் சவாலை ஏற்று கொண்டாள். எப்படி எஸ்தரின் இஷ்டவிலங்கை இருவரும் சேர்ந்து கொன்றார்களோ அதே போல அவனுக்கு பிடித்தவளை தான் கொன்றுவிடவேண்டும் என்று எஸ்தர் முடிவெடுத்தாள்.

“ஜெனி இது நீ நினைக்கிற மாதிரி இல்ல… அவ ஒரு மனுஷி இல்ல… நீ அவளோட போட்டி போட…” என்று ஜெனியை தடுக்க முயற்சி செய்தான்.

“ஆமா ஜெனி இதை கில்கமேஷும் அந்த எஸ்தரும் பார்த்து கொள்ளட்டும். நீ விலகிடு.” என்றான் ஆர்தர்.

ஆனால் ஜெனி. “முடியாது… உங்க ரெண்டுபேருக்கும் என் மேல நம்பிக்கையே இல்லியா..?” என்று அழுத்தமாக கேட்டாள் ஜெனி. இருவரும் ஒன்றும் பேசவில்லை.

“என்மேல சத்தியமா சொல்லுறேன். நீங்க ரெண்டு பேரும் எனக்கு என்ன ஆனாலும் கிட்ட வர கூடாது. ஒரு பத்து நிமிஷம் நானும் இந்த காவல் தேவதையும் எங்க கணக்கை தீர்த்து கொள்ளுறோம்.” என்றவள் அவர்கள் இருவரையும் கடந்து எஸ்தர் முன்னாடி வந்து நின்றாள்.

“ஐயோ ஜெனி….” அவள் மீது சத்தியமிட்டதால் இருவருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“சொல்லு நான் உன்னை எப்படி கொல்லனும்….” என்று ஏளனமாக கேட்டாள் எஸ்தர்.

“நீ ஒரு காவல் தேவதை நான் ஒரு சாதாரண மனுஷி நாம ரெண்டு பேரும் மோதிக்கொள்ளுவோம். ஆனா நீ எந்தவிதமான மந்திர தந்திரத்தையோ சக்திகளையோ பயன்படுத்த கூடாது. என்னோட இந்த நிபந்தனைக்கு நீ உடன்பட்டால் உன்னோட மோத நான் தயார்.” என்றாள்.

“ஐயோ நாம இப்போ எந்தன் பண்ணுறது?”

“வேற வழியில்லை ஆர்தர் சத்தியத்தை மீறனும் தயாரா இரு நான் சொல்லும் போது ஓடிப்போய் கதவை திற” என்று கேகே ஒரு திட்டம் வைத்திருந்தான்.

இருவரும் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இரண்டு பெண்கள் ஆளுக்காள் அடித்தும் குத்தியும், தரையில் புரண்டும் சண்டையிட்டு கொண்டிருக்க அதை இரு ஆடவர்கள் வேடிக்கை பார்ப்பதென்பது யாருக்கு தான் இனிக்கும் உள்ளூர கரறுவிக்கொண்டே நின்றான் கில்கமேஷ்.

ஜெனிக்கி கொஞ்சம் பலமாக பலமுறை அடி விழுந்தது. என்ன இருந்தாலும் அவள் காவல் தெய்வம் என்பதை அடிக்கடி நிரூபித்து கொண்டிருந்தாள் எஸ்தர். வாயின் ஓரத்தில் இருந்து இரத்தம் கசிந்திட கீழே விழுந்த ஜெனி மறுபடி எழும்பி நின்று தன்னை நேர்ப்படுத்தி கொண்டாள். இந்த நேரத்தில் தான் கில்கமேஷும் ஆர்தருக்கு சைகை காட்ட மெல்ல மெல்ல அவனும் கதவுகளை நெருங்கினான்.

ஆனால் அவன் எதிர்பாராத ஒன்று நடந்தது. எஸ்தர் சோர்வடையும் நேரம் பார்த்து ஜெனியை இழுத்து கொண்டு கதவுக்கு அந்த புறம் ஓடுவது என கேகே எண்ணிக்கொண்டிருக்க ஜெனி ஏதோ புதிய தெம்பு பெற்றவளாய் எஸ்தரை சரமாரியாக ஜோடோவில் தாக்கி கொண்டிருந்தாள். எஸ்தரால் இவளை சமாளிக்க முடியவில்லை. நன்றாக எழுந்து நிற்க கூட முடியாது தொங்கினாள். கில்கமேஷும் ஆர்தரும் வாயை பிளந்து கொண்டு இக்காட்சியை பார்த்து கொண்டிருந்த போது கடைசியாக எஸ்தர் கீழே கிடந்த படி.

“எங்கிருந்து இவ்வளவு பலம் பெற்றாய்?” என்று கேட்டாள். எஸ்தரை தூக்கி நிறுத்திய ஜெனி அவள் காதருகே ஏதோ சொல்ல வெகு ஆச்சர்யமாக ஜெனியை பார்த்தாள் எஸ்தர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அவளது மந்திர வார்த்தைகளால் தேவலோகத்தில் இருந்து பல மிருகங்கள் அங்கு தோன்றின. ஒரு கணம் எல்லோரும் பதற்றமடைந்தனர். இந்த இடத்தில் இவற்றோடு மோதி நேரத்தை வீணடித்து விட்டால். மித்ரத் வந்து எல்லாவற்றையும் பார்த்துவிடவும் வாய்ப்பு…

அவளது மந்திர வார்த்தைகளால் தேவலோகத்தில் இருந்து பல மிருகங்கள் அங்கு தோன்றின. ஒரு கணம் எல்லோரும் பதற்றமடைந்தனர். இந்த இடத்தில் இவற்றோடு மோதி நேரத்தை வீணடித்து விட்டால். மித்ரத் வந்து எல்லாவற்றையும் பார்த்துவிடவும் வாய்ப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *