காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 57

  • 7

ராபர்ட் கழுத்தில் கத்தியோட மித்ரத்தின் ஆட்கள் இருவரை கண்டதும் இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“ஓஹ் மை… ராபர்ட்… நீ” என்று ஜெனி உணர்ச்சி வசப்பட்டு முன்னாடி அடியெடுத்து வைக்க…

“ம்ம்..”என்று அவளை மிரட்டி அங்கேயே நிற்க வைத்தான் மித்ரத்.

“ரொம்ப புத்திசாலிகள் என்று நினைப்போ… என்னோட கோட்டைக்குள்ள எனக்கு தெரியாம ஒரு உளவாளியை வெச்சி என்னையே ஏமாத்தலாம் என்று பார்த்தீங்கள்லே…”

“அது….”

“உங்களுக்கு உங்க நண்பன் உயிர் முக்கியம் என்றால் என்கிடு உடலை எங்களுக்கு கொடுத்திடனும் இல்லே என்னு அடம்பிடிச்சா எல்லோரையும் குருவியை சுர்ரது போல சுட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன்.”என்றான்.

ஜெனிக்கும் ஆர்தருக்கும் ஒரே குழப்பம் இப்போது கில்கமேஷ் யார் பக்கம் இருப்பான். அவனுடைய உயிர் நண்பன் என்கிடு பக்கமா?  இல்ல அப்பாவி ராபர்ட் பக்கமா? முடிவு அவன் கையில் என்பதால் இருவரும் அவனை பார்த்தனர்.

“எல்லோரும் உன்னோட முடிவுக்காக தான் வைட்டிங்… கிங் கில்கமேஷ்.” என்று வேண்டுமென்றே மித்ரத் கேட்டான்.

சற்று நேரம் எதையோ யோசித்து கொண்டிருந்த  அவன் “கொண்டுபோ” என்றான்.

இந்த பதில் எல்லோரையும் கொஞ்சம்  அதிர்ச்சியடைய செய்தது. ராபர்ட் தன் பிடியை மீறி  திணறி

“வேணாம் கில்கமேஷ்… தப்பான முடிவு எடுக்காதே… நாம இவ்வளவு கஷ்டப்பட்டது. இதுக்குதானா? என்னோட உயிரை பத்தி கவலைப்படாதே. அவனை கொன்னுடு.” என்று ராபர்ட் கத்த அவன் வாயில் குத்தினான் மித்ரத்

“ஐயோ..”

“நான் முடிவு பண்ணிட்டேன்…. என்கிடு உடலை எடுத்துக்க இப்போவே ராபர்ட்டின் கழுத்தில் இருந்து கத்திய எடுத்து விட்டு இங்கிருந்து போய்டு.” என்றான்.

“ராபர்ட்…ட விட்டுறோம் ஆனா அதுக்கு முதல் இந்த பாடிய நீயே தூக்கிட்டு வந்து எங்க வண்டியில சேர்த்துடு.” என்று சொல்ல அதற்கும் சம்மதித்தான்.

மித்ரத்தின் திட்டப்படி கில்கமேஷும் என்கிடு உடலை அவனே சுமந்து கொண்டு வெளியே வர கூடவே ஜெனியும் ஆர்தரும் எதையோ பறிகொடுத்தது போல் பின்தொடர ராபர்ட் இன்னும் அவர்கள் பிடியில் இருந்தான்.

மீராவுக்கு நிலைமை நன்றாக புரிந்து விட்டது. அவளால் அங்கிருந்து நகரமுடியவில்லை. என்ன நடக்கிறது என்பதை பார்த்து கொண்டிருந்தாள். அதே போல முன்கூட்டியே மறைவாக தமது வாகனத்துடன் காத்து கொண்டிருந்த டிடானியாவும் விக்டரும் குழம்பி போய் நின்றனர்.

“என்ன இது ஐயோ ராபர்ட் அவங்க கிட்ட மாட்டி கிட்டானா???” என்று பதறினாள்.

“அப்படித்தான் தெரியுது…. கேகே வே என்கிடு உடலை தூக்கிட்டு போய் அவங்க வண்டியில வெய்க்குறானே. என்னவா இருக்கும். ஒருவேளை மிரட்டி இருப்பானோ.”

என்கிடு உடலை வேனில் வைத்ததும் ராபர்ட்டை விடுவிப்பார்கள் என்றே மூவரும் நினைத்தனர். ஆனால் மித்ரத் மூவர் மீதும் திடீரென மயக்க மருந்து அடித்து அவர்களையும் வேனில் தூக்கி போட்டதும் மீரா, டிடானியா, விக்டர் மூவரும் கதி கலங்கி போய் நின்றனர். அங்கிருந்து மித்ரத்தின் ஆட்களும் வண்டியும் செல்லும் போது  மீரா ஓடிவந்து விக்டரின் வண்டியில் ஏறி கொண்டாள்.

“கம்மோன்…. அந்த வண்டிய ஃபாலோவ்  பண்ணு.” என்றாள் மீரா உடனே டிடானியாவும் விக்டரும் வண்டியில் ஏறிக்கொண்டு புறப்பட்டனர். இவர்கள் பின்னாடியே பின்தொடர்ந்து செல்ல மித்ரத்தின் வண்டி அந்த ஆய்வுகூடத்தை நோக்கி சென்றது.

“என்ன இவன் இந்த லேபிற்கு போறான்..?”என்று விக்டர் சொல்ல…

“ஏன்… அங்க என்ன?”என்று கேட்டாள் மீரா.

“அங்கதான் எங்க அம்மாவை அவன் கொன்றான்.” என்று டிடானியா சொன்னதோடு வண்டி பிரேக் போட்டு நின்றது.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ராபர்ட் கழுத்தில் கத்தியோட மித்ரத்தின் ஆட்கள் இருவரை கண்டதும் இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. “ஓஹ் மை… ராபர்ட்… நீ” என்று ஜெனி உணர்ச்சி வசப்பட்டு முன்னாடி அடியெடுத்து வைக்க… “ம்ம்..”என்று அவளை மிரட்டி அங்கேயே…

ராபர்ட் கழுத்தில் கத்தியோட மித்ரத்தின் ஆட்கள் இருவரை கண்டதும் இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. “ஓஹ் மை… ராபர்ட்… நீ” என்று ஜெனி உணர்ச்சி வசப்பட்டு முன்னாடி அடியெடுத்து வைக்க… “ம்ம்..”என்று அவளை மிரட்டி அங்கேயே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *