Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 59 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 59

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“இவனுக்கு ஏதோ நடந்துடுச்சு ஜெனி… தலையில் ஏதும் அடிபட்டுடுச்சா என்னன்னு பாரு” என்றான் ஆர்தர்.

“அட நீ வேற.. நான் உண்மையா தான் சொல்லுறேன்..” என்றவன் எயார்போர்டில் தான் சந்தித்த நபர்களில் இருந்து நடந்தவற்றை சொன்னான்.

************

வந்து அவன் முன்னாடி நின்றது ராபர்ட்டின் அம்மாவும் அப்பாவும். இருவரும் இரு வேறுபட்ட துறையில் எக்ஸ்பேர்ட்ஸ்.

தன் மகன் ராபர்ட்டை  விமான நிலையத்தில் வைத்து மித்ரத்  பெர்சனல் அசிஸ்டண்ட் என்று அறிமுகப்படுத்திய போது இருவரும் பலத்த அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி மகனிடமே கேட்டு தெரிந்து கொள்ளும் நோக்கில் மித்ரத் முன்னாடி உண்மையை போட்டு உடைக்காமல் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.

(அப்போது என்ன நடந்தது… என்று வாசகர்களுக்கு ஏலவே தெரியும்.)

ராபர்ட் நடந்தது அனைத்தையும் ஹேமா மற்றும் ஜான் கிட்ட சொன்னதும் தாங்கள் இங்கு வரவழைக்கப்பட்ட நோக்கத்தை அவர்களும் கூறினர்.

“இவன் கிட்டதட்ட ஒருவாரமா எங்களை கான்டெக்ட் பண்ணி அவன் செலவிலேயே எங்களை இங்க எடுத்தான். என்ன ஆராய்ச்சி என்று இன்னமும் தெரியாது. பொதுவா நாங்க இன்னது என்னு தெரியாத எக்ஸ்பிரிமண்ட் எல்லாம் எடுத்துக்க மாட்டோம். ஆனா மித்ரத் எங்களை அப்ரோச் பண்ணிய விதம் பிடிச்சி போய் தான் என்ன ஏதுன்னு ரொம்ப ஆராயாம இங்க வந்தோம். ஆனா இங்க உன்னை அவனோட பீ ஏ வா பார்த்ததும் எங்களுக்கு ஒண்ணுமே புரியல்ல.” என்றாள் ஹேமா.

“இவ்வளவு விஷயம் நடந்து இருக்கு நீ ஒரு வார்த்தை எங்க கிட்ட சொல்லல இல்ல” என்று அப்பா ஒருமாதிரி கேட்டபோது… ராபர்ட் கவலைப்பட்டான்.

“இதுக்காக நீங்க என்னை எப்படி தண்டிச்சாலும் அதை ஏத்துக்க நான் தயார் ஆனா இப்போ வேணாம். நாங்க எதுக்காக வந்தோமோ அதை முடிச்ச அப்பறம் ப்ளீஸ்.” என்றான் ராபர்ட்.

அவன் கிட்ட வந்த ஹேமா, அவன் தலையை தடவி கொண்டே

“உன்னை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்குடா மித்ரத் எப்பேர்ப்பட்ட கெட்டவன்னு தெரியாம அவனுக்கு உதவ சம்மதிச்சிட்டோம். இப்போ நாங்க உங்க கூட இருக்கோம். தைரியமா போராடு.” என்றார்.

அப்பாவும் அவனை பார்த்து

“வெல்டன் மை bபோய் “என்றார்.

*********************

இதுதான் நடந்தது. அங்க இருந்து இங்க அகழ்வாராய்ச்சி நடக்குற இடத்துக்கு வந்த போது மித்ரத் உள்ளே போய்ட்டதா சொன்னாங்க. சோ நானும் உள்ளே வந்தேன்.

ஒரு கட்டத்தில் மித்ரத்தை சந்திச்சேன். அவன் தனியா தான் அங்க நின்னுட்டு இருந்தான். அப்பறம் போன் பண்ணி அவங்க ஆளுங்க ரெண்டுபேர உள்ள வரவழைச்சான். எனக்கு ஒண்ணுமே புரியல்ல. என்னை எப்படி கண்டுபிடிச்சான்னு புரியல்ல. அவனுக்கு என்மேல முன்னரே சந்தேகம் இருந்து இருக்கணும்.. ஏதோ ஒரு விஷயத்தில் என்னை உளவாளி என்னு கண்டுபிடிச்சிருக்கான். அதுக்கப்புறம் நடந்தது உங்களுக்கே தெரியுமே!” என்றான்.

“எல்லாம் ஒரு வகையில் நல்லதுக்கு தான் இப்போ கண்டிப்பா உங்க அப்பா அம்மா நமக்கு உதவுவார்கள் இல்லே”

“ஆமா கண்டிப்பா எனக்கு அவங்க மேல முழு நம்பிக்கை இருக்கு” என்று ராபர்ட் சொல்லி கொண்டு இருக்கும் போதே அங்கு வேறு சிலர் பேசும் சத்தம் கேட்டது.

“யாரோ வர்றாங்க…?” என்ற ஆர்தர் எல்லோரையும் அமைதியாக இருக்க சொன்னான். அங்கே வந்தது மித்ரத், ஹேமா, மற்றும் ஜான் அத்தோடு மித்ரத்தின் அடியாட்கள் இருவர்.

“இவங்க தான் உன்னோட அம்மா அப்பாவா…” என்று மெதுவாக கேட்டாள் ஜெனி.

“ம்ம்..”என்று தலையசைத்து சொன்னான் ராபர்ட்

அவர்கள் ராபர்ட்டை  சிறைக்குள் கண்டதும் அதிர்ந்து போனார்கள். எங்கே, உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் என்னை தம்முடைய  மகன் என்று சொல்லிவிட்டால் என்று பதற்றத்தில் இருந்தான் ராபர்ட்.

அப்போது மித்ரத் பேசினான்…. ஹேமாவை பார்த்து….

“உங்க பையன இந்த நிலைக்கு பார்த்த பிறகும் எனக்கு உதவ மாட்டேன் என்று சொல்ல போறீங்களா?”என்று அவர்களை மிரட்டினான்.

“அட. கடவுளே இவனுக்கு இவங்க தான் இவனோட பேரன்ட்ஸ் என்னு தெரிஞ்சிட்டே” என்றான் கில்கமேஷ்.

ராபர்ட் நிலைகுலைந்து போய் நின்றான். ஹேமா மற்றும் ஜான் இருவரும் ராபர்ட்டை பார்த்து முகத்தை தொங்க போட்டு கொண்டனர்.

“அம்மா…ப்ளீஸ்… இதை பண்ணிடாதீங்க…”என்று ராபர்ட் கெஞ்சினான்.

“எங்களுக்கு நீ மட்டும் தான் உலகம் ராபர்ட். உன் உயிரை பணயம் வெச்சி கண்டிப்பா எங்களால ரிஸ்க் எடுக்க முடியாது.” என்று அழுது கொண்டே சொன்னார் ஹேமா.

“நோ…”

அப்போது ஜான் மித்ரத் கிட்ட

“இந்த ஆராய்ச்சி முடிஞ்சதும் நீ எங்களுக்கு வாக்கு தந்தது போல என்னோட பையனையும் அவன் நண்பர்களையும் விட்டுடனும்.” என்றார்.

“விட்டுட்டா போச்சு….” என்று சொல்லிக்கொண்டே அந்த ஆராய்ச்சி கூடம் அதிரும் படியாக சிரித்தான் மித்ரத்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“இவனுக்கு ஏதோ நடந்துடுச்சு ஜெனி… தலையில் ஏதும் அடிபட்டுடுச்சா என்னன்னு பாரு” என்றான் ஆர்தர். “அட நீ வேற.. நான் உண்மையா தான் சொல்லுறேன்..” என்றவன் எயார்போர்டில் தான் சந்தித்த நபர்களில் இருந்து நடந்தவற்றை…

“இவனுக்கு ஏதோ நடந்துடுச்சு ஜெனி… தலையில் ஏதும் அடிபட்டுடுச்சா என்னன்னு பாரு” என்றான் ஆர்தர். “அட நீ வேற.. நான் உண்மையா தான் சொல்லுறேன்..” என்றவன் எயார்போர்டில் தான் சந்தித்த நபர்களில் இருந்து நடந்தவற்றை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *