Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 60 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 60

  • 53

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“சரி வாங்க. நம்ம எக்ஸ்பரிமெண்ட்டை ஸ்டார்ட் பண்ணலாம்.” என்று மித்ரத் முன்னாடி செல்ல ஹேமா ராபர்ட்டை பார்த்து அழுது கொண்டே அவன் பின்னாடி சென்றாள்.

ராபர்ட் அவர்களிடம் கெஞ்சுவது போல இதை சேய்ய வேண்டாம் என்பது போல் சொல்ல ஜான் தான் பிடித்திருந்தத சிறைக்கம்பியை அழுத்தமாக பிடித்து தளர்த்தி விட்டு ஒன்றுமே பேசாமல் அவரும் நகர்ந்தார்.

“இப்போ என்ன பண்ண போறோம் எல்லாமே போச்சு கடைசியா இருந்த ஒரே ஒரு நம்பிக்கை என்னோட அப்பா அம்மா கூட நமக்கு இப்போ உதவ மாட்டாங்களே!” என்று அழுதான்.

“வருத்தப்படாத டா… எல்லாம் நல்லதுக்கு தான்…. பாரு கில்கமேஷை அவனே வருத்தப்படாம இருக்கான். அப்படின்னா கண்டிப்பாக அவன் கிட்ட ஏதும் பிளான் இருக்கும்.” என்று சொல்லி கொண்டே இருவரும் அவனை பார்க்க அவனோ எதையோ யோசித்து கொண்டிருந்தான்.

******************

“மெதுவா வாங்க அவங்களுக்கு சத்தம் கேட்டுடும்.” டிடானியா ஏனையவர்களுடன் புதர் மரங்களில் மறைந்து மறைந்து வந்து கொண்டே சொன்னாள். அப்போது மீரா போட்டிருந்த ஆடை காற்றில் கொஞ்சம் ஆட…

“மீரா… உன்னோட ட்ரெஸ் ட்ரெஸ் அதை கொஞ்சம் கவனமா பாரு அவங்க மேல சி சி டிவி பொருத்தி இருக்காங்க.” என்றான் விக்டர்.

“ஐயோ..” என்றவள். ஆடையை இழுத்து சரி செய்து கொண்டாள். அவர்களுடைய வேன் கொஞ்சம் தூரத்தில் கிடந்தது.

“ஜெனி அவங்கள எங்க அடைச்சி வெச்சிருப்பான்..?”என்று டிடானியா கேட்டாள்.

“அதான் உள்ளே எங்கயாச்சும் அடைச்சி வெச்சிருப்பான். நாம அவங்க கண்ணுல படவே கூடாது.” என்ற விக்டர். ஒருவழியாக மூவரும் சி சி டிவி இல்லாத ஒரு பக்கத்தில் வந்து நின்றனர். அங்கே ஒரு குட்டி ஜன்னல் போன்ற காற்று வெளியாகும் க்ரீல் பொறுத்தபட்டு இருந்தது.

“ஓகே காய்ஸ்… இங்க பாருங்க… உள்ளே போறதுக்கு இங்க ஒரு டனல் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க. நான் உள்ளே போய் பார்த்துட்டு வரேன். ” என்றான்.

“பார்த்து ஜாக்கிரதை…” அவன் அந்த மூடிய திறந்து கம்பியை பிடித்து கொண்டு உள்ளே இறங்கினான்.

“ஹேய். இங்க பாரு இது வழியா நாம உள்ளே என்ன நடக்குது என்று பார்க்கவும் முடியும்” என்று அந்த காற்று இடைவெளி ஊடாக உள்ளே நடப்பதை அவதானித்தனர் இருவரும்.

என்கிடு உடலை ஒரு இழுவை மேசையில் வைத்து ஜெனி அவர்களை அடைத்து இருந்த சிறைக்கு முன்னால் தெரியும் படி  கொண்டு வந்து வைத்தனர்.

“எனக்கு ஒன்று மட்டும் புரியவேண்டும். எனக்கு மட்டும் தெரிந்த இந்த உயிர் ரகசியம் எப்படி மித்ரத் மற்றும் அவன் கூட்டத்துக்கு தெரிந்தது….?” என்று கில்கமேஷ் கேட்டான்.

“ஒருவேளை நீங்க இந்த ரகசியத்தை தெரிஞ்சி கொள்ளும் போது வேறு யாராவது இருந்தார்களா?” என்று ஜெனி கேட்டாள்.

அப்போது தான் கில்கமேஷ் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“சரி வாங்க. நம்ம எக்ஸ்பரிமெண்ட்டை ஸ்டார்ட் பண்ணலாம்.” என்று மித்ரத் முன்னாடி செல்ல ஹேமா ராபர்ட்டை பார்த்து அழுது கொண்டே அவன் பின்னாடி சென்றாள். ராபர்ட் அவர்களிடம் கெஞ்சுவது போல இதை சேய்ய வேண்டாம்…

“சரி வாங்க. நம்ம எக்ஸ்பரிமெண்ட்டை ஸ்டார்ட் பண்ணலாம்.” என்று மித்ரத் முன்னாடி செல்ல ஹேமா ராபர்ட்டை பார்த்து அழுது கொண்டே அவன் பின்னாடி சென்றாள். ராபர்ட் அவர்களிடம் கெஞ்சுவது போல இதை சேய்ய வேண்டாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *