Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 67 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 67

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“இந்த வாட்டி எங்க தங்க போறீங்க மிஸ் லீஸா, அண்ட் மிஸ்டர் மைக்கல்…?” என்று கேட்டாள் டிடானியா.

“உங்க வீட்டில் தங்க முடியாதே… அங்கிள் லூதருக்கு சந்தேகம் வந்திடும்.. சோ.. நாங்க விக்டர் வீட்டில் தங்க போறோம்..”என்றான் கில்கமேஷ்.

“ஆமா, நான் தான் அவங்கள என்னோட வீட்டுக்கு கூப்பிட்டேன். அதோட மித்ரத் அகழ்வாராய்ச்சி முடியும் வரை தானே ஹோட்டலில் தங்கி இருந்தான். இப்போ சிட்டிக்கு வெளிய இருக்குற அவனோட வீட்டுக்கு போய்ட்டான். சோ அந்த பக்கம் தானே என்னோட வீடும். அதனால இவங்க அங்கேயே இருக்கட்டும்..” என்றான்.

“சூப்பர்!… சோ நெக்ஸ்ட் விக்டர்ஸ் ஹோம் ரைட்…?”

“யப்… ஹியர் வீ gகோ…”

கார் வேகமாக விக்டரின் வீட்டுக்கு விரைந்தது.

*********

10 நிமிடங்களின் பின்னர் ஊருக்கு வெளியே உள்ள புறநகர்ப்பகுதி விக்டரின் வீடு.

“இனி அடுத்து என்ன பண்ணுறதா பிளான்?  மேடம்..!”என விக்டர் கேட்டான்.

“முதலில் வீட்டுக்கு வந்தவர்களுக்கு டீ காப்பி இல்லேன்னா  ஏதும் கூல்ட்ரிங் இல்லியா” என்று கேட்டாள் ஜெனி.

“ஒஹ்ஹ்.. சாரி… ஜஸ்ட் வெய்ட்…” என்று அவன் கிச்சன் பக்கம் ஓடியதும் மூவரும் சிரித்தனர்.

“ஆமா விக்டர் அம்மா அப்பா எங்க.. அவங்களும் இங்கதான் இருக்காங்களா?”என்று கேட்டான் கில்கமேஷ்.

உடனே முகத்தை தொங்க போட்டு கொண்ட டிடானியா.

“அவன் அம்மாக்கு ஏதோ குணப்படுத்த முடியாத நோயாம் அவனுக்கு 8 வயசா இருக்கும் போதே இறந்துட்டாங்க அவனோட அப்பா என்னோட அம்மாவோட சகோதரர் சார்ள்ஸ் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாரு எவ்வளவு கூப்பிட்டும் விக்டர் அவர் கூட போகல. அதுல இருந்து எங்க அம்மாதான் அவனுக்கு அம்மா போல இருந்து எல்லாத்தையும் பார்த்துகிட்டாங்க அப்பப்போ அங்கிள் சார்ள்ஸ் வந்து அவனை பார்த்துட்டு போவாரு. அவர் தான் அவன் செலவுக்கும் பணம் அனுப்புறது.”

என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே விக்டர் ஏதோ கொண்டுவன்தான்.

“லெஸ்ஸி! குடித்து உடம்பை ஜில்லா வெச்சிருக்கங்க.” என்று பரிமாறினான்.

அனுதாபத்தை வீசி அவனை கஷ்டப்படுத்தாமல் அவர்களும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருந்தனர்.

“ஓகே… இங்க இருந்து மித்ரத் வீட்டுக்கு போற மேப், அவனோட வீட்டில் சி சி டிவி  கேமரா இருக்குற இடம். இதை பற்றின டேட்டாஸ் எல்லாம் வேணும்.”

“ஆமா அப்போதான் அவன் வீட்டில் யாராரு இருக்காங்க, எப்போ எல்லாம் அவன் வெளிய போறான். என்கிடு எங்கெல்லாம் போறான்னு, கண்காணிக்க முடியும்” என்றான் கில்கமேஷ்.

“நான் அவன் வீட்டுக்கு போற நேரம்… நீ ஹோட்டல்ல ஒரு கேமரா ஜேமர் வெச்சே இல்ல அதை பயன்படுத்தி நான் உள்ளே போறது அவனுக்கு தெரியாம பார்த்துக்கணும்.”

“ஹம் சரி..”

“அதுக்கப்பறம் நான் பார்த்துகிறேன்.” என்று ஜெனி சொன்னாள்.

“இனி லேட் ஆயிடுச்சி… நான் வீட்டுக்கு போகணும்.. என்னை கொஞ்சம் டிராப் பண்ணிடு விக்கி.” என்றாள் டிடானியா.

“சரி நீங்க ரெண்டுபேரும் இங்கேயே இருங்க இவளை விட்டுட்டு வரேன்..”என்று விக்டர் அவளை அழைத்து சென்றான்.

*********

டிடானியா வீட்டுக்கு முன்னால் காரை நிறுத்தி அவளை இறக்கி விட்டு

“ஜாக்கிரதையா இரு “என்றான் விக்டர்.

“அவங்களையும் கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துக்க.. நான் வரேன். ஏதாச்சும் என்னா போன் பண்ணு.” என்றவள் விக்டருக்கு கை காட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

அவனும் புறப்பட்டான்.

“டிடானியா வந்துட்டியா வாம்மா இங்க வந்து இதை பாரு.” என்று டி வி யில் எதையோ காட்டினார் லூதர்.

அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து போய் நின்றாள் டிடானியா.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“இந்த வாட்டி எங்க தங்க போறீங்க மிஸ் லீஸா, அண்ட் மிஸ்டர் மைக்கல்…?” என்று கேட்டாள் டிடானியா. “உங்க வீட்டில் தங்க முடியாதே… அங்கிள் லூதருக்கு சந்தேகம் வந்திடும்.. சோ.. நாங்க விக்டர் வீட்டில்…

“இந்த வாட்டி எங்க தங்க போறீங்க மிஸ் லீஸா, அண்ட் மிஸ்டர் மைக்கல்…?” என்று கேட்டாள் டிடானியா. “உங்க வீட்டில் தங்க முடியாதே… அங்கிள் லூதருக்கு சந்தேகம் வந்திடும்.. சோ.. நாங்க விக்டர் வீட்டில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *