Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 77 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 77

  • 82

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“ஒஹ்ஹ்… உஃப்… நீதானா… என்கிடு…. நான் பயந்தே போய்ட்டேன்.” என்றவள் மெல்ல எழும்பி கொண்டாள்.

அவன் பேராச்சர்யமாக அவளை பார்த்ததும் தான் அவள் விட்ட தவறு அவளுக்கே புரிந்தது.

“ஐயையோ… லூசு லூசு… உன்னோட மூளை தான் அறிவாளி. உன்னோட வாய் இருக்கே அது பெரிய முட்டாள் இப்போ என்ன சொல்லபோறேனோ?” என்று தனக்குள்ளே எண்ணி கொண்டாள்.

“என்னோட பேரு உனக்கு எப்படி தெரியும்? நான் இதுவரை என்னோட பெயர் பற்றி உன்கிட்ட சொல்லவே இல்லையே”

“கேட்டுட்டானே கேட்டுட்டானே. உனக்கு நல்லா வேணும்.” என்று மறுபடியும் எண்ணிக்கொண்டாள்.

“அது அது உன்னோட ஆளுங்க சொன்னது எனக்கு கேட்டிச்சி.” என்றாள்.

“ஒஹ்ஹ்.. ஆமா என்ன தேடுறே!”

“அது என்னோட தோடு அது இங்கதான் எங்கோ விழுந்துடிச்சி.” என்றவள் எழுந்தாள்.

“என்ன எழுந்துட்டே தோடு வேணாமா பரவால்ல நான் தேடிதர்றேன்.”

என்றவன் அவனும் ஆங்காங்கு தேட ஆரம்பிக்க என்ன பண்ணுவது என தெரியாமல் ஜெனி கையை பிசைந்து கொண்டு நின்றாள். அப்போது கட்டிலுக்கு அருகிலுள்ள மேசைக்கு கீழே அதை கண்டுவிட்டாள் .என்கிடு வலது பக்கம் திரும்பினால் நிச்சயமாக அதை பார்த்து விடுவான். அவன் திரும்புவதற்காக தலையை திருப்பிய போது,

“கிடைச்சிடுச்சு..”என்று கத்தினாள்.

“என்ன?” என்று அவன் பார்ப்பதற்கிடையில் அருகில் வந்து டிவைசை மறைத்து கொண்டு தரையில் அமர்ந்தாள்.

அவனும் உட்கார்ந்து கொண்டான்.

“ஆஹ் கிடைச்சிடுச்சு” என்றவள் பின்புறமாக கையை போட்டு துழாவி டிவைசை எடுத்து கையில் மறைத்து கொண்டாள்.

கட்டிலுக்கு அருகில் இருவரும் தரையில் உட்கார்ந்து இருந்தனர். என்கிடு கண்ணில் படாமல் டிவைசை எடுத்து விட்ட திருப்தி அவளுக்கு.அதை தரையில் சேர்த்து வலது கையால் பொத்தி வைத்து கொண்டு இருக்க என்கிடு அந்த கையை பிடித்தான். ஜெனிக்கு பக் பக் என்றது.

“என்ன இவன் கையை பிடிச்சிட்டான் ஒருவேளை பார்த்துட்டானோ.”

“லீஸா, அதானே உன்னோட பெயர்.”

“அ…அ..ஆமா”

“என்கிட்ட மறைக்காமல் ஒரு உண்மையை சொல்லு..”என்று கேட்டான்.

“கன்ஃபோர்ம் இவன் நம்ம மேல சந்தேகப்பட்டுட்டான் இனி என்ன ஆக்கப்போகுதோ?” என்றெண்ணினாள்.

“உன் மனதில் ஏதோ தீர்க்க முடியாத கஷ்டம் இருக்கிறதா நான் நினைக்குறேன். அதை என்னோட பகிர்ந்து கொள்”என்றான்.

“ஆமா இருக்குத்தான். என்னோட ஆளுக்காக உன்கிட்ட பேச வந்திருக்கேன். அதை உன்கிட்ட சொல்ல முடியுமா?” என்று மனதில் எண்ணி விட்டு,

“என்ன. ஏன் அப்படி கேக்குறீங்க?”

“சொல்லு நான் உனக்கு உதவனும் என்று நினைக்குறேன் டாக்டர் என்ன சொன்னாருன்னா உன்னோட இந்த அடிக்கடி மயக்கத்துக்கு உன்னோட பிரச்சினை தான் காரணம் என்று.”

“அவனே ஒரு டுபாக்கூர் டாக்டர்.. அவன் சொன்னதை நம்பிக்கிட்டு அட இதுதான் சான்ஸ் உண்மைய சொல்லிட வேண்டியது தான்.” என்று எண்ணினாள்.

“நான் ஒரு கதை சொல்லுறேன். முடிஞ்சா கடைசிவரை அதை பொறுமையா கேட்டு எனக்கு நீதி சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்.

“கண்டிப்பா… இது உன்னோட கதையா?”

“இது என்னோட கதை கிடையாது. ஆனா இந்த கதையில் நானும் வருவேன். எனக்கு சத்தியம் பண்ணுங்க… கொஞ்சம் கூட கோபப்படாம கடைசிவரை இந்த கதையை கேட்பேன் என்று, அப்பறம் நீங்க என்னை கொன்றாலும் பரவாயில்லை.” என்றதும் உடனே என்கிடு அவள் வாயில் கை வைத்து.

“அப்படியெல்லாம் பேசாதே! கண்டிப்பா நான் உனக்கு வாக்கு தர்றேன். நான் கோபப்படமாட்டேன் அதோட உன்னோட கதையை கடைசி வரை கேட்டுக்குவேன்.” என்றான்.

மனதில் ஏற்பட்ட திருப்தியில் சிரித்து கொண்டே அவன் கையை எடுத்துவிட்டு… அவள் பேச ஆரம்பித்தாள். அவன் கேட்க ஆரம்பித்தான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“ஒஹ்ஹ்… உஃப்… நீதானா… என்கிடு…. நான் பயந்தே போய்ட்டேன்.” என்றவள் மெல்ல எழும்பி கொண்டாள். அவன் பேராச்சர்யமாக அவளை பார்த்ததும் தான் அவள் விட்ட தவறு அவளுக்கே புரிந்தது. “ஐயையோ… லூசு லூசு… உன்னோட…

“ஒஹ்ஹ்… உஃப்… நீதானா… என்கிடு…. நான் பயந்தே போய்ட்டேன்.” என்றவள் மெல்ல எழும்பி கொண்டாள். அவன் பேராச்சர்யமாக அவளை பார்த்ததும் தான் அவள் விட்ட தவறு அவளுக்கே புரிந்தது. “ஐயையோ… லூசு லூசு… உன்னோட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *