Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 85 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 85

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அனுமதி இன்றி யாராவது நுழைந்து விட்டால் ஒலி எழுப்புவதற்காகவே ஒரு கருவியை தயார் செய்து வைத்திருந்தான் மித்ரத். திடீரென அந்த அபாய எச்சரிக்கை சத்தம் கேட்டதும், லீஸாவை என்கிடு பொறுப்பில் விட்டு விட்டு அவர்கள் எல்லோரும் வெளியே துப்பாக்கிகளோடு விரைந்தனர்.

“என்னை காப்பாற்ற தான் அவங்க வந்திருக்கணும். இப்போ கூட ஒன்னும் காலம் மீறி போய்டல்ல என்கிடு. நான் சொன்னது எல்லாமே உண்மை. தயவுசெய்து நியாக்கப்படுத்தி பாரு. கில்கமேஷ் உன் மேல உயிரையே வெச்சிருக்கான். உனக்காக எட்டாயிரம் வருஷங்கள் தவமிருந்திருக்கான். தன்னோட நாட்டையே இழந்து இருக்கான். இந்த மித்ரத்தை நம்பாதே… அவன் நல்லவன் இல்ல. அவன் உன்கிட்ட சொன்னதெல்லாம் பொய்.”

என்று அந்த தருணத்திலும் ஜெனி அவனை புரியவைக்க முயற்சி செய்தாள். அவனோ மிகப்பெரிய குழப்பத்தில் மூழ்கி இருந்தான்.

“இது உண்மை என்றால் ஒரு சிறு விடயம் கூடவா எனக்கு நியாபகம் இல்லாமல் இருக்கும். கண்டிப்பா இது பொய்யே தான்.”

என்றான்.

************************

மறுபுறம் வாயிலில் இருந்த காவலாளியை அடித்து நொறுக்கிவிட்டு விக்டரும் கில்கமேஷும் அதிவேகமாக மித்ரத்தின் வீட்டுக்குள் நுழைந்தனர். மித்ரத்தின் ஆட்கள் ஒரு பத்து தொடக்கம் பதினைந்து பேர் வரை இருக்க வேண்டும். எல்லோரும் மாறி மாறி சண்டைக்கு வந்தனர். விக்டர் தனக்கு தெரிந்த தற்காப்புகலையுடன் சேர்ந்து கொண்டுவந்த ஷாக் டிவைசையும் சரியாக உபயோகித்தான். ஒருவரை ஒருவர் கவர் பண்ணிக்கொண்டு முன்னேறி வர அப்போது வந்து சேர்ந்தான் மித்ரத்.

“இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம் கில்கமேஷ் இந்த ரெண்டு மூணு நாளிலே மாறுவேசம் போட்டுகிட்டு என்கிடு கண்ணிலே படாமல் மறைஞ்சி இருந்துட்டு இப்போ உன்னோட ஆளுக்கு ஒரு பிரச்சினை என்றதும் அவசரப்பட்டு ஓடி வந்துட்டே.”

என்றான் நக்கலாக வந்திருப்பது கில்கமேஷ் தான் என்று சாமர்த்தியமாக கண்டிபிடித்து விட்டாலும் அவனது திடீர் தாக்குதலை அவன் எதிர்பார்க்கவில்லை. வேகமாக வந்து முகத்தில் விட்ட குத்தில் முன் பல் ஒன்று இரத்துடன் பறந்தது.

“த்து…”

என்று எஞ்சியிருக்கும் உமிழ்நீரை துப்பிவிட்டு கில்கமேஷுக்கு சுடுவதற்கு முயற்சி செய்த போது, இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. வெளியே என்ன பேசினாலும் உள்ளே அதை டேப் செய்யும் படியான ஒரு கருவியும் அந்த அறையில் இருந்தது. ஆனால் அது வீட்டுக்குள் இருந்த அறைகளுக்கு பொருத்தப்படவில்லை. அதனை அவதானித்த ஜெனி.

“ஒரு வேளை வெளியில் நடப்பதை என்கிடுவுக்கு போட்டு காட்டிவிட்டால் மித்ரத்தை கெட்டவன் என்று அறிந்து கொள்வானே.”

என்றெண்ணியவள் உடனே அந்த அறையில் இருந்த கேமரா கன்ரோல்களை இயக்கி முற்றத்தில் நடப்பதை திரைக்கு கொண்டுவந்தாள். அப்படியே அந்த சவுண்ட் டிவைசையும் ஆன் செய்தாள்.

“ஏய்.. நீ என்ன பண்ணுறே?”

“இரு நான் சொன்னா நீ நம்பமாட்டே நீ ரொம்ப நம்புற மித்ரத்தே அவன் வாயால சொன்னா நம்புவெல்ல.”

என்று சொல்லி கொண்டே அவனை பார்க்கும் படி சொன்னாள். அங்கே மித்ரத்துக்கு கில்கமேஷ் கடுமையாக அடித்து கொண்டிருந்தான். கூடவே விக்டரும் தன் கைவரிசையை காட்டி கொண்டிருந்தான். அதை பார்த்ததும் ஆர்வத்தில் இவள் “கில்கமேஷ்!” என்று சொல்ல அப்போது தான் அவனை உற்று பார்த்த என்கிடு கோபத்தில் குதித்தான்.

“எவ்வளவு தைரியம் இருந்தா.”

என்று கோபத்தில் அறையில் இருந்து வெளியேற முயற்சித்தவனை தடுத்து நிறுத்தினாள் ஜெனி.

“அவசரப்படாதே… ஒரு நிமிடம் அவங்க பேசுரத்தை கேளு….”

என்றாள்.

“அந்த பொண்ணு எங்க, என்கிடு. எங்கடா”

என்று கேட்டு மித்ரத்தை அடித்து கொண்டிருந்தான். நாடியில் அடிபட்டு மேலே பார்த்தவன் கண்களுக்கு கேமரா தெரிந்து விட்டது. உடனே உள்ளார சிரித்தான் மித்ரத்.

“சொல்லுடா அவங்க எங்க இப்போ சொல்ல போறியா இல்ல சாகப்போரியா.”

அவன் திடீரென வேறுமாதிரி பேச ஆரம்பித்தான்.

என்கிடுவை கொல்லனும் என்கிற வெறி உனக்கு இன்னும் அடங்கலியா?

என்று கேட்டான். உடனே விக்டரும், கில்கமேஷும், ஜெனியும் அதிர்ச்சி அடைந்தனர்.

“என்ன.????”

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அனுமதி இன்றி யாராவது நுழைந்து விட்டால் ஒலி எழுப்புவதற்காகவே ஒரு கருவியை தயார் செய்து வைத்திருந்தான் மித்ரத். திடீரென அந்த அபாய எச்சரிக்கை சத்தம் கேட்டதும், லீஸாவை என்கிடு பொறுப்பில் விட்டு விட்டு அவர்கள்…

அனுமதி இன்றி யாராவது நுழைந்து விட்டால் ஒலி எழுப்புவதற்காகவே ஒரு கருவியை தயார் செய்து வைத்திருந்தான் மித்ரத். திடீரென அந்த அபாய எச்சரிக்கை சத்தம் கேட்டதும், லீஸாவை என்கிடு பொறுப்பில் விட்டு விட்டு அவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *