Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கிளை ஒன்று பேராசிரியர் ஆனது. - Youth Ceylon

கிளை ஒன்று பேராசிரியர் ஆனது.

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நௌபாஸ் ஜலால்தீன்

பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக வரவேண்டிய மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அதனைத் தியாகம் செய்து நளீமியாவுக்கு பணிப்பாளராக வந்து செய்த மகத்தான பணிகளின் அறுவடைகளில் ஒன்று, அவரது மாணவர்களில் ஒருவர் பேராசிரியரான வரலாற்று நிகழ்வாகும்.

அந்த வகையில் பேராசிரியர் எஸ்.எம்.எம்.மஸாஹிர் பற்றிய சில அறிமுகக் குறிப்புகள்

முழுப் பெயர்: செய்யத் முஹம்மத் முஹம்மத் மஸாஹிர்

பிறந்த திகதி: 09.05.1967

இடம்: அக்குரணை

கல்வித் தகைமை:

ஆரம்பக்கல்வி: முஸ்லிம் பாலிகா வித்தியாலயம்-அக்குரணை. (அப்போது அது ஒரு கலவன் பாடசாலை) (1973 -1977)

இடைநிலைக் கல்வி: மத்திய கல்லூரி-அக்குரணை (1978-1983)

அரபுமொழி, இஸ்லாமிய கற்கைகள்: ஜாமிஆ நளீமிய்யா-பேருவலை (1984-1991)

B.A.(Hons): பேராதனைப் பல்கலைக் கழகம் (1993)

M.Phil.: இஸ்லாமிய கலாசாரம், பேராதனைப் பல்கலைக்கழகம் (2006)

Ph.D.: Takaful, மலேசியப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், மலேசியா. (2017)

வகித்த பதவிகள்:

உதவி விரிவுரையாளர்: ஜாமிஆ நளீமிய்யா (1991-1995)

தற்காலிக விரிவுரையாளர்: இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (1995-1998)

விரிவுரையாளர்: இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (1998-2006)

சிரேஷ்ட விரிவுரையாளர்: தரம் ll இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (2006-2012)

சிரேஷ்ட விரிவுரையாளர்: தரம் l இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகம் (2012-2019)

நிர்வாகப் பதவிகள்: துறைத் தலைவர், இஸ்லாமிய கற்கைகள் துறை, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (2008-2011)

துறைத் தலைவர், இஸ்லாமிய கற்கைகள் துறை, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (11.04.2014-28.11.2014)

பீடாதிபதி: இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (இரு பருவங்கள்) (2014.11.29-2020.11.28)

பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகம் (23.12.2020- இன்றுவரை)

தற்போது இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பேராசிரியராக அவர் உயர்வு பெற்றுள்ளார்.

பேராசிரியர் எஸ்.எம்.எம் மஸாஹிர் பல்வேறு சமூகநல அமைப்புகளில் நேரடியான தொடர்புகளை வைத்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் இதுவரை எழுதி உள்ளார்கள்.

இறுதியாக பின்வரும் சம்பவத்தை படிப்பினைக்காக நினைவூட்டுகிறேன்;

நீர் ஓர் அறிஞர் அன்று, என்றுமே ஒரு மாணவன்தான். பேராசிரியர் மொன்ட் கொமரி வொட் அவர்களின் அழகிய உபதேசம்.

‘கலாநிதி பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு மாணவரும் தங்களது ஆய்வை முடித்து நாடு திரும்பும் வழியில் பேராசிரியர் அவர்கள் தனது இல்லத்துக்கு அழைத்து ஒரு தேநீர் விருந்தளிப்பது வழக்கமாகும். இந்த பாரம்பரியத்திற்கு ஏற்ப என்னையும் பேராசிரியர் ஒருநாள் தேநீர் விருந்துக்கு அழைத்தார். அனைத்தும் முடிந்தபின் அவர் என்னைப் பார்த்துக் கூறினார்.

அவரது குரல் இன்னும் எனது காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு ஒரு அறிவுரை கூறப் போகின்றேன் அதனை நீங்கள் பின்பற்றினால் உங்களது எதிர்கால கல்வி வாழ்க்கை மிகச் சிறந்து விளங்கும். நீங்கள் இப்போது பி.எச்.டி (Ph.D.) பட்டம் பெற்று ஒரு கலாநிதியாக ஊர் திரும்புகிறீர்கள். ஆனால் ஒன்றை மறக்காதீர்கள்.

உங்களது கலாநிதி பட்டம் உங்களுக்கு ஒரு பாடத்தை தான் கற்றுத் தந்திருக்கிறது. அதாவது இஸ்லாமிய கற்கைத் துறை என்பது மிகுந்த, ஆழமான, பரந்த ஒரு துறை என்பதையும் அதில் நீங்கள் பெற்றுள்ள அறிவு மிக அற்பமானது, அத்துறையில் நீங்கள் கற்க வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன என்பதையும் அது உங்களுக்கு உணர்த்தியுள்ளது. இதனை உங்களுக்கு நான் இப்போது நிரூபிக்கப் போகின்றேன்.

‘நீங்கள் கவனியுங்கள். நீங்கள் இஸ்லாமியக் கற்கைத் துறையில் ஓர் அங்கமான தஸவ்வுப் துறையில் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அறிஞரின் ஒரு தனிப்பட்ட நூலை ஆய்வு செய்து மூன்று ஆண்டுகள் முயற்சித்து பல மூலாதாரங்களின் அடிப்படையில் ஒரு ஆய்வு நூலை எழுதியுள்ளீர்கள்.

இது இத்துறையில் ஒரு அறிஞரின் ஒரு நூல் பற்றிய ஆழமான ஆய்வுக்கு எடுத்த காலமெனில்; தஸவ்வுப் பற்றிய நூல்கள், அறிஞர்கள், அதன் வரலாறு, தத்துவம் பற்றிய ஆய்வு முழுவதையும் ஒருவர் மேற்கொள்வதாயின் எத்தனை ஆண்டுகள் எடுக்கும்?

இஸ்லாமிய கற்கைத் துறையில் தஸவ்வுபின் நிலை இதுவென்றால் தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ், இஸ்லாமிய வரலாறு, கலைகள், பண்பாடு, நாகரீகம் அனைத்தையும் பற்றி ஆய்வு செய்வதை விடுத்து மேலோட்டமாக வாசிப்பதாயினும் உங்களது வாழ்நாள் போதுமா?

எனவே, உங்களது கலாநிதி ஆய்வின் மூலம் ஒரே ஒரு பாடத்தைத்தான் நீங்கள் கற்றுள்ளீர்கள். அதாவது இஸ்லாமிய கற்கைநெறி என்ற பரந்த, ஆழமான சமுத்திரத்தில் ஒரு துளியே உங்கள் இந்த ஆய்வாகும்.

எனவே, அனைத்தையும் கற்ற ஒரு ஆய்வாளர், பேராசிரியர், புத்திஜீவி என உங்களை எண்ணிக்கொள்ள இடமளிக்காதீர்கள். நீங்கள் இஸ்லாமிய கற்கைத் துறையினைப் பொறுத்தவரை ஒரு மாணவன் என்ற உணர்வோடு வாழ்க்கையின் இறுதிவரை வாழுங்கள்.’

ஆய்வுலகம் போற்றிப் புகழ்கின்ற பேராசிரியரின் இந்த வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக நான் கணிக்கவில்லை. எனது எதிர்கால அறிவுப் பாதைக்கு வழியமைத்துத் தந்த ஒரு பெரும் கோட்பாட்டை வகுத்துத் தந்த வார்த்தைகளாக அவற்றை ஏற்றுக் கொண்டு கண்களில் நீர் மல்க மூன்று வருடகால அறிவுத் தொடரின் அந்த இறுதி வேளையில், இந்தப் பாடத்தை அவர்களிடம் கற்றுக் கொண்டு விடைபெற்றேன்.

நீர் ஒரு அறிஞர் அன்று. என்றுமே ஒரு மாணவன் தான் என்ற பேராசிரியரின் குரல் இன்றும் (மரணிக்கும் வரை) எனது காதுகளில் ஒலித்துக் கொண்டு எனது அறிவு பயணத்தின் ஒளிக்காக வழி காட்டிக் கொண்டிருக்கிறது. நான் அந்த வார்த்தைகளை எனது சிந்தனைப் பேழையில் பாதுகாத்து இன்றும் (மரணிக்கும் வரை) மாணவன் என்ற உணர்வுடனே வாழ்ந்து வருகின்றேன்.’

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே
الحمد لله

மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி

பேராசிரியர் எஸ்.எம்.எம்.மஸாஹிர் அவரது சிறந்த குணவியல்புக்கேற்ப இன்னும் இன்னும் வளர
எல்லாம் வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக.

நௌபாஸ் ஜலால்தீன் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக வரவேண்டிய மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அதனைத் தியாகம் செய்து நளீமியாவுக்கு பணிப்பாளராக வந்து செய்த மகத்தான பணிகளின் அறுவடைகளில் ஒன்று, அவரது மாணவர்களில் ஒருவர் பேராசிரியரான வரலாற்று…

நௌபாஸ் ஜலால்தீன் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக வரவேண்டிய மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அதனைத் தியாகம் செய்து நளீமியாவுக்கு பணிப்பாளராக வந்து செய்த மகத்தான பணிகளின் அறுவடைகளில் ஒன்று, அவரது மாணவர்களில் ஒருவர் பேராசிரியரான வரலாற்று…