Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கிழட்டு விவசாயி 

கிழட்டு விவசாயி

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

விட்டுவிடு என் சோகங்கள்
என் மனத்திரையில்
தேங்கி நிற்கட்டும்
அதில் படிந்திருக்கும்
துரோகத்தின் துகள்கள்
என் இதயத்தை கிழித்தெறியட்டும்

என்ன பார்க்கிறாய்
தள்ளாடும் முதுமையில்
மழைக்கு குடைபிடித்து
மனைவியுடன் கிழவன்
எங்கு செல்ல நாடுகிறான்
உன் உள்ளத்தின் உதயம்
என் இதயத்தில் கேட்கிறத

புரிந்துகொள் வாலிபனே
வாலிபம் நிலையல்ல
மனிதனில் முதுமை குறையல்ல
நான் கிழவன்தான்
ஆனால் ஏர் பிடித்த உழவன்
பிள்ளையின் துரோகத்திற்கு
பெற்றவன் என்றும் பலியல்ல

என்ன கிழவன் உளறுகிறேனா
இது உளறல் அல்ல
வாலிபனே உளக் குமுறல்
கட்டிய மனைவிக்காய்
பெற்றவளை தூக்கியெறிந்த பிள்ளைக்கு
பெற்றவன் நானிடும் சாபம்

வளர்த்த குற்றத்திற்கு
வளர்ந்த மகன்
கழுத்தை நெரிக்க
வாழ்க்கை போராட்டத்தை
எதிர்த்து நிற்கும்
ஒரு கிழவன் எனது சாபம்

என்ன உயர்த்திய புருவம்
இறங்க மறுக்கின்றதா
வற்றிய தொண்டை
உமிழ்நீர் இன்றி
சாவதற்காய் பாய் விரிக்கின்றதா
சாகக்கிடக்கும் கிழவனுக்கு
திமிர் எதற்கு என
உன் உள்ளம் வெகுண்டெழ துடிக்கின்றதா

புரிந்துகொள்
எவனையும் நம்பாது
இறைவன் துணை கொண்டு
ஏர்பிடித்த கரம் இது
ஆணவமாய் சாவோம்
எவனுக்கும் அடிமையாய் வாழோம்

நான் கவிஞன்
வௌியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

விட்டுவிடு என் சோகங்கள் என் மனத்திரையில் தேங்கி நிற்கட்டும் அதில் படிந்திருக்கும் துரோகத்தின் துகள்கள் என் இதயத்தை கிழித்தெறியட்டும் என்ன பார்க்கிறாய் தள்ளாடும் முதுமையில் மழைக்கு குடைபிடித்து மனைவியுடன் கிழவன் எங்கு செல்ல நாடுகிறான்…

விட்டுவிடு என் சோகங்கள் என் மனத்திரையில் தேங்கி நிற்கட்டும் அதில் படிந்திருக்கும் துரோகத்தின் துகள்கள் என் இதயத்தை கிழித்தெறியட்டும் என்ன பார்க்கிறாய் தள்ளாடும் முதுமையில் மழைக்கு குடைபிடித்து மனைவியுடன் கிழவன் எங்கு செல்ல நாடுகிறான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *