குரங்கு மனசு பாகம் 06

  • 7

அந்த சம்பவத்துக்கு அடுத்தபடியாக சர்மி வெளியிறங்கிப் போகையில் குறித்த இளைஞரை எங்காயினும் கண்டால் நன்றியுணர்வோடு சிரிப்பாள். அவனும் அதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லை. அன்று ஞாயிறு காலையிலேயே அதீகின் மொபைல் சினுங்க,

“ஹலோ”

“ஹலோ ட்ரொப் ஹயர் ஒன்னு இருக்கு வரலாமா?”

“ஆஹ் எங்க?”

தன் இருப்பிடம் இருக்கும் இடத்தையும், தான் போக வேண்டிய இடத்தையும் சொல்லி அவன் சம்மதத்தை உறுதிப்படுத்திக் கொண்டு அழைப்பை துண்டித்து விட்டாள் சர்மி. ஆம்! தன் உயர்தரப் பரீட்சைக்கு வெறுமனே ஒருமாத காலமிருக்க, மிகவும் உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்த சர்மி, ஸ்கூல் கிலாஸ் என்று மாறிமாறிப் பயணிக்கும் நிலையிருக்க, பேரூந்துப் பயணம் அவளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியதால் தனக்குத் தெரிந்த ஒருவரின் ஆட்டோவில் சென்று வர அவள் எடுத்த முடிவேயிது. ஆனால் தன்னை அழைத்தது தனக்கு ஏற்கனவே தெரிந்த இந்தப்பெண் தான் என்று, அவள் சொன்ன இடத்துக்கு போகும் வரை அவன்  அறிந்திருக்கவில்லை.

“இவளா எனக்கு ஹெயர் போக வர சொன்னது?” சர்மி சொன்ன இடம் வந்தவன் அவளைக் கண்டதும் சந்தேகத்துடன் பார்த்தான்.

“நீங்களா எனக்கு ஹயர் போக வர சொன்னீங்க?”

“ஆமாம்.. பரவல்ல சொன்ன டெய்ம்கு சரியா வந்துடீங்க…”

“அதுசரி என் போன்நம்பர் எப்புடி?”

“ஆளுக்கு பெரிசா ஆட்டோ பின்னுக்கு ஒட்டி வெச்சிட்டு எப்புடின்னு கேக்குறீங்களா?”

“ஹஹ் ரொம்ப உஷார் தான். சரி வாங்க போகலாம்.”

“இனி வழமயா இந்த டெய்ம்கு என்ன ட்ரொப் பண்ண நீங்க தான் வரவேண்டி இருக்கும்.”

“இனி உங்கள காசு எடுக்காம எல்லாம் கூடிட்டு போக மாட்டன்.” அவன் சொல்லிச் சிரிக்க,

“ஹஹ் அந்தக் காசு வேற ஒருத்தர்கு எதுக்கு போகனும்னு தான் உங்களயே கூப்பிட்டன். இனி நீங்க தான் வரனும்” போக முன்னதாகவே ஏதோ தனக்கு நன்கு  தெரிந்தவர் போல் கட்டளை போட்ட சர்மி ஆட்டோவில் ஏறிக் கொண்டாள். பயணம் தொடர அவர்களுடன் நீண்டு அமைதியும்  பயணித்தது. ஆனால் வாய்மூடாது பேசிக் கொண்டேயிருக்கும் சர்மியால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை.

“மன்னிச்சி கோங்க”

“எதுக்கு?”

“இல்ல அன்று உங்கள அறியாம கோவம் காட்டிட்டன். இப்போ நான் மோர்னிங் சாப்பிடாம எங்கயும் போறதில்ல தெரியுமா?”

ஐயோ நான் தான் சொறி கேக்கனும். உங்களுக்கு சாப்பிட சொல்ல நான் உங்க யாரும் இல்லயே.. நான்  தான் தேவல்லாம பேசிட்டன்.”

அவள் வார்த்தைகளுக்கு முடிச்சுப் போட்டவன், வாழ்க்கைக்கு முடிச்சுப் போட நினைத்ததால் வந்த விளைவு தான் இவர்களின் கதையே இதற்குள் ஊசலாடும் குரங்கு மனம் கொண்ட சிலரின் மோசமான செயல்களால் வந்த விளைவுகளை தொடர்ந்து படிக்கலாம்.

கதை தொடரும்…
Aathifa Ashraf

அந்த சம்பவத்துக்கு அடுத்தபடியாக சர்மி வெளியிறங்கிப் போகையில் குறித்த இளைஞரை எங்காயினும் கண்டால் நன்றியுணர்வோடு சிரிப்பாள். அவனும் அதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லை. அன்று ஞாயிறு காலையிலேயே அதீகின் மொபைல் சினுங்க, “ஹலோ” “ஹலோ ட்ரொப்…

அந்த சம்பவத்துக்கு அடுத்தபடியாக சர்மி வெளியிறங்கிப் போகையில் குறித்த இளைஞரை எங்காயினும் கண்டால் நன்றியுணர்வோடு சிரிப்பாள். அவனும் அதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லை. அன்று ஞாயிறு காலையிலேயே அதீகின் மொபைல் சினுங்க, “ஹலோ” “ஹலோ ட்ரொப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *