குரங்கு மனசு பாகம் 14

  • 16

“உள்ள வரலாமா?”

“ஆஹ் வாங்க வாங்க”

“என்ன அபத்தமிது புள்ள சர்மி இவங்கள கண்டா என்ன சொல்லுமோ” ராபியாவின் உள்ளம் பதற,

“வீட்டுல எல்லாரும் சுகமா இருக்குறாங்களா?”

“ஓஹ் இருக்காங்க..”

“ஹ்ம்ம் நாங்க வந்த விஷயம்” அதீகின் தாய் பேசத் துவங்கும் முன்னதாகவே,

“எனக்குத் தெரியும் என் புள்ளய பெண் கேட்டு தானே வந்தீங்க? இங்க பாருங்க, எனக்கு இருக்குற ஒரே புள்ள சர்மி. அவள உங்க மகன் போல ஒரு ஆட்டோ டிரைவருக்கு குடுக்க ஏலாது.”

“எதுகு ஆட்டோ டிரைவர்னு ஒதுக்குறீங்க? அவங்க ரெண்டு பேரும் விருப்பப்பட்டு இருக்கக்குள்ள செஞ்சி வெச்சுறதுல தப்பு இல்லயே?”

“உங்களுக்கு அப்புடி இருக்கலாம். என் புள்ள சின்னத்தனமா எடுக்குற முடிவுக்கு எல்லாம் என்னால தலயாட்ட முடியாது.”

“இதுல என்ன சின்னப்புள்ளத் தனமிருக்கு?”

“என் புள்ளட லெவல்கு உங்க புள்ள எப்புடி சரி வரும்? ஒரு உம்மாவா இருந்துட்டு நீங்க யோசிக்க மாட்டீங்களா? உங்க வீட்டு பொம்புள புள்ளய இப்புடி ஒரு ஆட்டோ டிரைவருக்கு கொடுப்பீங்களா? என்னால இந்த விஷயத்துக்கு சம்மதிக்க முடியாது என்ன மன்னிச்சிடுங்க..”

சர்மியின் தாய் தன் முடிவில் ஒற்றைக்கால் நிற்க, தன் குடும்பத்தைக் கூட்டி வந்து அவமானப்படுத்தி விட்ட எண்ணம் அதீகின் உள்ளத்தை வாட்டிக் கொண்டிருந்தது, “இனி எனக்கு உங்க விருப்பம் தேவல்ல ஆன்ட்டீ, சர்மி சரி சொன்னா போதும்” நிதானமிழந்தவனாய் சத்தமாய் சொல்லிக்கொண்டே எழுந்து நின்றான்.

“எனக்கு எங்க உம்மா விருப்பம் தான் பெஸ்ட்” எதிர் திசையில் எங்கோ ஓர் மூலையிலிருந்து அக்குரல் ஒலிக்க, தன் புள்ளயா? என்ற ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தாள் சர்மி.

“ச… சர்.. சர்மீ.. நீ? நீயா?” அதீகால் நம்ப முடியவில்லை.

“அப்போ இல்லாத பாசம் இப்ப எப்புடி வந்தது? நான் விருப்பம் சொன்னப்போ, ஏதோ பெரிய ஆள் போல போனீங்க தானே? அப்பவே உங்கள மறந்துட்டன்”

“நோ.. நோ.. இது என் சர்மி இல்ல” அதீகின் உள்ளம் கவலையால் நிரம்ப, மறுபக்கம் மகளின் வார்த்தையைக் கேட்டு சந்தோஷத்தால் குதித்தாள் ராபியா.

“ஹஹ் உங்கள பிடிக்கல்லன்னு என் புள்ளயே சொல்லிட்டாள். இனி என்னா? போகலாம்” அதீகின் குடும்பம் வாய் மூடிப்போக,

“என் புள்ள எப்போ சரி நல்ல ஒரு எடத்துக்கு வருவான். அப்புறம் நீங்க எல்லாரும் பீல் பண்ணுவீங்க. இங்கபாரு அதீக். இனி இந்த புள்ளய நீ கனவுல கூட நெனச்சக் கூடாது. வா.. வாடா நாம போகலாம், வா போகலாம்” மகனின் கைப்பற்றி அவ்வீட்டை விட்டு வெளியேற, வைத்த கண்வாங்காமல் சர்மியைப் பார்த்துக் கொண்டே தாயின் பின்னால் இழுபட்டுப் போனான் அதீக்.

இங்கு அவர்கள் மறையும் வரை கல்லாக நின்றிருந்த சர்மி, அதீகின் குடும்பம் வெளியாகிச் சென்றதும், அப்படியே நிலத்தில் விழுந்தவளாய்  முகம் புதைத்தழுதாள்.

“ஏய் புள்ள என்னடா இது?”

“போங்கம்மா போய் எனக்கு கலியாணம் பேசுங்க. உங்களுக்கு உங்க புள்ள பெரிய எடத்துல முடிக்கனும்ற ஆச தானே இருக்கு? உங்க புள்ள நல்லா இருக்கனும்னு விருப்பமில்லயேமா?”

“என்ன புள்ள இது? நீ நல்லா இருக்கனும்னு தானே அந்த ஆட்டோ டிரைவர் வேணாம்னு சொன்னன்.”

“ஆட்டோ டிரைவர், ஆட்டோ டிரைவர், ஆட்டோ டிரைவர், போதும் உம்மா.. போதும் பிளீஸ். ஆட்டோ டிரைவருன்னு என்னா? அவன் என்ன நல்லா வெச்சி பாக்க மாட்டானா? நான் ஒன்னும் உங்க மேல இரக்கப்பட்டு அவர வேணாம்னு சொல்லல்ல, உங்களபோல ஒரு மாமி அவருக்கு வாய்க்கக் கூடாது. அவர்ட நல்ல மனசுக்கு, அந்த உம்மா சொல்லிட்டு போன போல நீங்க தான் பீல் பண்ணப் போறீங்க, அவர போல ஒருத்தர் உங்க புள்ளக்கி கெடச்சாதுமா, பொய்ன்னா பாருங்க” கவலை நிறையக் கதறி அழுத மகளைப் பார்த்துக் கொண்டு, அப்படியே நின்றிருந்தாள் தாய் ராபியா.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“உள்ள வரலாமா?” “ஆஹ் வாங்க வாங்க” “என்ன அபத்தமிது புள்ள சர்மி இவங்கள கண்டா என்ன சொல்லுமோ” ராபியாவின் உள்ளம் பதற, “வீட்டுல எல்லாரும் சுகமா இருக்குறாங்களா?” “ஓஹ் இருக்காங்க..” “ஹ்ம்ம் நாங்க வந்த…

“உள்ள வரலாமா?” “ஆஹ் வாங்க வாங்க” “என்ன அபத்தமிது புள்ள சர்மி இவங்கள கண்டா என்ன சொல்லுமோ” ராபியாவின் உள்ளம் பதற, “வீட்டுல எல்லாரும் சுகமா இருக்குறாங்களா?” “ஓஹ் இருக்காங்க..” “ஹ்ம்ம் நாங்க வந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *