Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
குரங்கு மனசு பாகம் 17 

குரங்கு மனசு பாகம் 17

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

 “இந்தா நான் சொல்லி முடிக்கவுமில்ல கோல் வருது. எடுத்து பேசு புள்ள”

“நான் என்ன பேசம்மா?”

“அவர் ஏதோ ஆசப்பட்டு பேசனும்னு சொல்றாரு தானே? என்னான்டு சரி கேளேன்மா..”

“ஹ்ம்ம்ம்”

தாயின் வற்புறுத்தலின் பெயராலும், தனக்கானவர் இனி அதீகில்லை என்ற உறுதி நிலையிலும் அந்த அழைப்புக்கு பதில் கொடுத்தாள் சர்மி.

ஆம்! அவன் தான் பிலால். வீட்டாரின் விருப்பத்தின் பெயரில் சர்மியின் வாழ்க்கைத் துணைவராக பேசி முடிக்கப் பட்டவன். பையன் நன்கு படித்தவன் தான். சர்மியின் தாயாரின் விருப்பப்படி கைநிறைய சம்பாதிக்கா விட்டாலும், பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் உடனே சம்மதித்து விட்டாள் ராபியா. இனி பிலால் தான் தன் கணவன் என்று உறுதியான பின்னர் அதீக் பற்றி சிந்தித்து பயனில்லை என்பதை உணர்ந்து கொண்ட சர்மி, மெதுமெதுவாய் தன் வாழ்க்கையிலிருந்து அவனை மறக்க முயற்சித்தாள். அதற்கு சாதகமாக பிலாலின் குறைவில்லாத அன்பு அவள் மீது பொழியப்படவே, நாளடைவில் அதீக் குறித்தான சிந்தனைகளை மறந்து பிலாலின் சந்தோஷத்துக்காக தன்னை அர்ப்பணிக்கத் துவங்கியிருந்தாள்.

இது தெரியாத அதீக் சர்மிக்குக் கலியாணம் சரிவர, பிறநாட்டிலே பெரிய சம்பளத்துக்கு வேலை கிடைத்திருந்தும் மகிழ்ச்சியைத் தொலைத்து அவள் நினைவிலேயே வாழ்ந்தான். சர்மி தன்னைவிட்டுப் போனதும் எடுக்கும் சம்பளத்தில் எந்தவித விருப்பும் இருக்கவில்லை அவனுக்கு. அன்று காலை ஆபீஸ் போகத் தயாராகிக் கொண்டு வந்த அதீகை நாடி ரினோசின் அழைப்பு வருகின்றது.

“அதீக் என்ன செய்திடா?”

“ஏதோ போகுது. சொல்லு மச்சீ..”

“ஏன்டா அப்புடி சொல்ற? இன்னமும் சர்மி ஞாபகமா?”

“இல்லாம இருக்குமாடா என்னதான் பண்ண?”

“அதீக் அடேய் என்னான்டா நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும், அதுவந்து..”

“என்ன ரினோஸ்? சொல்லுடா”

“இல்ல மச்சீ சர்மி வீட்டுல அவளுக்கு கலியாணம் மட்டும் தான் பேசி வெச்சிருக்கு, இன்னமும் நிகாஹ் எதுவும் நடக்கல்ல, இப்போ அந்த உம்மா விரும்புற போல நீ தான் கைநிறைய சம்பாதிக்குறாயே, உனக்கு இஷ்டம்னா திரும்ப பேசி பார்ப்போமா?”

“ஏன்டா லூஸா உனக்கு?”

“இல்ல அதீக், நீ அவளயே நெனச்சிட்டு இன்னம் எத்துன நாளக்கி இப்புடியே இருக்கப் போற? தப்பித் தவறி சரி அவங்க ஓகே சொன்னா வேணாம்னு சொல்லவாடா? யோசிச்சி பாரு அதீக்.”

“எனக்கு இனிமே நம்பிக்க இல்லடா”

“இங்ககேளுடா.. ஏற்கனவே அந்த உம்மா சரியான பணத்தாச புடிச்சவா, கண்டிப்பா சரி சொல்லும்டா.”

“ஓகே மச்சீ நான் ஆபீஸ் போக போறன். உன்கூட வந்து பேசுறன்”

ஏதும் முடிவு சொல்லாமல் அழைப்பைத் துண்டித்து விட்ட அதீக், அன்று தான் நீண்ட நாளைக்குப் பின் இதழ்கள் விரித்து உண்மையாக சிரித்திருப்பான். என்றுமில்லாத வகையில் தன் சர்மி தனக்கு மீள் கிடைத்து விடுவாள் என்ற நம்பிக்கையில் குதூகலித்தான் அதீக். “சர்மி நீ எனக்குத் தான்” என்று பலமுறை அவனையறியாமல் அவன் நா உச்சரிக்க, ஆபீஸ் கலைந்து ரூம் போகும் வரை நிம்மதியிருக்கவில்லை அவனுக்கு. ஆபீஸ் கலைய அறைக்கு வந்தவன், உடையைக் கூட மாற்றாமல் ரினோஸிற்கு மீண்டும் அழைத்தான்.

“அடேய் ரினோஸ்”

“ஆமாம் சொல்லுடா, நீ கோல் பண்ணும் வரதான் வெய்ட் பண்ணிட்டு இருந்தன்.”

“ஹ்ம் நான் நீ சொன்ன போல சர்மி வீட்டுல பேசுறதா முடிவு பண்ணிட்டன்டா.”

“ஹஹ்ஹா…. எனக்கு தெரியவா உன்ன பத்தி, எல்லாம் ஹெய்ர் ஆகும் பயப்புடாம பேசு.”

“ஹ்ம்ம் சரி சரிடா”

களைத்துள்ள உடம்புகளை வாடைக்காற்று தடாவ, வெளியோரமாய் இருந்து கொண்டு சர்மி வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தினான் அதீக்.

“ஹலோ யாரு..”

நா… நா.. நான்..” தனக்கானவளை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் அவன்  ஹிருதய வேகம் இரட்டிப்பாக, கஷ்டப்பட்டு வார்த்தைகளை வெளிவிட்டான்.

கதை தொடரும்…
Aathifa Ashraf

 “இந்தா நான் சொல்லி முடிக்கவுமில்ல கோல் வருது. எடுத்து பேசு புள்ள” “நான் என்ன பேசம்மா?” “அவர் ஏதோ ஆசப்பட்டு பேசனும்னு சொல்றாரு தானே? என்னான்டு சரி கேளேன்மா..” “ஹ்ம்ம்ம்” தாயின் வற்புறுத்தலின் பெயராலும்,…

 “இந்தா நான் சொல்லி முடிக்கவுமில்ல கோல் வருது. எடுத்து பேசு புள்ள” “நான் என்ன பேசம்மா?” “அவர் ஏதோ ஆசப்பட்டு பேசனும்னு சொல்றாரு தானே? என்னான்டு சரி கேளேன்மா..” “ஹ்ம்ம்ம்” தாயின் வற்புறுத்தலின் பெயராலும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *