குரங்கு மனசு பாகம் 25

  • 6

தாங்கமுடியாத கவலையுடன் அந்த இரவு முடிய, அடுத்தநாள் காலை சர்மி எழுந்திருக்க முன்னதாகவே வீட்டை விட்டு வெளியேறியிருந்தான் பிலால். இரவு முழுவதும் கண்ணீர் வழிந்தோட நேரம் கடத்திய சர்மிக்கு  தன் தாயின் இந்த விபரீதமான நிலையை சகித்துக்கொள்ள முடியாமலிருந்தது.

சர்மி இனி உனக்கு நான் மட்டும் தான் எல்லாம். உம்மா உம்மான்னு  சொல்லிட்டு இருந்தா பேசாம அவ கூடவே போயி இருக்க வேண்டியது தான். என்ன உம்மடீ அவா? சீஸனுக்கு மருமகன் மாத்துறாவா? அப்போ நீ வேற ஒருத்தர முடிச்சி கலியாணத்துக்கு அப்புறம் அவனுக்கு ஏதும் கஷ்டம் வந்தா அவன விட்டுட்டு வர சொல்லுவாவா? சரியான பைத்தியக்காரி… என் லெய்ப்ல விளையாட வந்த உன் உம்மாவ நான் மன்னிக்கவே மாட்டன்.  இங்க பாரு சர்மி, நல்லா கேட்டுக்க அந்த உம்மவா? இல்ல புருஷனான்னு நீ முடிவு பண்ணிக்க.. ஆனா உம்மா முக்கியமா போயிட்டுன்னு வந்தா அப்புறம் அதுதான் நீ என் கூட கூடி இருக்குற கடைசி நாள்

கணவனின் கோவத்துக்கு தன் தாயே காரணமாக இருக்க, பிலாலின் மேற்கூறிய வார்த்தைகள் சர்மியை உயிருடன் வதைத்துக் கொண்டிருந்தன. என்றாலும் தாயின் நிலைக்கு முன்னால் கணவனின் பிடிவாதமான வார்த்தைகள் சர்மியிடம் வெற்றி காணவில்லை.

“என்ன இருந்தாலும் அவ என்னோட உம்மா, இப்போ இருக்குற நிலமையில நான் போய் பார்க்கல்லன்னா நான் ஒரு புள்ளயா இருந்தே பயனில்ல. என் உம்மாவ நான் பார்க்கனும். என் உம்மா எனக்கு வேணும். ஐ யம் சொறி பிலால்,  நான் போகத் தான் போறன். என் உம்மாவ பார்க்க நான் போறன். என்னால இதுக்கு மேல தாங்கிப் பிடிக்க முடியல்ல. நான் போயிட்றன் பிலால்”

அகம் வருந்த அழுதவள், தன் அடுத்தகட்ட வாழ்க்கை பற்றி சிறிதும் சிந்திக்க நேரம் கொள்ளாமல் ஏதோ நினைப்பிலே கட்டிலை விட்டெழுந்து கை கால்களை அலசிக் கொண்டு அவசர அவசரமாய் தன்னை தயார்படுத்தியவளாக ஈன்றவளைக் காண விரைந்தாள். பாதை முழுதும் பார்வைகள் சர்மி மீதே விழ, கூனிக் குறுகியவளாய் வைத்தியசாலை வரை சென்றவள் மரியம் தாத்தாவைக் கண்டு கொண்டாள்.

“ஆன்ட்டீ என் உம்மா எங்க?”

“ஹஹ் வந்துட்டீங்களா? இப்போ தான் உம்மா ஞாபகம் வந்த போல புள்ளக்கி…”

“ஐயோ பிளீஸ் எல்லாருமா சேர்ந்து என்ன உயிரோட வதைக்காம என் உம்மா இருக்குற இடத்த காட்டுங்க பிளீஸ்…”

சர்மியின் மன்றாட்டம் மரியம் தாத்தாவை நெகிழச் செய்ய தாயின் நிலமை குறித்து மகளிடம் எடுத்துச் சொன்னார். மரியம் தாத்தாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சர்மியை வருந்தி அழச்செய்யவே,

“ஐயோ உம்மா என்னால தானே உங்களுக்கு இந்த நிலம..? ஏன்ட உம்மா என்ன மன்னிச்சிங்கோங்க, நான் தப்பு பண்ணிட்டன். நான் இப்புடி நடந்திருக்க கூடாது. அவசரப் பட்டுட்டன் உம்மா… தேவல்லாத காரியம் பண்ணி உங்கள் கஷ்டப்படுத்திட்டன். எனக்கு இன்னம் வரனும்மா. நான் பாவியாவிட்டன். ஐயோ! ஏன்ட தங்க உம்மாவே! நான் உங்கள பார்க்கனும். உங்க புள்ள உங்கள பார்க்க வந்திருக்குமா”

மரியம் தாத்தாவைப் பற்றிக்கொண்டு கதறியழுதவள், தாயின் வதனம் காண காலெடுத்து வைத்தாள். ஆனால் அதற்குள் நிலமை இன்னும் விபரீதமானது. ஆம்! பிலால் சர்மிக்கு அழைப்பு செய்ய, தன் மொபைல் அலறலில் பிலாலின் இலக்கம் கண்டு நடுங்கிப் போனாள் சர்மி,

“ஹ..ஹ.. ஹலோ”

“சர்மீ எங்க நீ?”

“அது.. அது வந்து.. அதுவந்து.. ஆஹ் பிலால் நான் வந்து,”

“போதும் நிப்பாட்டு. நீ எங்க போன? இப்போ எங்க இருக்குற? எல்லாம் நான் கவனிச்சிட்டு தான் ஈரன். இங்க பாரு சர்மி நான் சொல்றத கேட்டு திரும்பி வந்திடு. இன்னம் ஒரு அடி உன் உம்மா பக்கம் நகர்ந்தன்னு ஆவிட்டு, அப்புறம் இந்த பிலால உன்னால பார்க்கவே முடியாம போயிடும். நான் வெளிய தான் இருக்குறன். சொல்றத கேட்டு வந்திடு”

அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் இரண்டு தோணிகளுக்கு நடுவில் கால் வைத்தவளாக கண்ணீர் விட்டழுத சர்மியின் முடிவு எந்தத் தரப்பை  அடையுமோ இப்பொழுதைக்கு தெரியாது.

கதை தொடரும்…
Aathifa Ashraf

தாங்கமுடியாத கவலையுடன் அந்த இரவு முடிய, அடுத்தநாள் காலை சர்மி எழுந்திருக்க முன்னதாகவே வீட்டை விட்டு வெளியேறியிருந்தான் பிலால். இரவு முழுவதும் கண்ணீர் வழிந்தோட நேரம் கடத்திய சர்மிக்கு  தன் தாயின் இந்த விபரீதமான…

தாங்கமுடியாத கவலையுடன் அந்த இரவு முடிய, அடுத்தநாள் காலை சர்மி எழுந்திருக்க முன்னதாகவே வீட்டை விட்டு வெளியேறியிருந்தான் பிலால். இரவு முழுவதும் கண்ணீர் வழிந்தோட நேரம் கடத்திய சர்மிக்கு  தன் தாயின் இந்த விபரீதமான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *