குரங்கு மனசு பாகம் 30

  • 10

“நான் பேசினன்மா” மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுத தாய் ராபியாவின் கண்ணீருக்கு இனியும் குறைவிருக்காது.

***********************

ஆம்! இப்படியே இந்தக் குடும்பக் கூண்டில் கவலைகள் தொடர, பிலால் சொன்னது போலவே தன்னிலிருந்து சர்மியை விடுவித்தவன் சர்மியை விட்டுத் தூரமாகி ஐந்தாறு மாதங்கள் கடந்து விட்டன. மீண்டும் உம்மாவும் பிள்ளையுமாய் பழையபடி இவர்கள் வாழ்க்கை தொடர, தன் மகளின் நிலை குறித்து தாய் ராபியா வருந்தாத நாளேயில்லை எனலாம்.

அன்று திங்கள்..

“புள்ள சர்மி ரெடி ஆவிட்டீங்களா?”

“ஓம்மா வந்துட்டன்…”

“ஹ்ம்ம் அவசரமா வாங்க, ஆட்டோ ஒன்னு சரியில்ல.. ரோட்டுக்கு போய் வாரதொன்னுல தான் ஏறி போக வேணும்…”

“சரி.. சரிம்மா வந்துட்டன் வந்துட்டன்..” மேசையில் கிடந்த கைக்கடிகாரத்தை கையில் கட்டிக்கொண்டே வந்து சேர்ந்தாள் சர்மி.

“ஹ்ம்ம் போவோம் மா..” உற்சாகமாய் தன்னைத் தயார் படுத்திக்கொண்டு வந்த சர்மியின் அழகை ஒருகணம் மைமறந்து இரசித்தாள் ராபியா.

“ஹலோ உம்மா… என்ன இந்தப் பார்வ? வாங்க போகலாம்” தாயின் முகத்தின் முன்னால் தன் இரண்டு கைகளையும் அசைத்து சிரித்த சர்மியை பரிதாமாய் நோக்கினாள் ராபியா.

“இல்லம்மா… மகாராணி போல புருஷன் கூட சந்தோஷமா இருக்க வேண்டிய நீ தனிமரமா நிக்குறீயேமா…” சொல்லி விம்மிய தாயின் கைப்பற்றி,

“ஐயோ உம்மா இந்த விஷயமா பேச வேணாம்னு உங்ககிட்ட எத்துன தடவ சொல்லிருக்கு? இங்க பாருங்கமா புருஷன் கூட இருந்தா நான் இந்தளவு சந்தோஷமா இருப்பனோ இல்லயோ எனக்குத் தெரியாது, ஆனா உங்க கூட ரொம்ப சந்தோஷமா ஈரன்மா.”

“ஏன்ட புள்ளக்கி இனி இந்த உம்மா எந்த கஷ்டமும் தர மாட்டன்” சர்மியின் கன்னத்தை பற்றி மனம்நிறைய சொன்ன தாய் ராபியாவின் வதனத்தைப் பார்த்து நன்றியுடன் நகைத்தாள் சர்மி.

“சரி சரி வாங்க போவோம். கொஞ்சம் இருந்தா போதுமே ஸென்டிமன்ட் டோக் எல்லாம் விடுவீங்க.”

தாயின் மனநிலையை மாற்ற நகைச்சுவையாய் பேசிய சர்மி, தாயுடன் வீட்டை விட்டுக் கிளம்பி அந்த ஒற்றையடிப் பாதை வழியாக பெரிய பாதையை அடைந்தாள்.

“உம்மா வாங்க ஓரமா நிப்போம், வெயில் சுடுது…”

“ஹ்ம்ம் சரிடா…”

தாயும் மகளுமாய் நின்றிருக்கும் அந்த இடம், “சர்மி தன் பழைய காதலன், இன்றும் தன்னில் வாழும் கனவு மன்னவன்” அதீகை முதன்முதல் சந்தித்த இடமாக இருக்க, அவள் உள்ளம் இலேசாக வலித்தது. என்றுமில்லாதவாறு அவள் நா “அதீக்” என்று உச்சரிக்க, அந்த இடமும் அதில் பொதிந்திருக்கும் நினைவுகளும் அவளை விட்டு துளியும் தூரமாகியிருக்கவில்லை.

“சர்மி ஆட்டோ ஒன்னு வருது.. வா முன்னால…”

“ஆட்டோ ஆட்டோ” கையசைத்துக் கூவிய தாயின் முன்னால் அந்த ஆட்டோ வந்து நிற்க,

“ச.. சர்.. மீ..”

ஆட்டோ டிரைவரைக் கண்டு நடுங்கிப் போன ராபியா பின்னால் திரும்பி மகளைப் பார்க்க, அவள் கண்கள் அணை திரண்ட வெள்ளம் போல் கண்ணீர் துளிகளை விடாமல் சிதறிக் கொண்டிருந்தன.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“நான் பேசினன்மா” மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுத தாய் ராபியாவின் கண்ணீருக்கு இனியும் குறைவிருக்காது. *********************** ஆம்! இப்படியே இந்தக் குடும்பக் கூண்டில் கவலைகள் தொடர, பிலால் சொன்னது போலவே தன்னிலிருந்து சர்மியை…

“நான் பேசினன்மா” மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுத தாய் ராபியாவின் கண்ணீருக்கு இனியும் குறைவிருக்காது. *********************** ஆம்! இப்படியே இந்தக் குடும்பக் கூண்டில் கவலைகள் தொடர, பிலால் சொன்னது போலவே தன்னிலிருந்து சர்மியை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *