Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
குரங்கு மனசு பாகம் 31 

குரங்கு மனசு பாகம் 31

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“ச.. சர்.. மீ..”

ஆட்டோ டிரைவரைக் கண்டு நடுங்கிப் போன ராபியா பின்னால் திரும்பி மகளைப் பார்க்க, அவள் கண்கள் அணை திரண்ட வெள்ளம் போல் கண்ணீர் துளிகளை விடாமல் சிதறிக் கொண்டிருந்தன. ஆம்! அதீகின் நினைவுகளால் வாடிப்போயிருந்த சர்மியின் முன்னால் வந்து நின்றிருந்த ஆட்டோ அதீகினுடையது தான். ஆனால் ஓட்டி வந்ததோ அதீகின் இளைய தம்பி ரஹ்மியாயிருக்க, உம்மாவும் பிள்ளையும் வந்திருப்பது அதீக் என்று நம்புமளவுக்கு முகவாட்டம் அப்படியே அதீகைப் போன்றிருந்தது.

“சொல்லுங்க எங்க போக வேணும்? நீ.. நீங்க?” ராபியா வார்த்தைகளை இழுக்க,

“ஆஹ்! நான் இந்த ஏறியாவுக்கு புதிசு தான். ஸ்டாட்ல என் நாநா இங்க எல்லாம் வந்திருக்கு…”

“ஓஹ் நீங்க அவரோட தம்பியா? அதுதான் பார்த்தன் அவர போலவே இருக்கீங்க”

சொல்லிச் சிரித்த ராபியாவுக்கு இருப்பது அதீக்கல்லை என்று அறிந்ததும் தான் பெருமூச்சு போனது.

“வா புள்ள போவலாம்”

“இல்லம்மா என்னமோ உடம்புக்கு சரியில்லாத போல இருக்கு. இப்போ வீட்டுக்கு போவோமா? வாப்பாக்கிட்ட அப்புறம் போவலாம்”

மகளின் நிலையுணர்ந்த ராபியா அவளைக் கஷ்டப்படுத்த விரும்பாது

“அப்போ நீங்க போங்க தம்பி” வந்த ஆட்டோவைத் திருப்பி அனுப்பினாள்.

பிறகு மௌனமே உருவாய் தாயும் மகளும் வீட்டுக்கு திரும்ப உள்ளூர வெந்து கருகிக் கொண்டிருந்தது சர்மியின் உள்ளம். வீட்டுக்குப் போனதுமே ஆடைகளைக் கலைத்து விட்டு கட்டிலில் சாய்ந்த சர்மியை அவள் பாட்டில் இருக்க விட்டால் ராபியா.

“அதீக் எங்கடா இருக்க? உன்ன கஷ்டப்படுத்தின பாவத்துக்கு நல்லா அனுபவிக்குறன். எனக்கு நீ வேணும் அதீக். என்ன ஏத்துப்பியா? அதீக்.. அதீக்”

தலையணையில் முகம் புதைத்து அழுதவளுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. ஆம்! சர்மிக்கு அதீகில்லாத வாட்டம் என்றுமில்லாதவாறு வதைக்க, உடனே அதீகுடன் பேசி மன்னிப்புக் கேட்க வேண்டும் போல் இருந்தது.

“உம்மா”

கண்ணீருடன் தாயை அழைக்க பதறிக்கொண்டு ஓடி வந்தாள் தாய் ராபியா..

“என்னம்மா?”

“உம்மா நான் அதீக் கூட பேச வேணும்..”

“என்ன புள்ள சொல்ற?”

“பிளீஸ் மா”

“இன்னம் கஷ்டம் வேணாம் சர்மி, நீ பிலாலோட வீட்ட விட்டு போனது எப்புடியும் அவருக்கு கேள்வி பட்டிருக்கும். அந்த ஸீசன்ல எனக்கு போன் பண்ணிப் பண்ணி இருந்தவர் இப்போ சத்தமே இல்ல.”

“சொல்லுறத சொல்லட்டும்மா… நான் பேசியே ஆவனும்… பிளீஸ்…”

“எனக்குன்னா பயமா இருக்கு சர்மி… அதீக் கூட பேசி நீ இன்னம் கஷ்டப்படுவியோ தெரியல்லமா…”

“ஜயோ! உம்மா அதீக் உங்களோட லாஸ்டா பேசின போன் நம்பர தாங்களே…”

“சர்மி என்னடா இது?”

“பிளீஸ் மா..”

என்ன செய்வதென்றே புரியாமல் பிள்ளை சொல் இணங்கி அதீகின் மொபைல் இலக்கத்தை சர்மிக்கு சொல்ல அவளும் அதை தன் மொபைலில் ஸேவ் செய்து

“அதீக் மீ சர்மி.. ஹௌ ஆர் யூ” என மெஸெஜ் ஒன்றை அனுப்பி விட்டு அவன் பதிலுக்காக நடுக்கத்துடன் காத்திருக்க அந்த நொடியே பதில் மெஸேஜுடன் சர்மி மொபைல் சிணுங்கியது.

சர்மியை பார்க்கிலும் தாய் ராபியாவுக்கு நடுக்கம் பிடித்துக்கொள்ள,

“என்ன சொல்லிருக்கான்? பாரு பாரு சர்மி.” மகளை அவசரப்படுத்த, அதீகின் மெஸேஜை ஓபன் செய்கிறாள் சர்மி.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“ச.. சர்.. மீ..” ஆட்டோ டிரைவரைக் கண்டு நடுங்கிப் போன ராபியா பின்னால் திரும்பி மகளைப் பார்க்க, அவள் கண்கள் அணை திரண்ட வெள்ளம் போல் கண்ணீர் துளிகளை விடாமல் சிதறிக் கொண்டிருந்தன. ஆம்!…

“ச.. சர்.. மீ..” ஆட்டோ டிரைவரைக் கண்டு நடுங்கிப் போன ராபியா பின்னால் திரும்பி மகளைப் பார்க்க, அவள் கண்கள் அணை திரண்ட வெள்ளம் போல் கண்ணீர் துளிகளை விடாமல் சிதறிக் கொண்டிருந்தன. ஆம்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *