குரங்கு மனசு பாகம் 37

  • 73

இதற்கு மேல் மூத்தவனோடு பேசி பலனளிக்காது என்பதனை உணர்ந்து கொண்ட ஆதில், ஏது நடந்து முடியப் போகுதோ என்ற பயத்துடனே சர்மியின் வீடு நோக்கி வாகனத்தை திருப்பினான்.

“ஆஹ் இங்க தான் நிறுத்து நிறுத்து… எனக்குத் தெரியும்”

எடுத்த எடுப்பில் எரிச்சலாய் சொன்னான் ஆதில். வாகனம் நிறுத்தப்பட்டது.

“நீ இங்கயே இரி, நான் வந்துட்றன்”

“ஹ்ம்ம்ம்”

ஒற்றை வார்த்தையோடு மூத்தவனுக்காய் காத்திருக்க, தன்னானவளைக் காணப் போகும் பரவசத்தோடு சர்மியின் இல்லம் விரைந்தான் அதீக்.

“புள்ள யாரோ வீடு வந்து பெல் (Bell) அடிக்குறாங்க போல இருக்கு. கொஞ்சம் பாரேன் மா.”

“ஆஹ் நான் பார்க்குறன் மா”

குளித்துவிட்டு அறையில் முடியை காய வைத்துக் கொண்டிருந்தவள், முந்தானையால் கூந்தலை மறைத்து மூடிக் கொண்டாள்.

“யாரு?”

கேள்வியுடன் கதவைத் திறந்தவள் உள்ளம் மீள் கணத்தது.

“அதீக்”

அவளையறியாமல் அவள் நா அவன் நாமத்தை உச்சரிக்க, சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் சர்மியைப் பார்த்துக் கொண்டிருந்தான் அதீக். உள்ளத்தால் நொறுங்கிப் போனவளாய் இருந்தாலும் முன்பை விட அவன் கண்களுக்கு மிகவும் அழகாகத் தோன்றினாள் சர்மி.

அவள் எழில் வதனம் இன்னும் மெருகூட்டப் படுவதாய், கடுமையான சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான லோங் டொப் அணிந்திருந்தாள். குளித்துக் காயாத முடியின் நுனிகளால் சிந்நிய நீர்த்துளிகள் நிலத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. இதழ்கள் சிவந்து போய், முகம் மினுங்கிக் கொண்டிருந்தது. சுருமா வைத்த கண்கள் போல் இயற்கையாய் அமைந்த அவள் நயனங்கள் மெதுவாக கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தன. உயரத்துக்கு ஒப்பான உடற்கட்டமைப்பில், அங்கங்களில் நடுக்கம் பிடித்துக் கொண்டன. அவள் ஒவ்வொரு அசைவையும் சிறிது நேரம் இரசித்தவன்,

“உள்ள கூப்பிட மாட்டியா சர்மி?” என்றான்.

“இப்போ இங்க எதுக்கு வந்தீங்க அதீக்? தயவு செஞ்சி போயிடுங்க” அவளின் வார்த்தைகளில் வலி தெரிந்தன. ஆயினும் இப்படியொரு பதிலை சர்மி தரப்பிலிருந்து எதிர்பார்க்கா அதீக்,

“உண்மையிலேயே நான் போகட்டுமா சர்மி?” மீண்டும் பேச்சுப் போட்டான்.

“இப்பொழுதைக்கு மட்டுமில்ல இனி எப்பவுமே இங்க வராதிங்க அதீக், என்னவிட்டு போயிடுங்க, போயிடுங்க அதீக், என்ன விட்டு போயிடுங்க” அவ்வளவு காலம் அடைத்து வைத்திருந்த சோகம், அணைக்கட்டாய் திரண்டு எழ ஏங்கி அழுதாள் சர்மி.

“எனக்கு யாரும் வேணாம் அதீக், தனியாவே இருந்து கொள்றன்” அவள் கதறல் மேலோங்க கத்திக் கத்தியழுதாள்.

மகளின் அழுகைச் சத்தம் எல்லை தாண்டி ஓங்கி ஒலிக்க, பதறித் துடித்தவளாய் ஓடு வந்த ராபியா அதீகினைக் கண்டதும் அதிர்ந்து போனது மட்டுமன்றி விடயத்தையும் ஊகித்துக் கொண்டாள்.

“புள்ள சர்மி, என்னம்மா இது? அழாத தங்கம், இப்படி அழக் கூடாதும்மா, சர்மி பிளீஸ் அழாதம்மா…”

“தயவு பண்ணி என்ன அழ வேணாம்னு சொல்லாதிங்கம்மா, என்னால முடியல்ல, என்ன அழ விடுங்கம்மா” மகளை தேற்றுவதில் தோற்றுப் போயும் மீள் முயற்சித்துக் கொண்டிருந்தாள் ராபியா.

“இங்க பாரு சர்மி, நான் நாட்டுக்கு வந்ததே உனக்காகத் தான். உனகிந்த கஷ்டத்த என்னால தாங்க முடியாம இருக்கு, கொண்ட்ரோல் யுவர் செல்ப் டா, பிளீஸ்” அதுவரை சிலையாய் நின்ற அதீக் வாய் திறக்க, யாரும் அவனை அழைக்காமலே வீட்டுக்குள் கால் வைத்தான்.

“இப்படி எழும்பி இருந்துக்க சர்மி”

முன்னால் கிடந்த சோபாவில் மகளை இருப்பாட்ட, ராபியாவின் மார்பில் முகம் புதைத்தவளாய் நீண்ட நேரத்துக்கு வீறிட்டு அழுதாள் சர்மி.

கதை தொடரும்
Aathifa Ashraf

இதற்கு மேல் மூத்தவனோடு பேசி பலனளிக்காது என்பதனை உணர்ந்து கொண்ட ஆதில், ஏது நடந்து முடியப் போகுதோ என்ற பயத்துடனே சர்மியின் வீடு நோக்கி வாகனத்தை திருப்பினான். “ஆஹ் இங்க தான் நிறுத்து நிறுத்து……

இதற்கு மேல் மூத்தவனோடு பேசி பலனளிக்காது என்பதனை உணர்ந்து கொண்ட ஆதில், ஏது நடந்து முடியப் போகுதோ என்ற பயத்துடனே சர்மியின் வீடு நோக்கி வாகனத்தை திருப்பினான். “ஆஹ் இங்க தான் நிறுத்து நிறுத்து……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *