Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
குரங்கு மனசு பாகம் 39 

குரங்கு மனசு பாகம் 39

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“எங்க இன்னம் என் புள்ளய காணோம், இவ்வளவு லேட் ஆவ மாட்டானே?”

மறுபக்கத்தில் மகனின் வருகைக்காக காத்திருந்த வாஹிதா, நிலைமையை தெரிந்து கொள்ள அதீகிற்கு அழைப்பு செய்தாள். இங்கு தன் மொபைல் சிணுங்க, கையில் எடுத்த அதீக் தாயின் அழைப்பு கண்டு பதறிப் போனான்.

“ஏன்ட அல்லாஹ் இவங்ககிட்ட இப்போ என்ன சொல்லி சமாளிக்கப் போறன்னு தெரியல்லயே!” என்ன செய்வதென்றே புரியாத நிலையில்,

“ஹலோ உம்மா”

“என் ராசா… எங்கடா இருக்க? உனக்காக எவ்வளவு நேரம் வெய்ட் பண்றன் தெரியுமா? இப்போ எங்காள வார? பக்கத்துல வந்திட்டியா?”

“உம்மா இல்லம்மா.. அது.. அது வந்து…”

“என்னடா? என்னசரி பிரப்லம் ஆஹ்?” மகனின் குரலின் வித்தியாசம் கண்டு பதறிப் போனாள் வாஹிதா.

“ஆஹ் அப்படி ஒன்னும் இல்லம்மா, சரியான ட்ரபிக் ரோட்ல. வந்துக்கவே ஏலாம இருக்கு. எப்புடியும் இன்னம் லேட் ஆவும் மா.”

“ச்சே! சரிப்பா கவனமா வந்துடு சரியா?”

“ஹ்ம்ம் ஐ யம் சொறிம்மா..,”

“ஹே எதுக்குடா? சும்மா பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு இருக்காம கூடிய சீக்கிரம் உம்மா பக்கத்துல வந்துடு” விடயம் அறியாத வாஹிதா மகனின் மீது உறுகி விழ,

“உங்க புள்ள உங்களுக்கு துரோகம் செய்ய போறான்மா” என மனதால் சொல்லிக் கொண்டே அழைப்பைத் துண்டித்தவன் கண்கள் கலங்கியிருந்தன.

“அதீக்” மெதுவான குரலில் அவனை அழைத்தவள் அவள் தான்.

“என்ன சர்மி கிளம்புவோமா?” ராபியாவும் பின்னால் வந்து நிற்க, இருவரையும் அழைத்துக் கொண்டு ஆதில் வாகனத்தை நிறுத்தியிருக்கும் இடம் வரை நகர்ந்தான்.

“இவன் என்னா? தான் விரும்புறவள பார்த்துட்டு வாரன்னு சொல்லிட்டு போய், குடும்பத்தோட கூட்டிட்டு வாரான்.”

“ஆதில் வாகனத்த எடு”

“எங்க? எங்க போக?”

“வேற எங்க போக? ரெஜிஸ்டார் ஆபிஸ் போகத்தான்” எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாய் ஏதோ சின்ன காரியம் போல் சொன்ன அண்ணனை விளித்துப் பார்த்தான்.

“என்னடா உனக்கு மண்ட காஞ்சி போச்சா?”

“ஆதில் வாய மூடிட்டு சொன்னத செய்” ஒரே வார்த்தையால் அவன் பேச்சுக்கு முடிச்சிப் போட்டவன்,

“எத்தனை இடர்கள் வரினும் அசையாது நிற்கும் சூரியன் போல்” அப்படியே நின்றான்.

வாகனம் சொன்ன இடத்துக்கு வந்து நிற்க, அங்கே ரினோஸ் இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

“ரினோஸ்”

“வாடா அதீக் எப்படி இருக்க?”

“இனித்தான் சந்தோஷமா இருக்கப் போறன்” கண் ஜாடையால் சர்மியைக் காட்டிச் சிரிக்க, அதனைக் கண்டும் காணாதது போல் தலையை தாழ்த்திக் கொண்டாள் சர்மி.

“என்ன பொண்ணு ரெடியா?”

நக்கலாய் ரினோஸ் வினவ, சின்னதாய் நகைத்து விட்டு வாய் மூடி இருந்தாள் சர்மி. அவளுக்கு உண்மையில் இந்தக் காரியம் சரியாகத் தோன்றவில்லை. அதீகின் தாய் வாஹிதா நிச்சமாக இதனைத் தாங்கிக் கொள்ள மாட்டாள் என்று அறிந்திருந்தவள் உள்ளூற வெந்து கொண்டிருந்தாள். ஆயினும் இது குறித்து அதீகிடம் எதுவும் சொல்லும் தைரியம் அவளுக்கு கிடையாது.

தனக்கு அதீக் கணவனாகப் போகும் சந்தோஷம் சர்மிக்கு இருந்தாலும், இந்தக் கலியாணம் எல்லோருடைய சந்தோஷத்திலும் அமையாத வாட்டத்தை அவள் வதனம் பரைசாற்றிக் கொண்டிருந்தது. இதுகுறித்து ராபியா அறிந்திருந்தாலும் தனது மகள் எப்படியோ தான் விரும்புயவனோடே வாழ்க்கைப் படப்போகும் மகிழ்ச்சியில் வாய்மூடி இருந்தாள்.

“சர்மி இங்க வா, இதுல சொல்லி இருக்குற விஷயங்கள பில் பண்ணு.”

“ஓகே அதீக்” அத்தாளை பெற்றுக் கொண்டவள், மனமகள் பெயரிலிருந்து மனமகள் குறித்தான முழுமையான விபரங்கள் அத்தனையையும் பூர்த்தி செய்து அதீகின் கையில் கொடுக்க அப்பொழுது தான் அவனுக்கு அந்த நினைவு வந்தது.

“ஆம் சர்மிக்கு மஹர் வழங்கனுமே!”

“”சர்மி உனக்கு மஹராக என்ன வேணும் சொல்லு..”

“எனக்கு நீங்க மட்டும் போதும் அதீக்”

அவள் அதனை வெறும் வாய்ப்பேச்சுக்கு சொல்லவில்லை என்பதை அவள் முகமே காட்டிக் கொடுக்க, தன் தாய்க்காக அதீக் வெளிநாட்டில் செய்து எடுத்துக் கொண்டு வந்த, தங்கமாலையை மஹராக முன்வந்து வைத்த போது, சர்மியின் கண்கள் குளமாகி விட்டன.

“இப்படி வா சர்மி, ரினோஸ் நீ தான் சாட்சிக் கையொப்பம் இட வேணும்…”

எல்லோருமாய் உள்ளே சென்னார்கள். ஆயினும் ஆதிலால் தனது அண்ணனின் நடவடிக்கைகளை ஜீரணிக்க முடியவில்லை. “எங்கோ போறவளுக்காக உம்மாவ விட்டுக் கொடுத்துட்டானே?! ” என்ற கவலையும் ஆத்திரமும் அதீக் மேல் வெறுப்பாகக் கிளம்பியது. “உன்ன மன்னிக்க மாட்டேன் நாநா” ஆவேசத்தோடு அடுத்தகட்ட விடயங்கள சிந்திக்கத் திராணியற்றவனாய் அதற்கு மேலும் பொருமை காக்காமல், தாய் வாஹிதாவுக்கு அழைப்பு செய்தான்.

சமையல் படிக்கட்டில் குந்தியிருந்தவள் முந்தானையால் கைகளைத் துடைத்துக் கொண்டே, மொபைலை எடுத்தாள்.

“என்னடா ட்ரபிக் கிளியர் ஆவிட்டா?”

“உம்மா, உம்மா..” விம்மியழுத இரண்டாமவனின் குரல் அவள் உயிரில் பாதியை பறித்துக் கொண்டிருக்கும்.

“என்ன ராஜா? எங்க இருக்க? எதுக்கு அழுவுற? அதீக் எங்க. உம்மாக்கிட்ட சொல்லு ஆதில்…”

“நா… நாநா.. நாநா.. நாநா”

“நாநாவுக்கு என்ன ஆதில், சொல்லு.. ஆதில் என்னான்டு சொல்லு…”

“உம்மா நாநா.. நம்மா நாநா இங்க,” அவனால் பேச முடியவில்லை.

கதை தொடரும்
Aathifa Ashraf

“எங்க இன்னம் என் புள்ளய காணோம், இவ்வளவு லேட் ஆவ மாட்டானே?” மறுபக்கத்தில் மகனின் வருகைக்காக காத்திருந்த வாஹிதா, நிலைமையை தெரிந்து கொள்ள அதீகிற்கு அழைப்பு செய்தாள். இங்கு தன் மொபைல் சிணுங்க, கையில்…

“எங்க இன்னம் என் புள்ளய காணோம், இவ்வளவு லேட் ஆவ மாட்டானே?” மறுபக்கத்தில் மகனின் வருகைக்காக காத்திருந்த வாஹிதா, நிலைமையை தெரிந்து கொள்ள அதீகிற்கு அழைப்பு செய்தாள். இங்கு தன் மொபைல் சிணுங்க, கையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *