Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கெம்பஸ் போன புள்ள வேணாம் 

கெம்பஸ் போன புள்ள வேணாம்

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“கெம்பஷூ போய் படிச்ச புள்ள வாணாம்” ஜெஷீமா. அங்கும் இங்குமாக முகத்தை திருப்பியபடி பாம்பை கண்டு பதுங்குவது போல கூறினாள் மர்யம். (பதுங்கியதற்கு காரணம் பக்கத்து வீட்டு புள்ளயும் கெம்பஷுல தான் படிக்குது. காதுல கேட்டா இனி சங்குதானே! )

“ஏன்  வாணாம் தாத்தா? இப்போ எல்லாம் வீட்டுக்கொரு டிகிரி படிச்ச புள்ள  ஈக்கு. அதுலயும் பொம்பள புள்ளங்கெத்தான் கூட….. நம்ம ஊர்லயும் இப்ப  அது அதிகம் தானே! என்ன நான் சொல்லுறது. “

அது சரி தங்கச்சி. உனக்கு  உலகம் தெரியாதுன்னு நெனக்கிறேன் (கிட்டைக்கு வான்னு கைய புடிச்சு இழுத்து…)

“கேள்வி பட்டியா  ஒரு விஷயம்…”

” நாங்க யாருட பலாயயும்  கழுகுறல்ல… அத சூட்டி  யாரபத்தியும் எனக்கு தெரியாது” ன்னு முக்காட்டை சரி செய்தவாறே ஜெஷீமா கூற. அடுத்தபடியாகவே  கதையைத் தொடர்ந்தாள் மர்யம்.

“நம்மட மாஹிர் நானாட மகள் இருக்காலியா?”

“நஷ்ரா… ஆஹ் கொஞ்சம் குண்டா கொழு கொழுனு அழகா இருக்குமே அந்தப்புள்ளயா?”

” ஆமா… ஆமா… அதுக்கென்ன நல்ல புள்ளயாச்சே நீ ஒன்னு எந்த ஒலகத்துலதான் இருக்கியோ ஏன்ட அல்லாஹ்……! “

“அவள கெம்பஸூல  உட்டுட்டு வந்து அடுத்த நாளே ரேகிங் என்டு கோல் பன்னி அழுதாவாம் புள்ள. “

“சோறு தண்ணீ இல்லையாம் கவலைல சாப்புடுறதும் குறவாம்.”

“பொறகு அவரு ஊர்ல தெரிஞ்ச பொடியன்  ஒருத்தனுக்கு கோல் பண்ணி விஷயத்த சொல்ல, அவன் தான் ரேகிங்ல இருந்து காப்பாத்துனானாம். அவனோட தான் அந்தப்புள்ள போக்குவரத்தும் செய்றதாம். இப்ப கொஞ்சம் நாளாதான் போய் வாறது இல்ல. புள்ளக பழக்கப்பட்டுட்டாம்.”

“யாருக்கு தெரியும் எப்ப எந்த பயிர வேலி மேயுமோ? யாரு கண்டா?”

” அப்படி சொல்லப்படாது தாத்தா. அல்லாஹ் அளக்குறது தான் கெடக்கும்……. சரீ அதுக்கும்  உங்க மகன் சரீன் கலியாணத்துக்கு என்ன முடிச்சு? “

“நல்ல கேள்வி கேட்டா போ. வரம்  ஒன்னு வந்திச்சி வாணாம்டே சொல்லிட்டன்.”

அந்த புள்ளையும் கெம்பஷூ போனயாம். எங்க  எங்க எவன் கூட சுத்தினாளோ?   நாம பார்த்தமா போறது வாறது எல்லாம். விசாரிக்காமலே வாணாம் என்டுட்டேன்.

“உம்மா எவ்வளவு நேரமா கதைக்குறீங்க..? ஆக்கல்லியா? வாப்பா வந்துடுவாறு. நல்லா வாங்கி கட்டுங்க.” என்றான்  ஜெஷீமாவின் மூத்த மகன் பெரோஷ். கண்ணை அசைத்தவாறே (போகயு மாட்டிக்கிறா) என்று மனதில் நினைத்தபடி இரி வாறன்  என்றாள்.

“சரி நான் போறன் ஜெஷீமா. ஊடெலாம் தொறந்து கெடக்குது நாய் கீய்   போனாலும் தெரியா? பின்னேரம் வாறன்.”

கம்பியோரமாக நின்ற  இருவரும் சென்றவுடன் வேலிக்கம்பி விடுதலை அடைந்தது போல்  கராராக நின்றது.

“என்னம்மா  கத அந்த பொம்பளயோட? “

“உங்கள கதைக்க வேணாம்னு தானே சொல்லிரூக்கேன்.”

” அடுத்த ஊட்டு பலாயெலாம் கதைச்சு என்ன பாவத்த தானே சுமக்குறீங்க.”

“இல்லப்பா…. சரீனுக்கு கலியாணம் கேட்டயாம் கெம்பஷூ போன புள்ள ஒன்ன. இவ கெம்பஷூ போனதுகளே வாணாம் என்டு சொல்லுறா.”

“ஏனாம்? என்ன  கெம்பஷூ போனா? அந்த மர்யம் பீ பீ ஷி  தான்  உலகத்தயே அரிச்சி திரிகிறவங்களே! யாருடயும் குற அம்புட்டிருக்கும்.”

“பாவம்  மா… சரீக் நானாவும் மகளும். குடும்பத்துல மொதலாவது கெம்பஷூ போன புள்ள அது. சரீக் நானாவும் சரீ கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாரு…”

“அவர பத்தியும் அந்தப்புள்ள பஜீ ய பத்தி தெரிஞ்சுமா இப்படி இந்தப் பொம்பள கதைக்குது.”

“பஜீட  உம்மா ஒவ்வொரு நாளும் சொல்லுவா அந்தப்புள்ளைங்க, படிச்சி ஒரு நெலமைக்கு வர அதுகளும் நாமளும் படுகிற  பாட்ட”

“எனக்கே இரண்டு மூனு தரம் கண்ணெலாம் கலங்கிருக்கு”

“கண்ணுல காணாதத்தெலாம் நெனச்சி கற்பன பண்ணி எல்லாறயும் தப்பா சொல்றது அல்லாஹ்கே பொறுக்காது.”

“பெத்தது எல்லாம் பொட்ட புள்ள  இல்லண்ட  ஆணவம். அது தான்  இப்படி அடுத்தூட்டு கொமருகல கொற சொல்லுறது. ” கோபம் சர்ரென்று ஏற… ஞாபகம் வந்தது தொழுகை….

“சரீ போயி ஆக்குங்க நான் பள்ளிக்கு போய் வாறன் பாங்கு சொல்லிட்டு.”

“போய் வாங்க மகன்!” என்றவாறே ஜெஷீமாவின் வீட்டுப் பணிகள் தொடர்ந்தன.

(புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான் )

கவிச்சாரல் சாரா
புத்தளம்

“கெம்பஷூ போய் படிச்ச புள்ள வாணாம்” ஜெஷீமா. அங்கும் இங்குமாக முகத்தை திருப்பியபடி பாம்பை கண்டு பதுங்குவது போல கூறினாள் மர்யம். (பதுங்கியதற்கு காரணம் பக்கத்து வீட்டு புள்ளயும் கெம்பஷுல தான் படிக்குது. காதுல…

“கெம்பஷூ போய் படிச்ச புள்ள வாணாம்” ஜெஷீமா. அங்கும் இங்குமாக முகத்தை திருப்பியபடி பாம்பை கண்டு பதுங்குவது போல கூறினாள் மர்யம். (பதுங்கியதற்கு காரணம் பக்கத்து வீட்டு புள்ளயும் கெம்பஷுல தான் படிக்குது. காதுல…