Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கொரோனாவும் எமது அகீதாவும் 

கொரோனாவும் எமது அகீதாவும்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இன்று உலகையே அச்சுறுத்தும் ஒன்றாகவும் மனித பேசுபொருளாகவும் கொரோனா வைரஸ் மாறியிருக்கிறது உண்மையில் இது ஓர் இறை சோதனையாகும்.

உலகில் ஏற்படக்கூடிய சகலவிதமான சோதனைகளும் மனிதர்களின் பாவங்களினாலே ஏற்படுகின்றன. மனிதர்கள் தம்மை பாவங்களிலிருந்து திருத்திக்கொள்ளும் பொருட்டு, சத்தியமான பரிசுத்தமான மார்க்க வழிகாட்டல்களை பின்பற்றி நடக்கும் பொருட்டு சோதனைகள் வித்தியாசமான முறைகளில் வந்தடைவதை பார்க்கின்றோம்.

ஸஹீஹான ஹதீஸில் விபச்சாரம் பரவலாகும் போது பிலேக் (plague) நோய் இன்னும் முன்னோர்கள் அனுபவிக்காத நோய்கள் பரவலாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த பிலேக் நோய் இரண்டாம் கலீபரசர் உமர் (ரழி) அவர்களின் காலத்தில் பாலஸ்தீன அம்வாஸ் என்ற இடத்தில் ஆரம்பித்து சிரியாவிலே பரவலாகி 30000அல்லது 25000 பேர்களின் உயிர்களைக் காவுகொண்டது அவர்களில் ஸஹாபாக்களும் இருந்தனர்.

இப்படிப்பட்ட நோய் ஒரு இடத்தில் ஏற்பட்டால் அங்கு வெளியூர்களில் இருந்து செல்லவும் கூடாது இன்னும் அந்த ஊரிலிருந்து நோயைக் கண்டஞ்சி வெளியில் செல்லவும் கூடாது என்பது நபிமொழியாகும். நோய் வருமுன் காப்போம் இது இஸ்லாத்தின் நிலைப்பாடு இன்னும் நோய்கள் வந்த பின் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் தெளிவு படுத்தி இருக்கின்றது.

அந்த வகையில்

  1. சகிச்சையளித்தல் ஆனால் ஹராமான வழிகளில் சிகிச்சைகள் கூடாது.
  2. ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள். சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடித்தல்.
  3. அமல்கள் மூலம் காலை மாலை அவ்ராதுகள், துஆக்கள், இஸ்திஃபார், தொழுகை, சதகா இவைகள் மூலமாக நிவாரணம் பெறவேண்டும்.
  4. அதேபோல் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளையும் பின்பற்றுதல்.

இன்னும் யார் காலையிலும் மாலையிலும்,

பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹீ ஷைஉன் fபில் அர்ழி வலா fபிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்

بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم

என்று மூன்று முறை ஓதிவருகின்றாரோ அவருக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் அல்லாஹும்ம இன்னீ அஊது bபிக மினல் bபரஸி வல் ஜுனூனி வல் ஜுதாமி வமின் ஸய்யிஇல் அஸ்காம்.

اللهم إنى أعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الأسقام

என்ற துஆ போன்ற இன்னும் பல துஆக்கள் இருக்கின்றன அந்த துஆக்களை ஓதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். இன்னும் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் அவதானமாக இருப்பதோடு சிறிய பிள்ளைகளை தேவை இல்லாமல் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்துக்கொள்வோம்.

தொற்று நோய்

தொற்று நோய் இஸ்லாத்தில் கிடையாது இதுதான் அடிப்படை ஆனால் குஷ்டனை கண்டால் தூர விலகு என்று சொல்லப்பட்டது ஒரு ஆரோக்கியமான மனிதன் குஷ்டரோகியுடன் கலந்து இருக்கும் போது அல்லாஹ்வின் நாட்டப்படி அவனையும் அந்நோய் பீடிக்க அவனுடன் கலந்து இருந்ததால் தான் தனக்கும் இந்த நிலை என நம்பினால் அது அகீதா ஈமானுக்கு ஆபத்தாகும் அந்த வகையில் தான் அந்த ஹதீஸ் சொல்லப்பட்டது, எனவே நாமும் மிக நிதானமாக சமயோசிதமாக நடந்து கொள்வோமாக.

இன்னும் அல்குர்ஆன் மனிதனின் அக புற வியாதிகளுக்கு அருமருந்தாகும் ஆனால் குர்ஆனில் மயிர்கள் காணப்படுவதும் அவற்றை தண்ணீரில் கழுவி குடிப்பதும் கொரோனா வைரஸுக்குரிய மருந்தாக நம்புவதும் அதை உபயோகிப்பதும் புத்தியோ மார்க்கமோ அனுமதிக்காத மூட நம்பிக்கையாகும் இன்னும் நம்முடைய ஈமானை அகீதாவை பாழாக்கும் செயல் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே கொரோனாவோ அல்லது ஏனைய வியாதிகளோ அல்லது வேறு விதமான சோதனைகளோ அல்லாஹ் நாடினால் வந்தடையும் அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் நாம் எமக்குரிய ஆன்மீக லௌகீக வழிகாட்டல்களை கடைபிடிப்பது கட்டாயமாகும். எந்த வகையான பிரச்சினைகள் துன்பங்கள் வந்த போதிலும் ஈமானை பறிகொடுக்காமல் நடந்து கொள்வோம். அல்லாஹ் துணை புரிவானாக!அமீன்

M.J.M IRFAAN
RASHADI

இன்று உலகையே அச்சுறுத்தும் ஒன்றாகவும் மனித பேசுபொருளாகவும் கொரோனா வைரஸ் மாறியிருக்கிறது உண்மையில் இது ஓர் இறை சோதனையாகும். உலகில் ஏற்படக்கூடிய சகலவிதமான சோதனைகளும் மனிதர்களின் பாவங்களினாலே ஏற்படுகின்றன. மனிதர்கள் தம்மை பாவங்களிலிருந்து திருத்திக்கொள்ளும்…

இன்று உலகையே அச்சுறுத்தும் ஒன்றாகவும் மனித பேசுபொருளாகவும் கொரோனா வைரஸ் மாறியிருக்கிறது உண்மையில் இது ஓர் இறை சோதனையாகும். உலகில் ஏற்படக்கூடிய சகலவிதமான சோதனைகளும் மனிதர்களின் பாவங்களினாலே ஏற்படுகின்றன. மனிதர்கள் தம்மை பாவங்களிலிருந்து திருத்திக்கொள்ளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *