Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கொவிட் ஜனாஸாக்கள் கிண்ணியாவிலும் இன்று முதல் அடக்கம் 

கொவிட் ஜனாஸாக்கள் கிண்ணியாவிலும் இன்று முதல் அடக்கம்

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராம ‘கொவிட் 19 விஷேட மையவாடி’யில் இன்று 06 ஆம் திகதி சடலங்கள் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இக் காணியில் சுமார் 4,000 சடலங்களை அடக்கம் செய்வதற்கான வசதியுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம்.நிஹார் தெரிவித்துள்ளார்.

இதற்காக 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காணியை கொவிட் 19 தொழில்நுட்பக் குழு ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசு செய்ததையடுத்தே கொவிட் 19 செயலணியினாலும் சுகாதார அமைச்சினாலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்தும் கூறியதாவது,..

தற்போது இக் காணியில் உட்கட்டமைப்பு வசதிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணிக்குள் 14 பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

காணியை சூழ சுமார் 10 கிலோ மீற்றர் மதில் கட்டப்படவுள்ளது. மின்சார வசதிகள் மற்றும் சடலங்களின் உறவினர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கொவிட் 19 சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொவிட் 19 செயலணியின் தொழில்நுட்ப குழு இது தொடர்பில் ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சின் கொவிட் 19 ஒருங்கிணைப்பாளரும் தொழில்நுட்ப சேவைகள் இயக்குனருமான டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராம ‘கொவிட் 19 விஷேட மையவாடி’யில் இன்று 06 ஆம் திகதி சடலங்கள் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இக் காணியில் சுமார்…

கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராம ‘கொவிட் 19 விஷேட மையவாடி’யில் இன்று 06 ஆம் திகதி சடலங்கள் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இக் காணியில் சுமார்…