Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
க.பொ.த உயர் தரப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் - 2021 

க.பொ.த உயர் தரப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் – 2021

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறை மூலம் மாத்திரம் அங்கீகரிக்கப்படுமெனே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று (05) முதல் ஜூலை 30 வரை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் பரீட்சைக்காக நிகழ்நிலை (online) முறைமையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் (https://donets.lk) அல்லது நிகழ்நிலை பரீட்சை வலைத்தளத்தில் (https://onlineexams.gov.lk/eic) அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் செல்லிடத் தொலைபேசி செயலிக்குள் ((DoE Mobile app) நுழைவதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இப்பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்தியாக தோற்றவுள்ளவர்களின் விண்ணப்பங்கள் 2021 ஜூலை மாதம் 05ஆம் திகதியிலிருந்து ஜூலை 30 நள்ளிரவு 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். சகல விண்ணப்பதாரிகளும் இவ் அறிவித்தலை முழுமையாக நன்கு வாசித்து விளங்கிக்கொண்டு மேற்படி வலைத்தளத்தினுள் நுழைந்து நிகழ்நிலை முறைமையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தல் வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தெரிவு செய்த நகரத்தையும் பாடங்களையும் குறிப்பிடும் போது சரியாகக் குறிப்பிட வேண்டுமென்பதில் விசேட கவனஞ் செலுத்த வேண்டும். ஒரு பரீட்சார்த்திக்கு ஆகக்கூடியது பிரதான பாடங்களில் 03 பாடங்களுக்கு மட்டுமே பரீட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படும். அதற்கு மேலதிகமாக அவசியமேற்படுமிடத்து பாட இலக்கம் 12 – பொதுச் சாதாரண பரீட்சைக்கும், பாட இலக்கம் 13 – பொது ஆங்கிலம் பாடத்திற்கும் விண்ணப்பிக்க முடியும்

மேலும் இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அரச பாடசாலையில் கற்றுக்கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்குமிடத்து பரீட்சைப் பெறுபேற்றை இரத்து செய்து எதிர்வரும் காலங்களில் பரீட்சைகளுக்குத் தோற்றத் தடை விதிக்கப்படும். எனவே பாடசாலை பரீட்சார்த்திகள் தத்தமது பாடசாலை பொறுப்பாசிரியர்களைத் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும். LNN Staff

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F07%2F2021-Al-Exam-Online-Application.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறை மூலம் மாத்திரம் அங்கீகரிக்கப்படுமெனே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதற்கமைய இன்று (05) முதல் ஜூலை 30 வரை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ…

2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறை மூலம் மாத்திரம் அங்கீகரிக்கப்படுமெனே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதற்கமைய இன்று (05) முதல் ஜூலை 30 வரை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ…