சமூக வளர்ச்சியில் மக்தப்களின் வகிபாகம்.

  • 9

குழந்தை செல்வம் என்பது இறைவனால் வழங்கப்பட்ட மாபெரும் அருளாகும். அதன் பெறுமதியை விளக்குவதற்கு சொல்லன்னா வார்த்தைகள், அதற்காகத்தான் இறைவனுக்கு நன்றியுள்ள பிள்ளைகளாக அவர்களை வளர்க்க வேண்டும். அத்துடன் அல்லாஹ் கூறிய பிரகாரமும் நபியவர்கள் வாழ்ந்து காட்டிய பிரகாரம் வாழ்வதும் வாழ வழி வகுப்பதும் பெற்றோர்களாகிய எமது தலையாய கடமையாகும். இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள், நாளைய நம் சமூகம் ஈமானிய உணர்வும் இஸ்லாத்தின் உன்னத வழிகாட்டல்களுடன் ஒளிமயமான சமூகமாக உருவாக்க சிறந்த கல்வி மற்றும் ஒழுக்கம் என்பன வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றவே எமது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மக்தப் புனரமைப்பு குழு ஒன்றை உருவாக்கியது.

மக்தப் என்ற எண்ணக்கரு இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல, சுமார் 1400 வருடங்களுக்கு முன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. அன்று தொடக்கம் 1984 ஆம் ஆண்டு வரை பல நாடுகளிலும் இந்த முறைமை சிறப்பாக நடைபெற்று வந்தது. எனினும் ஆங்கிலயோரின் அடக்குமுறை காரணமாக 1986 ஆம் ஆண்டில் இருந்து இந்த முறை வீழ்ச்சியில் செல்ல ஆரம்பித்தது. அதன்பின்னர் பிரித்தானியரின் கெடுபிடிகள் இல்லாமல் போனதன் பின் மீண்டும் முழு உலக நாடுகளிலும் மக்தப் வகுப்புகள் புத்துணர்ச்சி பெற்று மீண்டும் இயங்கி வருகின்றன.

அல்லாமா ரூமி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் எழுதுகிறார்கள்; ஸ்பெயின் நாட்டின் 900 வருட இஸ்லாமிய ஆட்சி வீழ்ச்சி அடைய முக்கிய காரணம் மஸ்ஜிதுகளில் நிகழ்ந்து வந்த மக்தப் அமைப்பு வீழ்ச்சி அடைந்ததாகும். அது போல் உமது ஊர்களையும் ஆக்கி விடாதீர்கள் என எச்சரித்தார்கள். அபுல் ஹஸன் அலி நத்வி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூறுகிறார்கள் எந்தப் பகுதியில் சரியான முறையில் மக்தப் மதரஸாக்கள் நடத்தப்படவில்லையோ அந்த ஊர் மக்கள் முர்ததாகும் வாய்ப்புகள் உள்ளன என எச்சரித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கையில் 1969-ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஏ எம் ஏ அஸீஸ் அவர்களின் சிந்தனைக்கு அமைய மக்தப் மதரஸா முறை உருவாக்கப்பட்டு அக்கால மக்கள் அரபும் பேசியிருக்கின்றனர். அதன்பின் 1986 இல் வீழ்ச்சியில் சென்றாலும் மற்ற நாடுகளில் போன்று நம் நாட்டில் அழிவடையவில்லை. அதன்பிறகு நம்நாட்டில் குர்ஆன் மத்ரஸா அதாவது நாம் கூறும் பள்ளிக்கூடம் உருவாகின. அதுவும் ஹஸ்ரத் இருக்கும்வரை பிள்ளைகள் ஓதுவர் பின்னர் அதுவும் முடிந்து விடும். அது போன்ற அமைப்பில் தான் பள்ளிக்கூடங்கள் இருந்தன. அந்தவகையில் இந்த பள்ளிக்கூடங்கள் தொடர்பாக இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு ஆய்வு நடத்தி அதில் பல குறைபாடுகளை கண்டன.

அவற்றில் ,

  1. முழு நாட்டிற்கும் உரிய பாடத்திட்டம் இல்லாமை
  2. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற உஸ்தாத்கள் இல்லாமை
  3. பயிற்சி ஏற்ற உஸ்தாத்கள்
  4. சரியான நிர்வாகக் கட்டமைப்பு இல்லாமை

போன்ற பிரதான காரணிகள் பள்ளிக்கூடத்தில் பின்னடைவுகள் ஆராயப்பட்டன. அந்த வகையில் இந்த அத்தனை தாகங்களையும் தீர்க்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் 2010 ஆம் ஆண்டு 80 மாணவர்களுடனும் 6 உஸ்தாத்களுடனும் கொழும்பினை மையமாகக்கொண்டு முதன் முதலில் உருவாக்கப்பட்டது.

முதலில் பள்ளிக்கூடங்களின் காணப்பட்ட பாடத்திட்ட பிரச்சினைக்கு தீர்வாக எமது உலமா சபையின் குழுக்கள் இப்படியான பாடத்திட்டங்கள் வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல நாடுகளுக்கு உதாரணமாக தென்னாப்பிரிக்கா பிரிட்டன் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று அவர்களது பாடத்திட்டத்தினை அவதானித்து அதுபோன்ற பாடத்திட்டத்தினை நூறுவீதம் நமது நாட்டு சட்டத்திற்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் எமது உலமா சபையின் குழுக்கள் எப்படியான பாடத்திட்டம் வேண்டும் என்ற நோக்குடன் பல நாடுகளுக்கு, உதாரணமாக தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று அவர்களது பாடத்திட்ட முறைமையையும் ஆராய்ந்து எமது நாட்டிற்கு நூற்றுக்கு நூறு வீதம் பொருந்தும் வகையிலான பாடத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜமியத்துல் உலமா சபையின் குழுவினர் இந்தியாவின் மும்பை நகரில் அமையப்பெற்றுள்ள தீனியாத் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மொத்தப் மதரஸாவில் மாத்திரம் 18 இலட்சம் மாணவ மாணவிகளும் 27 ஆயிரம் உஸ்தாத்களும் 21 ஆயிரம் மஸ்ஜித்களில் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. அது போல் பல நாடுகளையும் கூறலாம்.

அந்த அமைப்புக்கு ஏற்பவே எமது நாட்டிலும் தற்போது சுமார் 1500 மஸ்ஜித்களில்களில் மக்தப் மதரஸாக்கள் நடைபெற்று வருகின்றன. மக்தப் மதரசாக்களின் பாடத் திட்டமானது 5 வருட பாடத்திட்டங்கள் ஆகும். அந்த ஐந்து வருடத்தில் குர்ஆன், ஹதீஸ், அகீதா, பிக்ஹு, தர்பியா, துஆக்கள் மற்றும் அரபு பாடம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் தினமும் ஒன்னரை மணி நேரம் மக்தப் வகுப்புகள் நடாத்தப்படுவதுடன் 40 நிமிடங்கள் குர்ஆன் பாடம் நிகழ்த்தப்படுகின்றது.

பள்ளிக்கூடங்களின் அடுத்த குறையாக காணப்பட்டது பல மாணவ மாணவிகளுக்கு ஒரே ஒரு உஸ்தாத் மட்டுமே பாடம் நடத்தினார் இந்த குறைபாட்டால் பல மாணவர்கள் பள்ளிக்கூடங்களை விட்டு விலகினர் இதனை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு மக்தப் மதரசாக்களின் 20-25 மாணவர்களுக்கு ஒரு உஸ்தான் தற்போது போதனை செய்து வருகின்றனர். அதேபோல் போதனை நடத்தும் அனைத்து உஸ்தாத்களுக்கும் உலமா சபையினால் நடத்தப்படும் 10 நாட்கள் கொண்ட பயிற்சிப் பாசறையில் நன்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. மேலும் உஸ்தாத்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் இடைநடுவில் விட்டு சென்றாலும் மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத அடிப்படையில் முறையே கச்சிதமாய் உருவாக்கப்பட்டுள்ளது. அன்றுஉஸ்தாத்கள் மாறினார் பாடமும் மாறின, இன்று உஸ்தாத்கள் மாறினாலும் பாடங்கள் மாறாது.

அடுத்த பிரதான குறைபாடே பள்ளிகூடங்களுக்கு என தனி நிர்வாகம் காணப்படாமை அதனையும் எமது உலமா சபை தீர்த்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கீழ் மக்தப் புனரமைப்பு குழு என நிறுவி அதன் கீழ் ஒவ்வொரு பள்ளிவாசல்களையும் கண்காணித்து வருகின்றன. மக்தப் மதரஸாக்களுக்கு என தனி நிர்வாகிகள் இருவர் ஒவ்வொரு மஸ்ஜித்களிலும் இருத்தல் வேண்டும். மேலும் மக்தப் மதரஸாக்களில் இருந்து வசூலிக்கப்படும் பணம் வைப்புக்காக தனி வங்கிக் கணக்கு ஆரம்பிக்க படுத்தல் வேண்டும். 24 மக்தப் மதரஸா வகுப்புகளுக்கு ஒரு அதிபரும் மேலும் மாவட்ட மாகாண ரீதியில் கண்காணிப்பு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் மக்தப் மதரஸாக்கள் நடத்த ஒவ்வொரு பிள்ளையிடம் இருந்தும் 500 ரூபா பணம் பெற்று இந்த மக்தப் மதரஸா வகுப்புகள் இயக்கப்படுகின்றன. 500 ரூபாய்!!! எனும் போது, இப்போது நடக்கும் டியூசன் வகுப்புகளுக்கு அதிகமான செலவு செய்யும் போது இது போன்ற மார்க்க விடயங்களுக்கு 500 ரூபா செலுத்த முடியாதோ ??? அப்படி 500 ரூபாய் செலுத்த முடியாத மாணவர்களுக்கும் ஜமியத்துல் உலமாவின் விசேட செயற்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு உதவிகள் செய்து அவர்களையும் கரைசேர்க்கும் அளவிற்கு ஜம்இய்யத்துல் உலமாவினால் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது.

அடுத்து பார்ப்போம் எமது பிள்ளைகளின் மக்தப் எந்த அளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை; ஆம் மிக இளம் வயதில் முழு உலகையும் பல இளைஞர்கள் கைப்பற்றினர் மேலும் பல கண்டுபிடிப்புகளையும் சாதனைகளையும் நிகழ்த்தினார் . உதாரணமாக மருத்துவம் அலி இப்னு ஸீனா, பூகோளம் இபின் பதூதா, நாடுகள் கண்டுபிடிப்பு தாரிக் பின் ஸியாத் போன்றோர்களை கூறலாம். அதுமட்டுமின்றி விஞ்ஞானம் போன்ற இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியுள்ளனர். அதுக்கு காரணம் ஆரம்ப அடித்தளம் மக்தப் மதரஸாக்களில் வளர்க்கப்பட்டதால் கல்மேல் எழுத்துப்போல் ஆணித்தரமாய் தக்வா மற்றும் ஈமான் நின்றதாலே அத்தனை வெற்றிகளையும் பெற்றனர். தற்போது உள்ள முறையில் நமது பிள்ளைகளும் ஐந்து வருட மக்தப் மதரஸா படிப்பின் பின்னர் உயர்தரம் மற்றும் உயர்கல்வி என்று செல்லும் போது இப்படிப்பட்ட சிறந்த அத்திவாரம் அமைவதால் அவர்களுக்குத் மார்க்க தெளிவு பெற்ற ஈமானிய வைத்தியராக, பொறியியலாளராக, ஆசிரியராக மற்றும் இது போன்ற துறைசார் வல்லுனர்களாக உருவாக வாய்ப்புள்ளன. தற்போது கூட ஏராளமானவர்களை பார்க்க முடியும் மக்தப் மதரஸாகளில் வளர்க்கப்பட்டதால் சாதாரணதரம் உயர்தரம் ஆகியவற்றிலும் மார்க்கப் பற்றும் ஈமானும் தக்வாவும் அனுவும் குறையாமல் இருப்பதை பார்க்கலாம் இதனையே ஜமியா, ஊர் நிர்வாகம், மக்கள், பெற்றோர் எதிர்பார்த்தனர்.

குருணாகல் மாவட்டத்தில் ஒரு பகுதியில் நடந்த நிஜ சம்பவம் மக்தப் வகுப்பு மாணவர்களிள் எப்படி தைரியம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்; ஒரு தடவை அந்தப் பகுதியில் தனது வாப்பம்மா இறையடி சேர்ந்து விட்டார், அவருடைய ஜனாஸாவை தோல்விக்கு அவரது கணவர், பிள்ளைகள், மருமகன்மார்கள் இருந்தும் யாரும் முன்வரவில்லை. அதனால் வெறும் எட்டாம் தர மாணவன் மக்தப் வகுப்புகளில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவன், முன்வந்து அவனது வாப்பம்மாவின் ஜனாஸாவை தொழுகை நடத்தினார் அந்த தைரியமும் உற்சாகமும் வந்துள்ளது என பாருங்கள். (இன்னும் இதுபோன்ற வெளிவராத சம்பவங்கள் இருக்கலாம்).

அடுத்து மக்தப் பற்றி பலரும் பல நேர் எதிர் விமர்சனங்கள் செய்கின்றனர். விமர்சனங்கள் எனும்போது செய்யும் செயல் நல்லதாயின் விமர்சனங்கள் ஏற்படலாம். எந்த விடயங்களை ஆரம்பிக்கும் போதும் பல குறைகள் இருக்கிறன. உதாரணமாக பாடசாலை பாடத்திட்டத்தினை எடுத்துக் கொண்டால் அதில் பல குறைபாடுகள் உள்ளது என்பதனாலேயே ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றங்கள் செய்யப்பட்டு அவை திருத்தப்படுகின்றன. அந்த வகையில் எமது மக்தப் மத்ரசாகள் சுமார் பத்து வருட காலங்கள் அவதாணிக்கப்பட்டு மீண்டும் இந்த வருடம் பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதிலே பலரது விமர்சனங்களாக இருந்தது எமது பிள்ளைகள் குர்ஆன் ஓதுவதில்லை அல்லது குர்ஆன் ஓதுவதற்கு காலம் எடுக்கிறார்கள் என்பதாகும். இந்தக் குறையை நீக்கி புதிய பாடத்திட்டத்தில் மக்தப் மாணவர்களினதும் பெற்றோர்களினதும் விருப்பத்திற்கு அமைய பள்ளிக்கூடங்களில் போன்று குர்ஆன் வகுப்புகளும் சிறந்த முறையில் தற்போது நடைபெற்று வருகின்றன.

இறுதியாக பெற்றோர்களே !!! நாம் இமாம் ஷாஃபி, இமாம் அபூஹனீபா, இமாம் ஹம்பல் போன்று பெற்றோர்களாக நாம் இருப்போமாயின், நிச்சயமாக நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் அந்த மக்தப் மதரசாக்களின் தேவைப்பாடு இல்லாமல் இருக்கும். அப்படி இல்லாத காரணத்தினாலும், நமக்கு நேரம் இல்லாத காரணத்தினாலும் நம் பிள்ளைகளை சும்மா விட்டு விட முடியாது. இந்த இமாம்களின் பிள்ளைகள் கூட இதுபோன்ற மக்தப் மதரஸாக்களில் கல்வி பயின்று உள்ளனர். ஆகவே ஒவ்வொரு பெற்றோரும் சிந்தியுங்கள் உங்களுக்கு ஜமிய்யாவுடன் உள்ள தனிப்பட்ட கோபங்கள் காரணமாக ஜமியத்துல் உலமா செய்யும் மக்தப் மதரஸாகளுக்கு அனுப்பு உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், அது போன்ற நிகழ்வுகள் நடக்கும் இடங்களுக்கு உங்கள் பிள்ளைகளை தாராளமாக அனுப்பி வையுங்கள். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கு இசைவாக உங்கள் பிள்ளைகளையும் இளமையிலிருந்தே மார்க் அறிவுடனும் ஈமானுடனும் கூடிய துறை சார்ந்த வல்லுநராக உருவாக்குவதற்கு உங்கள் பிள்ளைகளையும் மக்தப் மதரஸாக்கள் மற்றும் அது போன்ற மார்க்க விடயங்கள் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைத்து ஈருலகிலும் தப்பிய பெற்றோர்களாக, ஈருலகிலும் வெற்றி பெற்று பெற்றோர்களாக, ஆவதற்கு இறைவன் கிருபை செய்வானாக.

R.M. AFZAL RAZA
KANUKETIYA
NIKAWERATIYA

குழந்தை செல்வம் என்பது இறைவனால் வழங்கப்பட்ட மாபெரும் அருளாகும். அதன் பெறுமதியை விளக்குவதற்கு சொல்லன்னா வார்த்தைகள், அதற்காகத்தான் இறைவனுக்கு நன்றியுள்ள பிள்ளைகளாக அவர்களை வளர்க்க வேண்டும். அத்துடன் அல்லாஹ் கூறிய பிரகாரமும் நபியவர்கள் வாழ்ந்து…

குழந்தை செல்வம் என்பது இறைவனால் வழங்கப்பட்ட மாபெரும் அருளாகும். அதன் பெறுமதியை விளக்குவதற்கு சொல்லன்னா வார்த்தைகள், அதற்காகத்தான் இறைவனுக்கு நன்றியுள்ள பிள்ளைகளாக அவர்களை வளர்க்க வேண்டும். அத்துடன் அல்லாஹ் கூறிய பிரகாரமும் நபியவர்கள் வாழ்ந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *