Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சவூதி தூதுவர் அமீர் அஜ்வதுக்கு முஸ்லிம் மீடியா கௌரவம். 

சவூதி தூதுவர் அமீர் அஜ்வதுக்கு முஸ்லிம் மீடியா கௌரவம்.

  • 1

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

சவூதி அரேபியாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக பதவியேற்கவுள்ள சட்டத்தரணி அஷ் ஷெய்க். அமீர் அஜ்வாட் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கொழும்பு 03 இலுள்ள ”இந்தியன் சமர் டிரெஸ்டோரண்டில்” நேற்று (25.04.2024) இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் போரத்தின் செயற்குழு உறுப்பினர்களான ஊடகவியலாளர்கள், ஒலி, ஒளிபரப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும், இந் நிகழ்வில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், குறிப்பாக ஊடகம் மற்றும் கலாச்சரம் சார்ந்த செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருநாட்டு தொடர்புகளை விஸ்தரிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. எதிர் காலத்தில் ஊடக செயற்பாட்டாளர்களுக்கான பல்வேறு நலன் திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் தூதுவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன், போரத்தின் செயற்குழு உறுப்பினர்களால் குறித்துக் காட்டப்பட்ட சில சமூக நலன்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இது விடயங்கள் அத்தனையும் உள்வாங்கிய கௌரவ தூதுவர் எதிர்காலத்தில் தன்னால் எமது நாட்டுக்கு ஆற்றவுள்ள பல்வேறு நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விளக்கிக் கூறியமை சிறப்பம்சமாகும். புதிய தூதுவர் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியளவில் சவூதி அரேபியாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜாமியா நளீமியா, பேராதனைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமாணி மற்றும் சட்ட முதுமாணிப் பட்டங்கள் பெற்று 1997ல் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்! இலங்கை வெளிவிகார சேவையைப் பெற்று பல்வேறு நாடுகளில் இராஜதந்திரச் சேவைகளில் இனைந்து கொண்டார்.

தற்போது இலங்கை வெளிவிவகார அமைச்சில் மேலதிகச் செயலாளராக விளங்கும் O.L அமீர் அஜ்வத் அவர்கள் ஏற்கனவே ஓமான் மற்றும் யெமன் நாடுகளிலும் இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றியுள்ளதோடு அடுத்த மாதம் முற்பகுதியில் சவுதி அரேபியா தூதுவராகப் பொறுப்பேற்கக் காத்திருக்கிறார்.

(அஷ்ரப் ஏ சமத்)

The post சவூதி தூதுவர் அமீர் அஜ்வதுக்கு முஸ்லிம் மீடியா கௌரவம். appeared first on Uthayam News.

“}]]Read More 

​ 

[[{“value”:” சவூதி அரேபியாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக பதவியேற்கவுள்ள சட்டத்தரணி அஷ் ஷெய்க். அமீர் அஜ்வாட் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கொழும்பு 03 இலுள்ள ”இந்தியன்…

[[{“value”:” சவூதி அரேபியாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக பதவியேற்கவுள்ள சட்டத்தரணி அஷ் ஷெய்க். அமீர் அஜ்வாட் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கொழும்பு 03 இலுள்ள ”இந்தியன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *