Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சிந்திக்கும் உள்ளங்களுக்கு 

சிந்திக்கும் உள்ளங்களுக்கு

  • 123

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஒரு சபையில் ஒரு மார்க்கம் படித்த நபருடன் நடந்த உரையாடல்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு!

நான் இந்த வகுப்பில் “சுவனம் செல்ல இலகுவான வழிகள்” என்ற தலைப்பில் ஒரு உரையாடலை தொடங்குவோம் என நினைக்கிறேன்.

மக்களுக்கு கொஞ்சம் விருப்புடனும் அதிக வெறுப்புடன் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். பொதுவாக ஷைத்தான் நம்முடன் இருக்கின்ற பொழுது அப்படி தானே நல்ல விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வப்படுவது குறைவு தானே அது இயல்பு.

அப்போது அதிக ஆர்வமாய் கடைசி மேசையில் அமர்ந்து கொண்டிருந்த ஒரு பெண் எழும்பி எனக்கு ஒரு சிறிய சந்தேகம் கேட்கலாம். கேளுங்கள் என்கிறார்.

பெண்:- அதிகமான நன்மைகளை ஒரே நாளில் பெற்றுக் கொள்ள வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் அதற்கு எதாவது நல்ல அமல்களை சொல்லித் தாருங்கள்.

ஆலிம்: மாஷா அல்லாஹ் நல்லதொரு கேள்வி

உங்கள் கேள்விக்கான பதில்:

  1. சூரா இஹ்லாஸ் பத்து முறை ஓதினால், அல்லாஹ்வினால் சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டப்படும்.
  2. சூரா அஸ் சில்சால் ஒரு முறை ஓதினால், அல் குர்ஆனை ½ ஒதியதற்குறிய நன்மை கிடைக்கும்.
  3. சூரா காஃபிரூன் ஒருமுறை ஓதினால், ¼ ஒதியதட்குறிய நன்மை கிடைக்கும்.
  4. சூரா தகாசூர் ஒருமுறை ஓதினால், 100 ஆயத்துகளுக்கு சமன்.

ஆகவே இவற்றை செய்து அதிக நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று விளக்கம் கூறினார்.

“ஜசாகள்ளாஹ்” என்று கூறி அமற்கிறாள்.

சிறிது நேரத்தில் இன்னொரு வாலிபன் எழும்ப முயலும் போதே அனைவரும் நக்கலாக சிரிக்க தொடங்கினர். கேள்வி கேட்கப் போகும் முகத்தை பார் என்று நக்கலாக, அவன் பொருட் படுத்தாமல் எழும்பி கேட்டான்.

நான் ஒரு நாளில் அதிகம் பாவம் செய்கிறேன். இதனை நினைத்து இரவில் அஞ்சுகிறேன். இரவில் மரணித்தால் எனது நிலை என்னவாகும் என்று இதற்கு எதாவது சொல்லுங்கள் என்று கூறுகிறான்.

மாஷா அல்லாஹ் சிறந்த ஒரு கேள்வியை கேட்டு இருக்கிறாய் மகனே!

உனது கேள்விக்கான பதில்:-

எவன் ஒருவன் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி சூரா யாசீனை ஒதுகிரானோ அவனுடைய பாவங்கள் மன்னிக்கபடும்.

எனவே நீ ஒவ்வொரு நாளும் சூரா யாசீணை ஓதுகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய் என்று முடிக்கிறார்.

சிறிது நேரத்தில் இன்னொரு பெண்மணி எழுந்து,

என்னால் இது எதுவுமே செய்ய முடியவில்லை எதேனும் சிறிய துஆ ஒன்றை சொல்லி தாருங்கள் என்று கூறுகிறாள்.

அல்ஹம்துளில்லாஹ் சிறப்பானதொரு வினா.உங்கள் கேள்விக்கான பதில்:

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு அஹ்தன் ஸமதன் லம் யலித் வழம் யூலத் வலம் யகுல்லஹு குபுவன் அஹத்.

இந்த துஆவை ஓதினால் 20 லட்சம் நன்மைகள் கிடைக்கும். ஆகவே இந்த துஆவை தினமும் நல்ல மனத் தூய்மையுடன் ஓதுங்கள்.

இன்ஷா அல்லாஹ் நேரம் சென்று கொண்டிருப்பதால் இன்றைய நாளுடைய வினாக்களை முடித்துக் கொண்டு நாளைக்கு மீதமுள்ள வினாக்களுக்கு பதில் அளிக்க முயற்சி செய்கிறேன் என்று முடித்துக் கொள்வோம்.

அல்லாஹ் எம் எல்லோரையும் நேர்வழியில் செல்ல தவ்பீக் செய்ய வேண்டும் என்று இந்த நிகழ்வை முடித்துக் கொள்கிறேன். ஜஸாக்கல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு.

அனைவரும் சபைகள் முடிவுறும் நேரத்தில் ஓதும் துஆவை ஓதி முடித்துக் கொள்ளுங்கள்

Hālēēmā Sāñīfdhēēñ
Kekirawa

ஒரு சபையில் ஒரு மார்க்கம் படித்த நபருடன் நடந்த உரையாடல். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு! நான் இந்த வகுப்பில் “சுவனம் செல்ல இலகுவான வழிகள்” என்ற தலைப்பில் ஒரு உரையாடலை தொடங்குவோம் என…

ஒரு சபையில் ஒரு மார்க்கம் படித்த நபருடன் நடந்த உரையாடல். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு! நான் இந்த வகுப்பில் “சுவனம் செல்ல இலகுவான வழிகள்” என்ற தலைப்பில் ஒரு உரையாடலை தொடங்குவோம் என…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *