Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சிறுவர்கள் மூலம் வீட்டவர்களின் ஒட்டுக் கேட்டல் 

சிறுவர்கள் மூலம் வீட்டவர்களின் ஒட்டுக் கேட்டல்

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இன்று சிலர் அண்டை வீட்டார்களுடன் அல்லது உறவினர்களுடன் சண்டை பிடித்து பல நாட்களாக பேசாமல் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் வீட்டில் பேசும் செ‌ய்யு‌ம் விடயங்களை அந்த வீட்டு சிறார்களிடம் கேட்டு அறிந்து கொள்ளும் தீய மோசமான பண்பு பரவலாக காணப்படுகிறது

  1. உனது தந்தை என்னை பற்றி என்ன சொன்னார்?
  2. வீட்டில் என்ன செய்கிறார்கள்??
  3. என்ன பேசுகிறார்கள்??

இவ்வாறான கேள்விகளை கேட்டு தனக்கு தேவையான தகவல்களை திரட்டி கொள்கிறார்கள். அந்த சிறுவர்களும் போதிய அறிவு இன்மையினால் தனக்கு தெரிந்த விடயங்களை அவர்களிடம் கக்கி விடுகிறார்கள்

இஸ்லாமிய அறிஞர்கள் இதனை தடுக்கப்பட்ட தஜஸ்ஸுஸ் (துருவி ஆராய்தலின்) ஒரு வகை என கூறுகிறார்கள் அதற்கு வலு சேர்க்கும் விதமாக புகாரியில் ஒரு ஹதீஸ் இடம்பெற்றுள்ளது

தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் (புகாரி 7042)

இமாம் ஸுன்ஆனி (ரஹ்) கூறுகிறார்கள்: ஹதீஸில் காது தாழ்த்தி ஒட்டு கேட்டல் என்பதனுள் சிறுவர்களிடம் ஏனைய உறவினர்கள் பேசுவதை செய்வதை கேட்டு அறிந்து கொள்ளும் விடயமும் உள்ளடங்கும். (ஸுபுலு ஸலாம்568/4)

மேற்கூறிய ஹதீஸில் அவ்வாறு செய்வதற்குரிய தண்டனையாக காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறான வேதனை தரக்கூடிய தண்டனைகளில் இருந்து எம்மை நாமும் ஏனையவர்களையும் பாதுகாப்பது அவசியமாகும் ஆகவே முடிந்த வரை இத் தீய பண்பில் இருந்து தவிர்ந்து இருப்போம்!!

Sabry Sahwi
BA®(SEUSL)





yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

இன்று சிலர் அண்டை வீட்டார்களுடன் அல்லது உறவினர்களுடன் சண்டை பிடித்து பல நாட்களாக பேசாமல் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் வீட்டில் பேசும் செ‌ய்யு‌ம் விடயங்களை அந்த வீட்டு சிறார்களிடம் கேட்டு அறிந்து கொள்ளும் தீய…

இன்று சிலர் அண்டை வீட்டார்களுடன் அல்லது உறவினர்களுடன் சண்டை பிடித்து பல நாட்களாக பேசாமல் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் வீட்டில் பேசும் செ‌ய்யு‌ம் விடயங்களை அந்த வீட்டு சிறார்களிடம் கேட்டு அறிந்து கொள்ளும் தீய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *