Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சீனாவில் பொருளாதார மந்தநிலை - Youth Ceylon

சீனாவில் பொருளாதார மந்தநிலை

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் உள்ளூர் உற்பத்தித் துறையும் ஏற்றுமதித்துறையும் மந்த கதியில் இயங்குவது தேசிய புள்ளிவிவர பணியகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இருந்து அறிய முடிகிறது.

உற்பத்தித்துறையை விரிவுபடுத்தும் முயற்சிகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் 50.9 என்றிருந்த உற்பத்தியளவு ஜூலை மாதத்தில் 50.4 ஆகக் குறைவடைந்துள்ளது. இதேபோல 48.1 என்பதாகக் காணப்பட்ட ஏற்றுமதி வீதம் கடந்த ஜூலை மாதம் 47.7 என்பதாக வீழ்ச்சி கண்டிருக்கிறது.

இந்த வீழ்ச்சிக்கு இயற்கை காரணங்களே முக்கிய இடத்தை வகிப்பதாக தெரிகிறது. கடந்த மாதம் சீனாவில் ஏற்பட்ட பெருவெள்ளம், யாங்ட்ஸி நதி பெருக்கெடுத்து கழிமுக பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என்பன பொருள் விநியோக வலைப்பின்னலைப் பாதித்ததாகவும், பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டதும் இந்த உற்பத்தி மந்த நிலைக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.

உலக நாடுகளில் பெருந்தொற்று ஏற்பட்டிருப்பதால் ஏற்றுமதியில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் உள்ளூர் உற்பத்தித் துறையும் ஏற்றுமதித்துறையும் மந்த கதியில் இயங்குவது தேசிய புள்ளிவிவர பணியகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இருந்து அறிய முடிகிறது. உற்பத்தித்துறையை விரிவுபடுத்தும்…

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் உள்ளூர் உற்பத்தித் துறையும் ஏற்றுமதித்துறையும் மந்த கதியில் இயங்குவது தேசிய புள்ளிவிவர பணியகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இருந்து அறிய முடிகிறது. உற்பத்தித்துறையை விரிவுபடுத்தும்…