Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சூழ்ந்திடும் ஏழ்மை 

சூழ்ந்திடும் ஏழ்மை

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சூழ்ந்துவரும் ஏழ்மையில்
எள்ளையும் ஏழாகப்
பிரித்து உண்டு
பாதி வயிற்றோடு
படுத்துறங்கும் பிஞ்சுகள்

ஒருசான் வயிற்றை
உலுப்பும் பசியில்
மூன்று வேளையை
ஒரு வேளையாக்கி
சிக்கனத்தை சேமித்திடும்
சிறு வாழ்வு தான்

பொல்லாத கைகளும்
பொறுப்புக்களை ஏற்றதால்
பட்டுத் துணியிலும்
பஞ்சணை மெத்தையிலும்
உல்லாச மாளிகையில்
உலுத்தர் கூட்டம்

பட்டினியில் பலவுயிரும்
பாரினிலே பரிதவிக்க
பெட்டியிலே பலகோடி
பொத்தி வைப்பதில்
பயன் உண்டோ?

காசுக் கடதாசிகள்
கைசேரா கைவிரல்களும்
விஷமான விலைவாசியில்
கருகிடும் கனவுகளோடு
கரைந்திடும் கழிக்கப்பட்டவர் வாழ்வு

நிலாக்கவி நதீரா முபீன்
புத்தளம் (புளிச்சாக்குளம்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

சூழ்ந்துவரும் ஏழ்மையில் எள்ளையும் ஏழாகப் பிரித்து உண்டு பாதி வயிற்றோடு படுத்துறங்கும் பிஞ்சுகள் ஒருசான் வயிற்றை உலுப்பும் பசியில் மூன்று வேளையை ஒரு வேளையாக்கி சிக்கனத்தை சேமித்திடும் சிறு வாழ்வு தான் பொல்லாத கைகளும்…

சூழ்ந்துவரும் ஏழ்மையில் எள்ளையும் ஏழாகப் பிரித்து உண்டு பாதி வயிற்றோடு படுத்துறங்கும் பிஞ்சுகள் ஒருசான் வயிற்றை உலுப்பும் பசியில் மூன்று வேளையை ஒரு வேளையாக்கி சிக்கனத்தை சேமித்திடும் சிறு வாழ்வு தான் பொல்லாத கைகளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *