Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொருத்தே 

செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொருத்தே

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இன்று நாம் ஒவ்வொருவரும் செய்யும் மிகப்பெரிய தவறு ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவர் நல்லவர், கெட்டவர் என்று தீர்மானித்து விடுகிறோம். ஆனால் உங்களின் பார்வையில் நல்லவரா தெரிபவர் அல்லாஹ்விடம் வேறு பார்வையிலும் உங்களிடம் கெட்டவரா தெரிபவர் அல்லாஹ்விடம் வேறு பார்வையிலும் பார்க்கப்படுபவனாக இருப்பான்.

காரணம் உள்ளங்களையே இறைவன் பார்க்கிறான். ஒருவர் செய்யும் ஒரு செயல் ஏன்? எதுக்கு? எதனால்? செய்கிறான் என்ற விடயங்களைப்பற்றி அறியாமல் உங்களுக்கு வெளிப்படையில் தெரிந்தவைகளைவைத்து ஒரு கருத்தை முடிவு செய்வது தவறாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே ஆகும்” (புஹாரி)

அல்குர்ஆனில் 67 ம் அத்தியாயத்தில் 13 ம் வசனத்தில் கூறுகிறான்’ “இறைவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்”

எனவே இதனை புரிந்து கொள்வதற்காக ஒரு படிப்பினைக்குறிய கதை ஒன்றை கூறுகிறேன்.

ஒருவர் சுப்ஹ் வேளையில் பள்ளிக்குச் சென்று அங்கு மரணித்து விடுகிறார். மற்றொருவர் சூதாட்ட இரவு விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கு மரணித்து விடுகிறார். இதில் எது நல்ல மரணம் எது கெட்ட மரணம் ? நீங்கள் முதலாமவரேயே கூறுவீர்கள் ஆனால் இல்லை இரண்டாமவரே!

முதலாமவர் பள்ளி உண்டியலைத் திருட பள்ளிக்குச் செல்கிறார். அங்கு ஏற்பட்ட விபத்தால் மரணித்து விடுகிறார். இரண்டாமவர் சூதாட்ட இரவு விடுதிக்கு மக்களை தொழுகையின் பக்கம் அழைக்கச் செல்கிறார். அங்கு ஏற்பட்ட விபத்தால் மரணித்து விடுகிறார்.

எனவே இந்த கதை உணர்த்தும் விடயம் விளங்கியிருக்கும். பெரும்பாலும் மனிதர்கள் தாம் கண்களால் பார்த்தவைகளை வைத்தே தீர்ப்புக் கூறுகின்றனர்.

இடங்களைப் பொறுத்தல்ல எண்ணங்களைப் பொறுத்தே இறைவன் நல்லவன் ,கெட்டவன் யார் என்பதை தீர்மானிக்கின்றான. இறைவன் உடலின் அசைவுகளை வைத்து மட்டும் தீர்ப்பளிப்பதில்லை. மாறாக உள்ளங்களில் உள்ளவைகளை வைத்தே தீர்ப்பளிக்கிறான்.

Faslan Hashim
Islahiyya Arabic collage ®
South Eastern University of Sri Lanka.
BA ®

இன்று நாம் ஒவ்வொருவரும் செய்யும் மிகப்பெரிய தவறு ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவர் நல்லவர், கெட்டவர் என்று தீர்மானித்து விடுகிறோம். ஆனால் உங்களின் பார்வையில் நல்லவரா தெரிபவர் அல்லாஹ்விடம் வேறு பார்வையிலும் உங்களிடம் கெட்டவரா…

இன்று நாம் ஒவ்வொருவரும் செய்யும் மிகப்பெரிய தவறு ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவர் நல்லவர், கெட்டவர் என்று தீர்மானித்து விடுகிறோம். ஆனால் உங்களின் பார்வையில் நல்லவரா தெரிபவர் அல்லாஹ்விடம் வேறு பார்வையிலும் உங்களிடம் கெட்டவரா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *