Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
செய்தி இணையத்தளங்களை பதிவு செய்ய உரிய நடவடிக்கை

செய்தி இணையத்தளங்களை பதிவு செய்ய உரிய நடவடிக்கை

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அனைத்து செய்தி இணையத்தளங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் வகையில் பத்திரிகை சபை சட்டத்தை அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும் வகையில் மீண்டும் திருத்துவது தொடர்பில் தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகத்துறை அமைச்சின் ஆலோசனை தெரிவுக்குழுவின் கூட்டத்தில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். தொலைக்காட்சிகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளில் மீண்டும் திருத்தங்களை செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, கீதா குமாரசிங்க, ஜீ. கருணாகரன், எஸ். கஜேந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், உத்திக பிரேமரத்ன, டயனா கமகே, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஜகத் பீ. விஜேவீர, அரச செய்திப் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க, தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெஜினோல்ட் குரே, இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, இலங்கை பத்திரிகை சபையின் தலைவர் மஹிந்த பத்திரன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

அனைத்து செய்தி இணையத்தளங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் வகையில் பத்திரிகை சபை சட்டத்தை அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும் வகையில் மீண்டும் திருத்துவது தொடர்பில் தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகத்துறை…

அனைத்து செய்தி இணையத்தளங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் வகையில் பத்திரிகை சபை சட்டத்தை அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும் வகையில் மீண்டும் திருத்துவது தொடர்பில் தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகத்துறை…