Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
(ச்ச்) சீதனம்.. 

(ச்ச்) சீதனம்..

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மாலை நேரங்களில் கடற்கரைக்கு செல்வது வழமையாகும் நேற்றைய தினம் கடற்கரைக்கு சென்ற சமயம் அந்த சம்பவம் நடந்தேறியது

கரையோரமாக சுமார் 60 அல்லது 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியாக அழுது கொண்டிருக்கிறார். தூரத்தில் இருந்து பார்த்த எனக்கு அவரிடம் சென்று ஏதாவது ஆறுதல் வார்த்தை கூற வேண்டும் என்று மனது துடித்தது. அவர் அருகில் சென்று அவரிடம் சிறிது பேசிக்கொண்டிருக்கும்போது அவர் அவருடைய கவலைகளை கூறினார்.

அவர் அவருடைய பதினெட்டாவது வயதில் வெளிநாட்டிற்கு தனது சகோதர சகோதரிகளுக்காக உழைப்பதற்கு சென்றுள்ளார் தனது முப்பதாவது வயதில் திருமணம் செய்துள்ளார் திருமணத்தின் மூலம் ஒரு பெண் பிள்ளை இன்னும் ஒரு ஆண் பிள்ளை உள்ளது சுமார் இருபது வருடங்கள் வெளிநாட்டில் பிள்ளைகளுக்காக வேலைபார்த்து உழைத்து கோடிக்கணக்கில் பெறுமதியான ஒரு மாடி விடும் வயல் காணி எக்கச்சக்கமான சொத்தும் சேர்த்துள்ளார்.

தனது மகள் திருமண வயதை எட்டியவுடன் நன்றாக படித்த மாப்பிள்ளை என்று ஒருவனை திருமணம் முடித்துக் கொடுத்து அந்த கோடிக்கணக்கான வீட்டையும் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். தற்போது மகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் இன்னொரு குழந்தை வயிற்றிலும் உள்ளது. இந்த சமயத்தில் ஏனைய வயல்களையும் பிற சொத்துகள் அனைத்தையும் தன்னுடைய பெயருக்கு மாற்றி தருமாறு மகளின் கணவர் மிரட்டுகிறாராம். தன்னுடைய மகளுக்கு சொத்தை கொண்டு வருமாறு வற்புறுத்துகிறாராம். இதற்கு மகளின் கணவரின் பெற்றோர்கள் உடந்தையாம்.

போலீசிலும் போக முடியாத நிலைமை பிற நபர்களிடம் சொல்ல முடியாத நிலைமை குடும்ப கவுரவம் மகளின் எதிர்கால நிலைமை என்ன?? எல்லாவற்றையும் மகளுக்கே கொடுத்துவிட்டால் என்னுடைய ஆண்மகன் நிலைமை என்ன??? என்னுடைய மனைவியுடைய நிலைமைகள் என்ன??? என்று செய்வது அறியாமல் தனியாக இருந்த அழுகிறேன்.

FARHATH RAHMAN sarayi

மாலை நேரங்களில் கடற்கரைக்கு செல்வது வழமையாகும் நேற்றைய தினம் கடற்கரைக்கு சென்ற சமயம் அந்த சம்பவம் நடந்தேறியது கரையோரமாக சுமார் 60 அல்லது 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியாக அழுது கொண்டிருக்கிறார். தூரத்தில்…

மாலை நேரங்களில் கடற்கரைக்கு செல்வது வழமையாகும் நேற்றைய தினம் கடற்கரைக்கு சென்ற சமயம் அந்த சம்பவம் நடந்தேறியது கரையோரமாக சுமார் 60 அல்லது 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியாக அழுது கொண்டிருக்கிறார். தூரத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *