Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஜனாதிபதி பொது மன்னிப்பில் துமிந்தா சில்வா விடுதலை - Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

ஜனாதிபதி பொது மன்னிப்பில் துமிந்தா சில்வா விடுதலை

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கொலை குற்றச்சாட்டில்  சிறை தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

“சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வா, ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்” என்று சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை சம்பவத்தில் குற்றவாளியான இனங்காணப்பட்ட துமிந்த சில்வா 2016ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 16 அரசியல் கைதிகள், இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு பூராகவுமுள்ள சிறைகளிலிருந்து 93 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று 75 இற்கு மேற்பட்டோர் விடுதலை 225 பேரின் மரண தண்டணை நீக்கம், ஆனாலும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுந்தீன், முன்னாள் ஆளுனர் அஸாத் ஸாலி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், கவிஞர் அஹ்னாப் உட்பட பல முஸ்லிம் இளைஞர்கள் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி சிறைவாசம் அனுபவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கொலை குற்றச்சாட்டில்  சிறை தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. “சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வா, ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பின் கீழ்…

கொலை குற்றச்சாட்டில்  சிறை தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. “சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வா, ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பின் கீழ்…