Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஜனாஸாவும் பந்தாடப்படும் முஸ்லிம்களும் 

ஜனாஸாவும் பந்தாடப்படும் முஸ்லிம்களும்

  • 148

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எந்த ஒரு நாட்டினதும் அரசியல் யாப்பினை பெறுத்தவரையிலும், ஒரு மனிதன் உலகில் பிறந்தது முதல் அவனது இறப்பு, முடிவு, இறுதிக் கிரியை வரை அவனது வாழ்கை முறைமை, மத அடிப்படை உரிமை உற்பட, அவனது இறுதி சடங்கு அனைத்தும் அவன் வாழும் நாட்டில் அவனுக்கு அவன் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ள அந்தந்த நாட்டின் சட்டங்களின் முலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இது உலக நியதி.

ஒரு நாடு ஒரு மனிதனுக்கு அ‌ல்லது ஒரு சமூகத்திற்கு வழங்கும் உரிமைகளின் அடிப்படையிலேயே அந்நாட்டின் மதிப்பும் உயர்ச்சியும் மறியாதையும் தங்கியுள்ளது.

இன்று மனித உரிமைக்கு மதிப்பு அளிப்பதானாலேயே ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் மனித உரிமை விடயத்தில் மேலோங்கி நிற்கின்றது.
அண்மையில் நியுசிலாந்தில் சிறுபான்மையினருக்கு எதிராக பள்ளிவாசலில் நடந்த கொடூர கொலையை அந்த நாடு கைக் கொண்ட விதமே அந்நாட்டின் மதிப்பையும் மரியாதையையும் மேலும் மேலும் மேலோங்கச் செய்தது.

இதற்காகவே ஒரு தனி மனிதனோ, அல்லது ஒரு சமுதாயமாகவோ அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள, ஒரு அரசாங்கத்தை தெரிவு செய்து, அதை நிர்வகிக்க ஆதரவளித்து, அரசுக்கு வரி செலுத்தியும் வருகிறான். இந்த வகையில் அந்த சமுகத்தின் பாதுகாப்பிலும் உரிமையிலும் இருந்து நெரி தவறுவதற்கு ஒரு அரசுக்கு எந்த அனுமதியும் கிடையாது. அது ஒரு சமூகம் வாக்களித்து பெற்றுக் கொண்ட அரசாயினும் சரி, அவன் எதிராக வாக்களித்த நிலையில் தெரிவு செய்யப்பட் அரசானாலும் சரியே. அதுவே ஜனநாயகம்.

இந்த வகையில் பல்லின மக்கள் வாழும் நமது இலங்கை நாட்டில், அண்மையில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றின் காரணமாக பல சமூகத்தினரதும் மரணம் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் அவரவர் அடிப்படை மத உரிமைகளை பாதுகாப்பது ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையாகும். யார் எதிர்த்தாலும், எந்த அமைப்புக்கள் எதிர்த்தாலும், இதற்கு ஒரு பொறுப்பான அரசாங்கமே அவர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும். ஒரு அரசாங்கம் அந்த பொறுப்பில் இருந்து விலகி, எடுப்பார் கைப்பிள்ளை போல் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு இனவாத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு அடிமைப்பட்டு செயற்படுமாயின், அது அந்த அரசாங்கத்தின் பலவீனத்தையே
பரதிபலிக்கின்றது.

அதாவது நிலையிலாத அரசாங்கமே செய்ய வழியின்றி இவ்வாறான நடைமுறைகளை கையாள்கிறது. இவ்வாறான ஒரு நிலை நாட்டில் தொடர்ந்தால், சிறுபான்மை அந்த அரசங்கத்தின் மீது நம்பிக்கை அற்றுப் போகும் நிலை உருவாகும். இந்நிலையானது அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் இனவாத சக்திகளின் கை ஓங்கி, சிறுபான்மையின் எதிர் காலம் கேள்விக்குறியாகும்.

மக்கள் ஆதரவற்ற, இனவாதத்தின் அஸ்திவாரத்தில் மீது, மேல் எழுப்பப்பட்ட அரசாங்கங்களே உலகில் இவ்வாறான நடைமுறையினைக் கைக் கொள்கிறது.

நம் நாட்டிலும் அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டுள்ளதா? அதாவது ஒரு இனத்திற்கு அநீதி இழைப்பதின் மூலம், ஒரு இனத்தில் தங்கி நிற்கும் நிலையே இங்கும் அரங்கேறுகிறதா?

அதாவது ஒரு சமூகத்தின் சமய மத ரீதியிலான உடனடியாகத் தீர்கப்படவேண்டிய பிரச்சினை, ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தினால் இழுத்தடிக்கப்படுகிறது.

ஆறு மாதங்கள் தேவை என, பின் போடப்பட்ட சமூகத்தின் முக்கிய பிரச்சினை, அதிலும் தீர்கப்படாமல் மீண்டும் மீண்டும் இழுத்தடிப்புகள் இழுபறிகள் நடப்பதன் முலம், அரசை ஏதோ ஒரு பின்னணியில் உள்ள போய் ஆட்டுகின்றது என்றே கருதவேண்டியுள்ளது.

கொரோனா மரணம் சம்பந்தமாக உலக அரங்கில் தெளிவான ஒரு தீர்வுகளும், தெளிவான ஆராய்ச்சிகளும் உள்ள போது, நம் நாட்டில் அரசு மருத்துவ பிரிவுக்கும், மருத்துவ பிரிவு புவியல் பிரிவுக்கும், பூவியல் பிரிவு அரசுக்கும் மாறி மாறி பந்தை கைமாற்றுவதில் இந்த நாட்டின் சனத் தொகையில் ஒரு பிரிவாக, ஒரு அங்கமாக உள்ள முஸ்லிம்களின் உரிமைகளில், முக்கிய பிரச்சினைகளில், அரசு முன்னுரிமை வழங்குவதில் கரிசனை கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இருக்கும் அடிப்படை உரிமையை கேட்டதற்காக பந்தாடப்படுகிறோம். முற்போக்கு வாதிகள் என முத்திரை குத்தப்படுகிறோம்.

ஜனாஸாவை அடக்கம் செய்யலாம் என ஆயிரம் ஆய்வுகள் இருந்தபோதிலும், ஒரு சமுதாயத்தின் மனநிலை பற்றி கணக்கில் எடுக்காமல் எரித்தவர்கள், அடக்குவதை அனுமதிக்கமால் இருப்பதற்கு ஆய்வுகளை சோடிக்கின்றனர். எரிப்பதனால் பாதிப்படையும் சமூகத்தின் நிலை பற்றி சிந்திக்காதவர்கள் அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் அடையாத சமுகம் பற்றி சிந்திக்கின்றனர்.

ஒருதலைப் பட்சமாக சில மணித்தியாலங்களில் எந்த ஆதாரமும் இல்லாமல் எரிக்கும் முடிவை எடுத்தவர்களுக்கு, அடக்கம் செய்வதற்கு ஆயிரம் ஆய்வுகளும், பத்து மாத காலமும் போதாமல் இருப்பது கவலைக்குறிய விடயமே.

அதிலும் வெளிநாட்டு உதவியிலும் வெளிநாட்டுக் கடனிலும் தாங்கிவாழும் நாடு. கடும் சர்வதே அழுத்தங்களுக்கும் கவனம் செலுத்தாமல் செயல்படுகின்ற தென்றால், உள்நாட்டில் அதைவிட பெரிய அழுத்தங்களும் அரசை படு பாதளத்தில் தள்ளும் சமிக்கைகளும்
ஒலிக்கின்றதா என்ற கேள்வியே முன்நிற்கின்றது.

அரசுக்கான ஆதரவுகள் குறைந்து எதிர்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அதை சீர் செய்ய சிறுபான்மையினர் மீது கொடுபிடிகள் தொடருமா என்பதில் அச்சம் கொள்ள வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும் ஒரு சமுதாயத்தின் உரிமைகளை பறித்தது மட்டுமில்லமல் அரசாங்கம், தான் மக்களுக்கு செய்யவேண்டிய முக்கிய கடமையை செய்யத் தவறிவிட்டது என்பதே உண்மை.

பேருவளை ஹில்மி

எந்த ஒரு நாட்டினதும் அரசியல் யாப்பினை பெறுத்தவரையிலும், ஒரு மனிதன் உலகில் பிறந்தது முதல் அவனது இறப்பு, முடிவு, இறுதிக் கிரியை வரை அவனது வாழ்கை முறைமை, மத அடிப்படை உரிமை உற்பட, அவனது…

எந்த ஒரு நாட்டினதும் அரசியல் யாப்பினை பெறுத்தவரையிலும், ஒரு மனிதன் உலகில் பிறந்தது முதல் அவனது இறப்பு, முடிவு, இறுதிக் கிரியை வரை அவனது வாழ்கை முறைமை, மத அடிப்படை உரிமை உற்பட, அவனது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *