Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஜீம் (ج) என்ற எழுத்தின் உச்சரிப்பும் பயன்பாடும் 

ஜீம் (ج) என்ற எழுத்தின் உச்சரிப்பும் பயன்பாடும்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கண்ணியமிக்க நண்பர்களுக்கு, அரபு மொழி சம்பந்தமான ஒரு ஆய்வு கட்டுரையை உங்களுடன் பகிர்வதன் மூலம் சந்தோஷம் அடைகின்றேன்.

அரபு மொழி என்பது இவ்வுலகின் பழமை வாய்ந்த 10 மொழிகளில் ஒன்றாகவும், இன்னும் இன்றைய கணக்கெடுப்பின் படி இந்த உலகம் முழுவதும் 467 மில்லியன் அதாவது (6.6%) சதவீத மக்கள் தனது தாய் மொழியாகபேசுகிறார்கள். இன்னும் 26 நாடுகளில் அரச மொழியாகவும் ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது‌.

அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்தமட்டில் இஸ்லாமியர்களின் தெய்வீகத் தன்மை கொண்டமொழியாகவும் கருதப்படுகின்றது. இந்த அரபு மொழியின் உருவாக்கத்தை நாம் பார்த்தால் அதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனை இன்னொரு ஆக்கத்தில் பார்ப்போம்.

இப்போது நாம் அரபு அரிச்சுவடியின் எழுத்துக்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ள (ج) ஜீம் என்ற எழுத்தின் பயன்பாடுகள் மற்றும் உச்சரிப்பை பற்றிப் பார்ப்போம் !

சிலர் ஜீம் (ج)என்ற எழுத்தின் பயன்பாடுகள் உச்சரிப்பை பற்றிப் பார்ப்பதில் என்ன பயன் உள்ளது என்று எண்ணக் கூடும். ஆனால் அதன் பயன் என்பது அரபு மொழி கற்றவர்கள், கற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு மாத்திரம் இல்லாமல், அனைவருக்கும் பயனுள்ள ஒரு விடயமாகும் என்பதை இக்கட்டுரையின் முடிவில் அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அரபு மொழி ஐந்தாம் நூற்றாண்டுகளில் அரபு தீப கற்பகத்தில் மாத்திரம்தான் பேசப்பட்டு வந்தது. பின் நபிகளாரின் வருகைக்கு பிறகு ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் விரிவாக்கப்பட்ட பிறகு துருக்கி, எகிப்து, மஃரிப், லிபியா, சூடான், அல்ஜீரியா போன்ற நாடுகளில் அதிகமான மக்கள் இஸ்லாத்தை தழுவியதன் காரணமாக அந்த நாடுகளில் அரபு மொழி அரச மொழியாக்கப்பட்டது. அதனால் தாங்கள் பேசுகின்ற மொழியை விட்டு அரபு மொழியை கற்பதில் ஆர்வம் காட்டினார்கள்.

அவர்கள் அரபு மொழியை கற்றாலும், அவர்களுக்கு அரபு மொழி வார்த்தையை அவர்களால் மொழிய ஆரம்பத்தில் கடுமையாக இருந்தது. அதனால் அவர்களுக்கு கடுமையாக இருந்த எழுத்துக்களை தாம் பேசிய தாய் மொழியின் எழுத்துக்களை கொண்டு மொழிந்தார்கள்.

இதை எப்படி அறிந்து கொள்வது என்றால் மேலே குறிப்பிட்டவாறு அரபு தீப கற்பகத்தில் வாழும் அரபிகள் உதாரணமாக சவூதி அரேபியா, எமன், ஷாமில் வாழும் அரபிகள் அரபு மொழி எழுத்துக்களை உரிய முறைப்படி மொழிந்து பேசுவார்கள்.

ஆனால் மஃரிப். (மொரோக்கோ‍), அல்ஜீரியா, மொரித்தானியா போன்ற பகுதிகளில் அரபு பேசும் போது பிரான்ஸ் மொழியை அரபு மொழியின் உச்சரிப்பிலும் சில வாசகங்களை அரபுடன் சேர்த்து பேசுவதையும் பார்க்கலாம்.

இன்றும் எகிப்தில் உள்ளவர்கள் ஆரம்பத்தில் கிபிதியா என்ற மொழியை பேசியதன் காரணமாக ஜீம் (ج) எனும் வார்த்தையை மொழிய முடியாத காரணத்தால் (ج) ஜீமுக்கு பதிலாக (ga‍/ஙா‍) என்ற சத்தத்தையும் (ق) என்ற எழுத்துக்கு (அ‍/أ) என்ற சத்தத்தையும் கொடுத்து பேசுவதை நாம் பார்க்கலாம்.

நாம் மேலே அரபு மொழி சம்பந்தமான ஒரு சில விடயங்களை பார்த்தோம்.

இப்போது அரபு மொழி அரபிய தீபகற்பத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தாலும், பின்னர் அதன் தலைமை இடம் அரபு மொழி இல்லாத சில இடங்களுக்கும் மாற்றப்பட்டது. அதில் மிகவும் முக்கியமான ஒரு இடம்தான் ஈராக்கின் தலைநகரம் பக்தாத் அங்குதான் பாரசீக மொழியில் உள்ள மருத்துவம், வானவியல் சம்பந்தமான மற்றும் பலவிதமான புத்தகங்கள் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

அன்றைய காலத்தில் அரபு மொழி வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்றால் நாம் இன்று பேசும்போது ஆங்கில வார்த்தை பயன்படுத்துவதன் மூலம் எப்படி பெருமைப் படுவோமோ அதே போல் அன்றைய காலத்தில் அரபு வார்த்தையை பயன்படுத்தினார்கள்.

பக்தாதின் வீழ்ச்சிக்கு பிறகு அரபு மொழியின் பயன்பாடும் குறைந்து அதன் பின்னர் அரபு மொழிக்கு அதிக முக்கியத்துவத்தை யாரும் கொடுக்கவில்லை.

அதன் பிறகு 1932/12/13 திகதி எகிப்தின் தலைநகரம் கெய்ரோவில் அரபு மொழி ஒன்றியம் அரசர் முதலாம் புவாத்தின் ஆட்சி காலத்தில் 20 பேர் கொண்ட குழு ஒன்று அமைத்து 1934 ஆண்டு தொடங்கப்பட்டது.

அன்று துவங்கிய அரபு மொழி ஒன்றியம் இன்று வரை தனது சேவையை அரபு உலகுக்கு செய்து வருகிறது. அதன் இன்றைய தலைவராக கலாநிதி ஹஸன் மஹ்மூத் அப்துல் லத்தீப் அஷ் ஷாஃபி அவர்கள் 2012 பெப்ரவரி மாதத்தில் இருந்து இன்று வரை இருக்கிறார்.

இந்த அரபு மொழி ஒன்றியம் 1934 ஆண்டில் இருந்து உலகில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிக்களுக்கு ஆங்கில மொழி வார்த்தைகளை அரபு மொழி பெயர்ப்பு செய்வதிலும், ஒவ்வொரு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட வார்த்தையை அகராதியில் இணைத்து இன்று வரை வெளியிட்டு வருகிறது.

எகிப்தில் இருக்கின்ற அரபு மொழி ஒன்றியம் ஆரம்பித்த சில காலத்திற்கு பிறகு மீண்டும் பக்தாத், திமஸ்க்கிலும் அரபு மொழி ஒன்றியம் ஆரபிக்கப்பட்டது. ஆனால் இந்த அரபு மொழி ஒன்றியங்களை விட எகிப்தில் உள்ள அரபு மொழி ஒன்றியம் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது நாங்கள் நமது கட்டுரையின் தலைப்பை பார்ப்போம் !

நாம் மேலே எகிப்தில் உள்ளவர்கள் அரபு மொழியில் இரண்டு எழுத்துக்களை அதற்குறிய உச்சரிப்பை கொடுக்காமல் பேசுகின்றார்கள் என்று பார்த்தோம். அதில் காஃப் (ق) என்ற வார்த்தையை (أ/அ) என்ற உச்சரிப்போடு பயன்படுத்துவார்கள். அதனை அவர்கள் பொது இடங்களில் மற்றும் மொழி பெயர்க்கும் பொழுது பயன்படுத்த மாட்டார்கள்.

ஆனால் ஜீம் (ج) என்ற வார்த்தையை (ஙா/ga) என்ற உச்சரிப்போடு பயன்படுத்துவார்கள் என்று பார்த்தோம். ஆனால் இந்த வார்த்தையை பொது இடங்களிலும், ஆங்கில மொழி பெயர்ப்புக்களிலும், அரபு இல்லாத அஜமி வார்த்தையை அரபுக்கு மொழி பெயர்ப்பு செய்யும் போதும், அரபு பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும்போது பயன்படுத்தினார்கள் அதனை பற்றி இப்போது விரிவாக பார்ப்போம்.

உதாரணமாக நமது அன்றாட வாழ்வில் கமால் அப்து நாசர், கமாழுத்தீன் என்று சிலரின் பெயர்களை பார்த்திருக்கிறோம் அல்லவா இந்த பெயர்களின் அடிப்படையை நோக்கினால் ஒரு பிரபலமான ஒருவரின் பெயரை குறிக்கின்றது.

முதல் உதாரணம், கமால் அப்து நாசர் என்பவர் எகிப்தின் முதல் இராணுவ ஆட்சியின் முதல் தலைவராக விளங்கினார், இவரின் ஆளுமைப் பண்புகளைப் பற்றி வெளிவந்த பத்திரிகைகளை வாசித்து சிலர் தனது பிள்ளைகளுக்கு கமால் அப்து நாசர் என்று பெயர் சூட்டினார்கள். ஆனால் அவரின் பெயர் கமால் அல்ல ஜமால் அப்து நாசர் என்பதுதான் உண்மை.

எப்படி ஜமால் கமாலாக மாறியது என்றால் அந்த காலத்தில் இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிகைகள் வெளி நாட்டு செய்திகளை ஆங்கில பத்திரிகைகள் மூலம் பெற்று, தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததனால் ஏற்பட்டது.

அது எவ்வாறு என்றால்?

அரபில் இருக்கும் ஜமால் (جمال) என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் மாற்றும் போது (gamal) என்று எழுதுவார்கள். அதனை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றும் போது கமால் என்று மாற்றப்படுவதனால் தான் ஜமால் அப்து நாசர் இன்று வரை கமால் அப்து நாசர் என்று அழைக்கப்படுகிறது.

அதே போலதான் ஜமாலுத்தீன் எனும் வார்த்தையை கமாலுத்தின் என்றும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இரண்டாம் உதாரணம், அரபு அல்லாத ஊர்கள், நாடுகள் மொழியப்படும் விதம் அரபில் ஒரு ஊரை மாற்றுவதாக இருந்தால் முதலில் அதனை ஆங்கிலத்தில் எழுதுவார்கள்.

உதாரணமாக காலி மாவட்டத்தை எடுத்து கொள்ளலாம் அதனை ஆங்கிலத்தில் எழுதும்போது Galle என்று வந்தால் (قالي/كالي) என்று எழுதாமல் ‍(ج) ஜீம் என்பது (ஙா/ga) மொழியப்படுவதனால் இவ்வாறு எழுதப்பட்டிருக்கின்றது‍. (جالي).

அதுமட்டுமின்றி நாம் அரபி அல்லாத ஊர்களை அரபுக்கு மாற்றும் போது இதைதான் பயன்படுத்தி எழுத வேண்டும் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

எனது இந்த ஆக்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்று இறைவனை வேண்டியவனாக முடித்துக் கொள்கிறேன்.

அலாப்தீன் அப்துல் ஹலீம்
அல் -அஸ்ஹர் இறையியற் பீடம் ,
கெய்ரொ , எகிப்து.

கண்ணியமிக்க நண்பர்களுக்கு, அரபு மொழி சம்பந்தமான ஒரு ஆய்வு கட்டுரையை உங்களுடன் பகிர்வதன் மூலம் சந்தோஷம் அடைகின்றேன். அரபு மொழி என்பது இவ்வுலகின் பழமை வாய்ந்த 10 மொழிகளில் ஒன்றாகவும், இன்னும் இன்றைய கணக்கெடுப்பின்…

கண்ணியமிக்க நண்பர்களுக்கு, அரபு மொழி சம்பந்தமான ஒரு ஆய்வு கட்டுரையை உங்களுடன் பகிர்வதன் மூலம் சந்தோஷம் அடைகின்றேன். அரபு மொழி என்பது இவ்வுலகின் பழமை வாய்ந்த 10 மொழிகளில் ஒன்றாகவும், இன்னும் இன்றைய கணக்கெடுப்பின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *