Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தங்கத்தையே பாதுகாக்க திராணியற்ற முஸ்லிம் சமூகம் வைரத்தை தேடியலையலாமா? 

தங்கத்தையே பாதுகாக்க திராணியற்ற முஸ்லிம் சமூகம் வைரத்தை தேடியலையலாமா?

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நவமணி என்பது வெறுமணமே ஒரு பத்திரிகை மட்டுமல்ல. முஸ்லிங்களின் அடையாளம். இன்று சஹராத்தல் நிலைக்கு வந்திருப்பதில் மிக உச்சகட்ட மனஉளைச்சலில் இருக்கின்றது முஸ்லிம் பத்திரிக்கை உலகம். இந்த பத்திரிகை உருவாக்கப்பட்டு 25 வது ஆண்டை கொண்டாட உள்ள தருவாயில் மூடுவிழாவும் காண உள்ளது என்பதை அறிகின்ற போது கவலை தேங்கி நிற்கிறது.

என்.எம். அமீன் (Ameen Nm) எனும் மூத்த பத்திரிகைக்காரர் தலைமையில் மிக புலமைவாய்ந்த ஆசிரியர் குழாமின் உழைப்பில் சிறப்பாக இயங்கிவந்த இந்த பத்திரிகை இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டு பொருளாதார கஷ்டத்தினால் இந்த நிலைக்கு வந்திருக்க காரணம் நான் உட்பட ஒட்டுமொத்த இலங்கை தமிழ் பேசும் சமூகமே. அதிலும் குறிப்பாக முஸ்லிங்கள். இலங்கை தாய்திருநாட்டின் பொருளாதார ஜாம்பவான்கள் அதிகமானோர் முஸ்லிங்களாக இருக்கும் இந்த நாட்டில் முஸ்லிங்களின் குரலாக இருந்த நவமணிக்கு விளம்பரம் கிடைக்கவில்லை என்பது நம்பமுடியா உண்மையாக இருக்கிறது.

அதி கூடுதலான திறமையான ஊடகவியலாளர்களை இந்த நாட்டுக்கும், உலகுக்கும் அடையாளம் காட்டிய பெருமையும் நவமணிக்கு இருக்கிறது. முஸ்லிங்களின் குரல் நசுக்கப்படும் போதெல்லாம் முஸ்லிங்களுக்கான தனியான ஊடகம் தேவை என மூடிதிறந்த சோடாப் போத்தல் போல பொங்கியெழும் எமது நாட்டு முஸ்லிங்களுக்கு கையிலிருக்கும் தங்கத்தை பாதுகாக்க முடியாமல் வைரத்துக்கு ஆசை இருப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தங்கத்தையே பாதுகாக்க திராணியற்ற முஸ்லிம் சமூகம் வைரத்தை தேடியலையலாமா?

இந்த நாட்டின் முஸ்லிங்களின் குரலாக ஒலித்த ஒரு ஊடகமே நவமணி. அதையும் தாண்டி தமிழ் மக்களின், சிங்கள மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களின் கௌரவத்தையும் எப்போதும் காத்தே வந்துள்ளது. சில தமிழ் ஊடகங்களுக்கு இனவாத முத்திரை குத்தப்பட்ட காலத்திலும் கூட நடுநிலை தவறாது பயணித்த நவமணி இலங்கையின் சொத்துக்களில் ஒன்று.

எனது கௌரவத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே! மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களே! அரசியல் பிரமுகர்களே! சமூக நல ஆர்வலர்களே! வர்த்தக ஜாம்பவான்களே!

இனி நீங்கள்தான் மனது வைக்க வேண்டும். தினசரி வந்துகொண்டிருந்த நவமணி நாளேடு வாராந்த பத்திரிகையாகி இப்போது அதுவும் இல்லாமல் போகும் நிலையில் உள்ளது. உங்களின் விளம்பரங்களை வழங்க முழுத்தகுதியும் நவமணிக்கு இருக்கிறது. நாடுமுழுவதும் நவமணியை தேடிப்படிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். நவமணிக்கு என்றோரு கௌரவம் எப்போதும் பத்திரிக்கை அரங்கில் இருக்கிறது. மனது வைத்து விளம்பரங்களை வழங்க முன்வாருங்கள். எவ்வித கொடுப்பனவுகளுமில்லாமல் பல நூறு நிருபர்கள் செய்திகள் அனுப்பும் பத்திரிகையாக நவமணி இருந்திருக்கிறது. இது சமூகத்தின் குரல். குரலுக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்தும் இலங்கையின் மக்களுக்காக குரல்கொடுக்க ஒன்றிணைத்து கரம்கொடுப்போம். எங்களின் எண்ணங்களை நவமணியில் காண்போம்.

நூருல் ஹுதா உமர்.

நவமணி என்பது வெறுமணமே ஒரு பத்திரிகை மட்டுமல்ல. முஸ்லிங்களின் அடையாளம். இன்று சஹராத்தல் நிலைக்கு வந்திருப்பதில் மிக உச்சகட்ட மனஉளைச்சலில் இருக்கின்றது முஸ்லிம் பத்திரிக்கை உலகம். இந்த பத்திரிகை உருவாக்கப்பட்டு 25 வது ஆண்டை…

நவமணி என்பது வெறுமணமே ஒரு பத்திரிகை மட்டுமல்ல. முஸ்லிங்களின் அடையாளம். இன்று சஹராத்தல் நிலைக்கு வந்திருப்பதில் மிக உச்சகட்ட மனஉளைச்சலில் இருக்கின்றது முஸ்லிம் பத்திரிக்கை உலகம். இந்த பத்திரிகை உருவாக்கப்பட்டு 25 வது ஆண்டை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *