Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தடுப்பூசி ஒத்துழைப்பு குறித்த முதலாவது சர்வதேச மன்றத்தில் வெளிநாட்டு அமைச்சர் அவர்களின் அறிக்கை - Youth Ceylon

தடுப்பூசி ஒத்துழைப்பு குறித்த முதலாவது சர்வதேச மன்றத்தில் வெளிநாட்டு அமைச்சர் அவர்களின் அறிக்கை

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தடுப்பூசி ஒத்துழைப்பு குறித்த முதலாவது சர்வதேச மன்றத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ. வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அறிக்கை

2021 ஆகஸ்ட் 05 வௌியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கையில்,

கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதற்கும் தடுப்பூசி மட்டுமே நிலையான தீர்வாக இருக்கும் என்ற வகையில் சரியான நேரத்திலான சந்திப்பாக அமையும் தடுப்பூசி ஒத்துழைப்புக்கான முதலாவது சர்வதேச மன்றத்தில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இது சம்பந்தமாக, மே 2021 இல் உலகளாவிய சுகாதார உச்சிமாநாட்டில் அதிமேதகு ஜனாதிபதி ஸி ஜின்பிங் முன்வைத்த முக்கியமான முன்மொழிவுகளைத் தொடர்ந்து இன்றைய மன்றத்தைக் கூட்டிய எமது நெருங்கிய நட்பு நாடான மக்கள் சீனக் குடியரசிற்கு நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

தொற்றுநோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்காக ஆரம்பகாலத்திலான தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இலங்கை, ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் நேரடி வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் 2021 பெப்ரவரி மாதத்தில் தனது தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியது.

கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 500,000 க்கும் அதிகமான டோஸ்கள் வழங்கப்பட்டுள்ள வகையில், தடுப்பூசிகள் ஏற்றப்படும் மிக உயர்ந்த நாளாந்த சராசரியாக இலங்கை தனது தடுப்பூசித் திட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.

2021 ஆகஸ்ட் 04ஆந் திகதிய நிலவரப்படி, 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 91.2% ஆனோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதுடன், 2021 செப்டம்பர் மாதத்துக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இது சம்பந்தமாக, எமது தடுப்பூசி இயக்கத்தின் வெற்றிக்கு மகத்தான வகையில் பங்களிப்புச் செய்த சீனாவின் 8 மில்லியனுக்கும் அதிகமான சினோபார்ம் தடுப்பூசிகள் மற்றும் 2.7 மில்லியன் தடுப்பூசிகளின் தாராளமான பங்களிப்பு மற்றும் சுகாதார உபகரணங்களை சரியான நேரத்தில் வழங்கியமைக்காக எமது இருதரப்பு மற்றும் சர்வதேசப் பங்காளிகளுக்கு, குறிப்பாக சீனாவிற்கு இலங்கை உண்மையாக நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றது.

கோவிட்-19 தொற்றுநோயின் நிலையான தோல்வியை உறுதி செய்ய சர்வதேச ஒத்துழைப்பும் ஒற்றுமையும் அவசியமாவதுடன், அபிவிருத்தியடைந்துவரும் வெவ்வேறு வகைகளினாலான தோற்றத்திற்கான அபாயங்கள் காரணமாக உலகம் எதிர்கொள்ளும் முன்னோடியில்லாத சவால்களை சமாளிப்பதற்காக உலக சுகாதார தாபனம் மற்றும் ஐ.நா. வுக்கு எமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதை உறுதிப்படுத்தல் வேண்டும்.

கோவிட்-19 தடுப்பூசிகளை அனைவரும் சமமாக அணுகிக் கொள்வதற்காக தடுப்பூசிகளின் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் கூட்டு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகிவிட்டது. இருப்பினும், கடுமையான வழங்கல் மற்றும் வளக் கட்டுப்பாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் பல நாடுகளின் தடுப்பூசி இயக்கங்களைப் பாதித்துள்ளன.

அரச துறை, தனியார் துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மக்கள் ஆகிய எமது சமுதாயங்களின் அனைத்து துறைகளுடனும் நெருக்கமான ஒத்துழைப்பதால் வெற்றி பலப்படுத்தப்படும். கோவிட்-19 அலையில் இருந்து எந்த நாடும் பாதுகாக்கப்படாததால் எமது ஒத்துழைப்பு அவசியமாகும்.

எனவே

  1. அனைவருக்கும்‌ பாதுகாப்பான, பயனுள்ள, தரமான மற்றும்‌ மலிவு விலையிலான அத்தியாவசிய மருந்துகள்‌ மற்றும்‌ தடுப்பூசிகள்‌ கிடைப்பதை உறுதி செய்வதற்காக. நிலையான அபிவிருத்தி இலக்குகளின்‌ 3ஆம்‌ இலக்குக்கு ஏற்ப அனைவருக்கும்‌ கோவிட்‌-19 தடுப்பூசிகளின்‌ இருப்பு மற்றும்‌ மலிவு வசதிகளை எளிதாக்குதல்‌.
  2. கொவெக்ஸ்‌ பொறிமுறையை வலுப்படுத்தி, இந்த செயன்முறையை விரைவுபடுத்துவதில்‌ பங்கேற்பதற்காக தடுப்பூசிகளைத்‌ தயாரிக்கும்‌ நாடுகளை ஊக்குவித்தல்‌.
  3. கோவிட்‌ வைரஸிற்கு எதிராக ஆரோக்கியம்‌ மற்றும்‌ பாதுகாப்பை அடைவதற்காக தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும்‌ திறன்‌ கொண்ட நாடுகளால்‌ தடுப்பூசி உற்பத்தியை எளிதாக்குதல்‌.
  4. தடுப்பூசி உற்பத்தியின்‌ தரத்தைப்‌ பராமரிப்பதற்காக, தயாரிப்பு மேம்பாடு குறித்த மேலதிக ஆராய்ச்சியை ஊக்குவித்தல்‌. ஆகியவற்றுக்கான தனது அழைப்பை இலங்கை மீண்டும்‌ வலியுறுத்த விரும்புகின்றது.

கோவிட்‌-19 இலிருந்து மீளும்‌ திட்டத்தில்‌ எமது மக்களுக்கும்‌ உலகெங்கிலும்‌ உள்ள மக்களுக்கும்‌ அளிக்கப்பட்ட மகத்தான ஆதரவுகளுக்காக சீனாவுக்கு எமது நன்றிகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கின்றோம்‌.

எமது அனைத்து மக்களினதும்‌ செழிப்புக்காக இந்த இலக்குகளை அடைந்து கொள்வதில்‌ கூட்டு அறிக்கையில்‌ இலங்கை உறுதியாக இருப்பதுடன்‌, அனைத்து பங்காளிகளுடனும்‌ இணைந்து செயற்படுகின்றது.

தடுப்பூசி ஒத்துழைப்பு குறித்த முதலாவது சர்வதேச மன்றத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ. வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அறிக்கை 2021 ஆகஸ்ட் 05 வௌியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில்…

தடுப்பூசி ஒத்துழைப்பு குறித்த முதலாவது சர்வதேச மன்றத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ. வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அறிக்கை 2021 ஆகஸ்ட் 05 வௌியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில்…